[ சனிக்கிழமை, 08 நவம்பர் 2014, 11:29.43 PM GMT ]
தேசிய சமாதான செயலகத்தின் ஏற்பாட்டில் இந்த செயலமர்வு இன்று சனிக்கிழமை காலை தேசிய சமாதான செயலகத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் கலாநிதி ரி.ஜயசிங்கம் தலைமையில் நடைபெற்றது.
இந்த செயலமர்வில் தேசிய சமாதான செயலகத்தின் தலைவர் கலாநிதி ஜெகான் பெரேரா,கிழக்கு மாகாண இணைப்பாளர் தயாபரன், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிக்சல் ஜெ.சிசன் மற்றும் தூதரக அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
இதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மூன்று இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புகளின் உறுப்பினர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், மும்மதங்களின் மதத்தலைவர்களும் கலந்துகொண்டனர்.
இதன்போது சமூகங்களிடையே சகவாழ்வினையும் நல்லிணக்கத்தினையும் கட்டியெழுப்பும் வகையிலான கருத்துரைகள் வழங்கப்பட்டன.
இலங்கை அரசாங்கத்தின் கற்றபாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளினை நடைமுறைப்படுத்துவதன் மூலம் சமாதானத்தினை கட்டியெழுப்புவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
மதங்களிடையே ஏற்படும் கசப்புணர்வுகளை இல்லாமல் செய்து ஒன்றுபட்ட மக்களாக வாழ்வதற்கான சமூக மாற்றம் குறித்தான கருத்துகளும் இங்கு பரிமாறப்பட்டன.
http://www.tamilwin.com/show-RUmszBTcKXfxz.html
அம்பாறை சிவன் கோயில் காணியை அபகரிப்பை அனுமதிக்க முடியாது: பொதுமக்கள் சூளுரை
[ சனிக்கிழமை, 08 நவம்பர் 2014, 04:14.30 PM GMT ]
சம்மாந்துறை வளத்தாப்பிட்டி என்ற இடத்திலேயே இந்த அபகரிப்பு முனைப்பு மேற்கொள்ளப்படுகிறது.
இராணுவத்தின் உதவியுடன் இலங்கை அகழ்வாராட்சி திணைக்களத்தினர் காணியை அபகரிக்க முயல்வதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில், பொதுமக்கள் முறைப்பாடுகளை செய்துள்ளனர்.
இதனையடுத்து கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.ராஜேஸ்வரன், இராணுவ வீரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்போது சிவன் கோயில் நிலத்தை அபகரிக்க தமிழ் மக்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
இது அகழ்வாராட்சிக்கான நிலம் என்ற அடிப்படையிலேயே கொழும்பு அரசாங்கம் இந்த நிலத்தை அபகரிக்க முனைவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே அதற்கு தாம் அனுமதிக்கப்போவதில்லை என்று அவர்கள் சூளுரைத்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszBTcKXfxy.html
Geen opmerkingen:
Een reactie posten