சில நாட்களுக்கு முன் இளைஞர் ஒருவரைக் கையால் பலமாகத் தாக்கி மிகப் பிரசித்தமடைந்த ‘வாரியபொல யுவதி’ என்றழைக்கப் படும் திலினி இமல்கா மீண்டும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.
குறித்த யுவதி குருநாகல் பொலிஸ் நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை செய்துள்ள ஒரு முறைப்பாட்டில் தனது கையைப் பிடித்து ஒரு இளைஞன் இழுத்ததாக தெரிவித்துள்ளார். தான் குருநாகல் பஸ் நிலையத்தில் கோனகம விலிருந்து வந்த பஸ் வண்டி ஒன்றில் இருந்து இறங்கிய போது இச்சம்பவம் நடந்ததாகவும் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten