தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 19 november 2014

மட்டு. மயிலம்பாவெளி விபுலானந்தா வித்தியாலய புதிய காவலாளியை மறித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!

இலங்கை இந்திய படையினர் கூட்டாக இணைந்து போர் பயிற்சி!
[ புதன்கிழமை, 19 நவம்பர் 2014, 09:39.15 AM GMT ]
இலங்கை இந்திய படையினர் கூட்டாக இணைந்து போர் பயிற்சியில் ஈடுபட உள்ளனர்.
இலங்கை இந்திய நாடுகளுக்கு இடையில் நட்புறவை வளர்க்கும் நோக்கில் போர் பயிற்சி நடத்தப்பட உள்ளது.
“மித்ர சக்தி” என இந்தப் போர் பயிற்சி நடவடிக்கைகளுக்கு பெயரிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் 23ம் திகதி முதல் 30ம் திகதி வரையில் இந்த போர்  பயிற்சி மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டையில் நடைபெறவுள்ளது.
இந்த போர் பயிற்சியில் 40 இந்திய படைவீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
கடற்படை, வான்படை மற்றும் இராணுவத்தைச் சேர்ந்த 200 இலங்கை படையினர் இந்த பயிற்சியில் பங்கேற்க உள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszBSdKYiq3.html
மஹிந்தவை பாதுகாக்கும் தேவை எமக்கில்லை: அத்துரலியே ரத்ன தேரர்
[ புதன்கிழமை, 19 நவம்பர் 2014, 09:39.51 AM GMT ]
நாட்டில் சட்டமோ, நீதித்துறை சுதந்திரமோ இல்லை என தூய்மையான நாளை அமைப்பின் ஏற்பாட்டாளரான ஜாதிக ஹெல உறுமய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற பேரணி ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். 
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டின் சட்டத்திற்கு அமைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அந்த பதவிக்கு மூன்றாவது முறையாக போட்டியிட முடியாது.
நீதிமன்றத்தின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார்.
அரசாங்கத்தில் இருக்கும் மிகவும் தேசப்பற்றாளர்கள் எனக் கூறும் நபர்கள். மேற்குலக அழுத்தங்கள் இருக்கின்றது. இதனால் மகிந்தவை எப்படியாவது வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கூறுகின்றனர்.
இந்த விலங்குகளும், புரட்சியாளர்கள் என்று கூறிக்கொள்ளும் துரைமாரும் இதனை எப்படி கூறுகின்றனர் என்பது எனக்கு புரியவில்லை.
மேற்குலக அழுத்தங்கள் என்பதால் மஹிந்தவை பாதுகாக்க வேண்டுமா?. எந்த காரணங்களுக்காகவும் மஹிந்தவை பாதுகாக்கும் தேவை எமக்கில்லை.
பயங்கரவாதத்தை தோற்கடிப்பது என்பதும் நிறைவேற்று அதிகாரத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பது என்பது இரு வேறான விடயங்கள் எனவும் அத்துரலியே ரத்ன தேரர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSdKYiq4.html

மட்டு. மயிலம்பாவெளி விபுலானந்தா வித்தியாலய புதிய காவலாளியை மறித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!
[ புதன்கிழமை, 19 நவம்பர் 2014, 09:49.19 AM GMT ]
மட்டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட மயிலம்பாவெளி விபுலானந்தா வித்தியாலத்திற்கு நியமிக்கப்பட்ட காவலாளியை பாடசாலைக்கு உள்நுழைய விடாது கிராமத்தவர்கள் தடுத்து போராட்டம் நடத்திய சம்பவம் இன்று புதன்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.
கிழக்கு மாகாணசபையினால் நேற்று செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்ட நியமனத்தின் கீழ் ஏறாவூர் பிரதேசத்தினை சேர்ந்த ஒருவருக்கு மயிலம்பாவெளி விபுலானந்தா வித்தியாலத்திற்கு நியமனம் வழங்கப்பட்டதை கண்டித்தும் தமது பிரதேசத்தினை சேர்ந்தவர் ஒருவரை நியமிக்குமாறும் வலியுறுத்தியே கடமைக்கு வந்தவர் தடுக்கப்பட்டதாக கிராமத்தவர்கள் தெரிவித்தனர்.
மயிலம்பாவெளி விபுலானந்தா வித்தியாலத்தின் பழைய மாணவர் சங்கம், கிராம அபிவிருத்தி சங்கம், பாடசாலை அபிவிருத்தி சங்கம் என்பன இணைந்து இணைந்து இந்த போராட்டத்தினை நடத்தியது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த போராட்டத்தில் ஈடுபட்டோர்,
தமது பாடசாலைக்கு காவலாளி மற்றும் பாடசாலை சிற்றூழியர்களை நியமிக்குமாறும் அதற்காக இருவரின் பெயர்களை அதிபர் ஊடாக பரிந்துரை செய்யப்பட்டு கடந்த காலத்தில் கிழக்கு மாகாணசபைக்கு அனுப்பி வைத்திருந்தோம்.
அது தொடர்பிழல் எதுவித பதிலும் இதுவரையில் அனுப்பப்படாத நிலையில் ஏறாவூரை சேர்ந்த முஸ்லிம் நபர் ஒருவரை எமது பாடசாலைக்கு காவலாளியாக நியமித்துள்ளனர்.
எமது பாடசாலைக்கு எமது பகுதியை சேர்ந்த ஒருவரையே காவலாளியாக நியமிக்கவேண்டும்.அதுவரையில் இவ்வாறான நியமனங்கள் பெற்று வருவோரை பாடசாலைக்குள் செல்ல அனுமதிக்கமாட்டோம் எனவும் தெரிவித்தனர்.

Geen opmerkingen:

Een reactie posten