[ புதன்கிழமை, 19 நவம்பர் 2014, 08:00.40 AM GMT ]
இக்கட்சியின் தலைவர் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து சேவையாற்றி வந்தவர்.
இவர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராகவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சிரேஷ்ட உப தலைவராகவும் கடமையாற்றி வந்தவராவார்.
இந்த கட்சியின் பொது செயலாளராக கட்சியின் தலைவர் எம்.எஸ். செல்லசாமி அவர்களின் மனைவி திருமதி ஜ.எம்.வேலம்மாள் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
இக்கட்சியின் தலைவர் ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கையில்,
மலையகத்தில் மலையக மக்களுக்கு ஒரு மறுமலர்ச்சி ஏற்பட வேண்டும் என்பதற்காகவே இந்த கட்சியை நான் ஆரம்பித்துள்ளேன்.
அத்தோடு மலையக மக்களுக்கு லயன் குடியிருப்புகள் ஒழிக்கப்பட்டு தனி வீடுகள் அமைக்கப்பட வேண்டும் என்பதே இந்த கட்சியின் கோரிக்கையாகும்.
தான் 1939 ஆண்டிலிருந்து மலையக மக்களுக்காக பல போராட்டங்களை நடாத்தியுள்ளேன்.
இன்று மலையகத்தில் பல கட்சிகள் இருந்தாலும் மலையக மக்களுக்கு அடிப்படை வசதிகளை எந்த கட்சிகளும் செய்துக் கொடுக்கவில்லை என அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszBSdKYiqy.html
ஜனாதிபதி தேர்தல் நடத்துவதில் குழப்ப நிலைமை- ஜனாதிபதி மகிந்தவுக்கு மன அழுத்தம்: சிங்கள இணையத்தளம்
[ புதன்கிழமை, 19 நவம்பர் 2014, 08:31.13 AM GMT ]
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் தற்போதைய சூழ்நிலையை கருத்திற் கொண்டு தேர்தலை நடத்த வேண்டாம் என அமைச்சர்கள் கோரி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேன தேர்தலை நடத்த வேண்டாம் என ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
சிரேஸ்ட அமைச்சர்கள் பலரும் இவ்வாறு ஜனாதிபதியிடம் கோரியுள்ளனர்.
தேர்தலை நடத்துவதா இல்லையா என்பதில் அரசாங்கம் பிரச்சினையை எதிர்நோக்கி வருகின்றது.
ஜனாதிபதி தேர்தலை நடாத்த ராஜபக்சாக்கள் விரும்பிய போதிலும், அரசாங்கத்தின் முக்கியமானவர்கள் விரும்பவில்லை என அசாத் சாலி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மகிந்தவுக்கு மன அழுத்தம்: சிங்கள இணையத்தளம்
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு மன அழுத்தம் ஏற்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதித் தேர்தலை நடத்த அவர் அஞ்சுவதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தலை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அறிவிப்பது தொடர்பான அறிவிப்பை ஒளிப்பதிவு செய்ய தேசிய ரூபாவாஹினி மற்றும் சுயாதீன தொலைக்காட்சி ஆகியவற்றின் ஊடகவியலாளர்கள் உட்பட தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் குழுவினர் நேற்று அலரி மாளிகைக்கு சென்றிருந்தனர்.
எனினும் அவர்கள் அங்கிருந்து திருப்பி அனுப்பட்டதாக அரச தொலைக்காட்சிகளின் உட்தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதியின் அறிவிப்பை ஒளிப்பதிவு செய்ய,மிக நீண்ட நேரம் இந்த இரு அரச தொலைக்காட்சிகளின் தயாரிப்பாளர்கள் குழுவும் காத்திருந்தனர்.
இறுதியில் தான் சுகவீனமுற்று இருப்பதாகவும் பின்னர் பதிவு செய்து கொள்ளலாம் எனவும் ஜனாதிபதியே அவர்களை திருப்பி அனுப்பியுள்ளார்.
மகிந்த ராஜபக்ஷவின் இருப்புக்காக செயற்பட்டு வந்த சிங்கள இனவாத கொள்கைகளை கொண்ட பிரதான கட்சியான ஜாதிக ஹெல உறுமய அரசாங்கத்தில் இருந்து விலகி சென்றது.
மகிந்தவுக்கு மூன்றாவது முறையாக முடியாது என்ற தலைப்பில் ஜே.வி.பி கொழும்பில் நேற்று நடத்திய ஆர்ப்பாட்ட பேரணியில் அதிக எண்ணிக்கையில் மக்கள் கலந்து கொண்டனர்.
இவையெல்லாம் அரசாங்கத்தை கலக்கமடைய செய்துள்ளதாக அந்த இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBSdKYiq0.html
ஜனாதிபதியை எண்ணி வருந்துகிறேன்!– தேசியப்பட்டியல் பா.உ. ரஜீவ விஜேசிங்க
[ புதன்கிழமை, 19 நவம்பர் 2014, 08:42.51 AM GMT ]
நல்லாட்சியை வலுப்படுத்துதல் மற்றும் ஜனநாயகம் தொடர்பாக சில மாதங்களுக்கு முன்னர் அரசாங்கத்திற்கு யோசனை ஒன்றை அனுப்பியதாக பேராசிரியரான விஜேசிங்க குறிப்பிட்டுள்ளார்.
தனது யோசனைக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உரிய பதிலை வழங்க தவறினால், மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளிக்க போவதில்லை என அவர் உறுதியாக கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எனக்கு ஜனாதிபதிக்கும் எந்த பிரச்சினைகளும் இல்லை. அவர் நல்ல மனிதர். ஆனால் அவரை சுற்றியிருக்கும் கொத்து கொத்தான திருடர்களே பிரச்சினைக்குரியவர்கள்.
ஜனாதிபதியை நினைத்து நான் வருந்துகிறேன் எனவும் விஜேசிங்க குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை எதிர்க்கட்சிக்கு மாறவிருப்பதாக பரவி வரும் வதந்திகளையும் அவர் மறுத்துள்ளார்.
கட்சி தாவ உள்ளதாக கூறப்படுவதில் உண்மையில்லை. அது முட்டாள்தனமானது. நான் எனது நிலைப்பாடு குறித்து ஏற்கனவே தெளிவான முடிவை எடுத்து விட்டேன். அதில் மாற்றங்கள் இல்லை எனவும் அவர் தெரிவி்துள்ளார்.
ரஜீவ விஜேசிங்க கடந்த சில வருடங்களாக வெளிவிவகார அமைச்சும் மற்றும் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸின் செயற்பாடுகள் குறித்து கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszBSdKYiq1.html
ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தில் விமுக்தி குமாரதுங்க!
[ புதன்கிழமை, 19 நவம்பர் 2014, 09:21.09 AM GMT ]
லண்டனில் இருக்கும் விமுக்தி குமாரதுங்க ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக இலங்கை வரவுள்ளதாக நம்பிக்கையான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விமுக்தி குமாரதுங்க, எதிர்க்கட்சிகளின் தேர்தல் பிரசார மேடையில் முக்கிய பாத்திரமாக விளங்குவார் என தெரிவிக்கப்படுகிறது.
அரசியல் காரணாக தனது தந்தை கொல்லப்பட்டமை, தாய் பல பிரச்சினைகளை எதிர்நோக்கியமை, நாட்டின் இன்றைய ஆட்சியாளர்கள் சிரமங்களை அனுபவித்து வருகின்றமை ஆகிய காரணங்களினால் விமுக்தி அரசியலில் ஈடுபடுவதை விரும்பவில்லை எனவும் தனது தாய் மீண்டும் நேரடியான அரசியலுக்கு வருவதை அவர் கடும் எதிர்ப்பை கொண்டிருப்பதாகவும் இதற்கு முன்னர் செய்திகள் வெளியாகி இருந்தன.
எனினும், நாட்டின் இன்றைய மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தை தோற்கடிப்பதற்காக பண்டாரநாயக்க குடும்பம் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்க தயார் என சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்திருந்ததுடன் அதற்கான ஓரளவு செயற்பாட்டு ரீதியான பங்களிப்பை வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszBSdKYiq2.html
இலங்கை இந்திய படையினர் கூட்டாக இணைந்து போர் பயிற்சி!
[ புதன்கிழமை, 19 நவம்பர் 2014, 09:39.15 AM GMT ]
இலங்கை இந்திய நாடுகளுக்கு இடையில் நட்புறவை வளர்க்கும் நோக்கில் போர் பயிற்சி நடத்தப்பட உள்ளது.
“மித்ர சக்தி” என இந்தப் போர் பயிற்சி நடவடிக்கைகளுக்கு பெயரிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் 23ம் திகதி முதல் 30ம் திகதி வரையில் இந்த போர் பயிற்சி மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டையில் நடைபெறவுள்ளது.
இந்த போர் பயிற்சியில் 40 இந்திய படைவீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
கடற்படை, வான்படை மற்றும் இராணுவத்தைச் சேர்ந்த 200 இலங்கை படையினர் இந்த பயிற்சியில் பங்கேற்க உள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszBSdKYiq3.html
Geen opmerkingen:
Een reactie posten