மினிபஸ்ஸில் பயணம் செய்த பெண்களுடன் மதுபோதையில் தகாத முறையில் நடந்த சிப்பாய் ஒருவர் பஸ்ஸிலிருந்து இறக்கிவிடப்பட்டு எச்சரித்து விடுவிக்கப்பட்டார். இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை இரவு 7.00 மணியளவில் மானிப்பாயில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து காரைநகர் நோக்கிப் புறப்பட்ட மினி பஸ்ஸில் இராணுவ வீரர் ஒருவரும் ஏறியுள்ளார்.
இவர் பஸ்சில் இருந்த பெண்ணுடன் அங்கசேஷ்டை புரிந்த நிலையில் குறிப்பிட்ட பெண் தனது சகோதரர்களுக்கு தொலைபேசியில் சம்பவத்தை கூறியுள்ளார். பெண்ணின் சகோதரர்கள் மானிப்பாய் பூட்சிற்றிக்கு அண்மையாக குறிப்பிட்ட மினிபஸ்ஸை மறித்து அந்தச் சிப்பாயை பஸ்ஸில் இருந்து இறக்கியுள்ளார்கள். இதனைத் தொடர்ந்து அந்த இடத்தில் கூடிய பொதுமக்களால் சிப்பாய் கடுமையாக எச்சரிக்கை செய்யப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டார்.