தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 21 november 2014

நாட்டை சர்வாதிகாரத்தில் இருந்து மீட்க வேண்டும்: மைத்ரிபால

பொது வேட்பாளராக நியமித்தமைக்கு நன்றி – மைத்திரி

எதிரணியின் பொது வேட்பாளராக தம்மை நியமித்தமைக்கு நன்றி தெரிவிப்பதாக அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். குறிப்பாக சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட கட்சியின் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நகர சபை மண்டபத்தில் இடம்பெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்ட போதே இவ்வாறு கூறினார். இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஜனநாயக மக்கள் கட்சியின் அர்ஜூன ரணதுங்க மற்றும் அமைச்சர் ராஜித சேனாரத்ன, துமிந்த திஸாநாக்க உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
இதன்போது மேலும் கருத்து வௌியிட்ட அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால்

01) நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை 100 நாட்களுக்குள் இல்லாது செய்வதாகவும்,
02) அனைத்து ஊடகவியலாலர்களும், ஊடக நிறுவனங்களும் சுதந்திரமாக செயற்பட அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப் போவதாகவும்,
03) ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிப்பதாகவும்,
05) 17வது அரசியலமைப்பு திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்தி, 18வது அரசியலமைப்பு திருத்தச்சட்டத்தை இரத்து செய்யப்போவதாகவும்” குறிப்பிட்டார்.
maithripala - 011Maithripalamaithripala1Ragta
- See more at: http://www.canadamirror.com/canada/34356.html#sthash.TFjtIEOl.dpuf

எனக்கு ஜனாதிபதி செய்த கொடுமைகளை சொல்ல இது நல்லதொரு சந்தர்ப்பம் : சந்திரிக்கா

எனக்கு தற்போதைய ஜனாதிபதி பல கொடுமை செய்துள்ளார். ஒரு பெண்ணாக சொல்ல முடியாத வேதனைகளை அனுபவித்தேன்.அதனையெல்லாம் சொல்வதற்கு இது நல்லதொரு சந்தர்ப்பமாகக் கருதுகிறேன் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

புதிய நகர மண்டபத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
மீண்டும் சந்தர்ப்பம்
கொள்கின்றேன்.மீண்டும் எனது அரசியல் இல்லத்திற்கு வருவதற்கு எக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைதுள்ளது. நான் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் நீண்ட நாட்களாக கடமையாற்றி வந்துள்ளளேன்.
கடந்த 9 ஆண்டுகளுக்குப் பின்னர் நான் அரசியலுக்கு வந்ததை எண்ணி சந்தோஷமடைகின்றேன்.
மஹிந்த கட்சியிலிருந்து நீக்கினார்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆசனத்தில் அமர்த்திய போதும் அவர் எனக்கு எதிராக செயற்பட்டு என்னை கட்சியிலிருந்து தூக்கியெறிந்துள்ளார். நான் சுதந்திரக் கட்சியின் தலைமை பதவியில் இருக்கும் போது எனது பிறந்த தினத்தன்று அப்பதவியிலிருந்து என்னை நீக்கினார். ஒன்பது வருடங்கள் முடிவடைந்தும் மௌனமாக இருக்கிறேன்.
பெண்ணாக சொல்ல முடியாத வேதனைகள்
நான் கட்சியில் இருக்கும் போது ஒரு பெண்ணாக வெளியில் சொல்ல முடியாத வேதனைகளை அனுபவித்தேன். எனக்கு தற்போதைய ஜனாதிபதி பல கொடுமை செய்துள்ளார். இவ்வளவு காலம் பொறுமை காத்தும் இவர்களின் ஆட்சியில் மாற்றம் ஏற்படவில்லை. சர்வதிகாரம் மேலோங்கி காணப்படுகின்றது. நான் இவ்வளவு காலம் நிறைய விடயங்களை பொறுத்திருந்து சந்தர்ப்பம் வரும்வரை காத்திருந்தேன். அதனையெல்லாம் சொல்வதற்கு இது ஒரு நல்ல சந்தர்பம் எனக் கருதுகிறேன்.
கட்சி சீரழிக்கப்பட்டுள்ளது
கட்சியின் கொள்கைகள் மாற்றப்பட்டு கட்சி சீரழிக்கப்பட்டு கொண்டிருக்கின்றது. என்னால் பொறுமை காக்க முடியவில்லை. சுதந்திர கட்சி என்பது ஒரு ஜனநாயக கட்சியாகும். ஆனால் அராஜக குடும்ப ஆட்சி இடம்பெறுகின்றது.
வாழ்க்கை வரலாறு புத்தகம் ஒன்று எழுதி வருகின்றேன்
நான் எனது வாழ்க்கை வரலாறு புத்தகம் ஒன்று எழுதி வருகின்றேன். அதன் மூலம் உங்களுக்கு அதனை விரைவில் அறிய முடியும்.இந்த ஜனாதிபதித் தேர்தலில் நாம் நிச்சயம் வெற்றிகொள்வோம். எமது ஆட்சியன் போது இந்த நாட்டின் சிறு பான்மையினத்தவர்களுக்கும் முன்னுரிமை வழங்கி ஆட்சி நடத்துவதோடு ,நிறைவேற்று அதிகாரத்தினையும் இல்லாதொழிப்போம்.
மைத்திரிபால சிறிசேன
மைத்திரிபால சிறிசேன மக்களின் கஷ்டங்களை நன்கு அறிந்தவர். அவரின் தந்தை ஒரு விவசாயி என்பதால் அனைவரின் கஷ்டங்களையும் நன்கு அறிந்து செயலாற்றக் கூடியவர்.தற்போது உள்ள காவற்றுறையினருக்கு அவர்களின் கடமையை முறையாக செய்ய முடியாத நிலையுள்ளது. நேர்மையாக கடமையாற்றும் பொலிஸ் அதிகாரிகள் தண்டனை பெற வேண்டியுள்ளது. அதனால் அதிகாரிகள் தங்களின் கடமையை செய்ய தவறுகின்றனர். நாம் ஆட்சிக்கு வந்தால் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறாது என அவர் மேலும் தெரிவித்தார்.
பொதுவேட்பாளர்
ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராக களமிறங்குமாறு பல அனுகினர். ஆனால் அதிகார ஆசையில்லாமல் நான் அதனை ஏற்றுகொள்ளவில்லை. நான் ஆட்சியில் இருக்கும் போது 3ஆவது முறையாக போட்டியிடலாம் என கொண்டு வந்த சட்ட மூலத்தை நிராகரித்தேன். இந்நிலையில் மீண்டும் தேர்தலில் போட்டியிட்டால் சிறப்பான விடயமாகாது.
ஊழல் மோசடி
நாட்டில் இலஞ்சம், கொலை, கொள்ளை, வெள்ளை வேன், ஊழல் என தலைவிரித்தாடுகிறது. ஜனநாயகம் இல்லை. சட்டத்தின் ஆட்சி இல்லை. சர்வதிகார ஆட்சியில் ஊழலே நிறைந்து காணப்படுகின்றது. நீதி மற்றும் பொலிஸ் சேவை சுயாதீனமாக இடம்பெற வேண்டும்.
- See more at: http://www.canadamirror.com/canada/34364.html#sthash.M2Hqcmf2.dpuf

நாட்டை சர்வாதிகாரத்தில் இருந்து மீட்க வேண்டும்: மைத்ரிபால

நாட்டில் யுத்தம் ஓய்ந்துவிட்டது, அபிவிருத்தி நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன, பல்வேறு நலத்திட்டங்கள் இடம்பெறுகின்றன ஆனாலும் அவற்றைக் கொண்டு சர்வாதிகாரம் கட்டியாள்வதை அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ள பொது வேட்பாளர் மைத்ரிபால சிறிசேன நாட்டை ஜனநாயகத்தின் வழிக்குத் திருப்ப வேண்டும் என தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சராக ஐந்து வருடங்கள் பணியாற்றியிருக்கிறேன். இந்த சமூகத்துக்கான எனது சேவையை மேலும் விஸ்தரிக்க விரும்புகிறேன். எனக்கு ஆதரவளித்து வரும் அனைவருக்கும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்த அமைச்சர், 100 நாட்களுக்குள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதோடு சிறந்த ஆட்சியை வழங்கவும் உறுதியாகவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகளின் ஏகோபித்த ஆதரவைப்பெற்றுள்ள அமைச்சர் கடந்த 13 வருடங்களாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயலாளராக இருந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Slfp-Unp

- See more at: http://www.canadamirror.com/canada/34370.html#sthash.AnAKkzBk.dpuf

Geen opmerkingen:

Een reactie posten