தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 5 november 2014

ஐ.நா விசாரணைகளில் சாட்சியமளித்த பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வெளிநாட்டவர்கள்?



மீரியாபெத்த மண்சரிவில் 12பேர் கொல்லப்பட்டனர்! 22பேர் காணாமல் போயினர்!- அனர்த்த முகாமை நிலையம்
[ புதன்கிழமை, 05 நவம்பர் 2014, 04:13.15 PM GMT ]
பதுளை ஹல்துமுல்லை கொஸ்லாந்தை, மீரியாபெத்த பெருந்தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை இதுவரை 12 என்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
22 பேர் இன்னமும் காணவில்லை என்ற அனர்த்த முகாமைத்து நிலையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக காணாமல் போனோர் எண்ணிக்கை 300 என்று கூறப்பட்ட போதும் கடந்த சனிக்கிழமையன்று பொலிஸ் அறிக்கையின்படி அது 33 ஆக குறைக்கப்பட்டது.
மண்சரிவு ஏற்படுவதை முன்கூட்டியே தெரிந்துகொண்ட பலர் தப்பிய போதும் அவர்கள் அகதிகள் முகாம்களுக்கு பிந்தியே வந்து சேர்ந்தனர்.
எனவேதான் உண்மையான காணாமல் போனோர் தொகையை உடனடியாக தெரிந்துகொள்ள முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBTZKXgq3.html
ஐ.நா விசாரணைகளில் சாட்சியமளித்த பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வெளிநாட்டவர்கள்?
[ புதன்கிழமை, 05 நவம்பர் 2014, 11:18.51 PM GMT ]
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்திய பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வெளிநாட்டவர்கள் என சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பிலான இந்த விசாரணை நடத்தப்படுகின்றது.
சாட்சியமளித்தவர்கள் வன்னிப் போரின் போது இலங்கையில் இருக்கவில்லை.
இதுவரையில் 6000ற்கும் மேற்பட்டவர்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணைக் குழுவின் முன்னிலையில் சாட்சியமளித்துள்ளனர்.
சாட்சியங்கள் ஏற்றுக் கொள்வது தொடர்பான கால வரையறைகள் அகற்றப்பட்டுள்ளன.
எந்த நேரத்திலும் விசாரணைகள் தொடர்பில் சாட்சியமளிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலி சாட்சியமளித்த அதிகமானவர்கள் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதானிகளுமாகும் என சிங்களப் பத்திரிகையில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதேவேளை> சாட்சியமளிப்போரின் இரகசியத்தன்மை பேணப்படும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை உறுதியளித்துள்ள நிலையில், குறித்த பத்திரிகை எந்த ஆதாரத்தின் அடிப்படையில் போலி சாட்சியங்கள் அளிக்கப்படுவதாக குற்றம் சுமத்துகின்றது என்பதனை நிரூபிக்கத் தவறியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBTZKXgq5.html

Geen opmerkingen:

Een reactie posten