துன்புறுத்தல்களிற்கு உள்ளான பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் என்டிபி கட்சியை சேர்ந்தவர்கள் என கூறப்பட்டுள்ளது.
மொன்றியல் எம்பி மசிமோ பசெட்டி மற்றும் நியு பவுன்லாந் எம்பி ஸ்கொட் அன்றூஸ் ஆகியவர்களை லிபரல் கட்சிகுழுவில் இருந்து மறு அறிவித்தல் வரும் வரை கட்சி தலைவர் ஜஸ்ரின் றூடோ வெளியேற்றியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இவர்களில் ஒருவரின் நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட ஒரு எம்பி றூடோவை அணுகியதன் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.
இரண்டு வழக்குகளும் ஒன்றிற்கொன்று தொடர்பற்றவை. இரு ஆண்களும் குற்றச்சாட்டை மறுத்துள்ளனர்.
தற்சமயம் லிபரல் கட்சிகுழுவின் எண்ணிக்கை 35 எம்பிக்களாக குறைந்துள்ளது.

Geen opmerkingen:
Een reactie posten