[ வியாழக்கிழமை, 06 நவம்பர் 2014, 07:03.30 AM GMT ]
கொழும்பில் நேற்று நடைபெற்ற அரசியல் கருத்தரங்கொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மன்னனின் வாளால் வெட்டுப்படுவோம் என்ற பயம் இருந்தாலும் அரசியல் ரீதியான ஆபத்தை கவனத்தில் கொள்ளாது நாங்கள் எமது யோசனைகளை மக்கள் மத்திக்கு கொண்டு சென்றுள்ளோம்.
இதனால், ஆத்ம கௌரவம் இருக்கும் அரசியல் அமைப்பு என்ற வகையில், எமது யோசனைகள் செயற்படுத்தப்படவில்லை என்றால், நாங்கள் அரசாங்கத்தில் இருக்க போவதில்லை என்று ஏற்கனவே தெரிவித்து விட்டோம்.
சுமார் 5 வருடங்களாக மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் இருக்கும் நிலையில், ஜனாதிபதியின் தேவைகளை நிறைவேற்ற இந்த பலம் பயன்படுத்தப்பட்டதே அன்றி நாட்டின் தேவைக்காக பயன்படுத்தப்படவில்லை எனவும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBTaKXgt7.html
தொடர்ந்து பெய்து வரும் அடைமழை காரணமாக மற்றுமொரு கொஸ்லந்தை மலையகத்தில் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மண்சரிவு அனர்த்த அபாயங்கள் எதிர்நோக்கப்படும் ஹேவாஹெட்ட பிரிவே அடுத்த பலியிடமாக அமையலாமென அஞ்சப்படுகிறது.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மன்னனின் வாளால் வெட்டுப்படுவோம் என்ற பயம் இருந்தாலும் அரசியல் ரீதியான ஆபத்தை கவனத்தில் கொள்ளாது நாங்கள் எமது யோசனைகளை மக்கள் மத்திக்கு கொண்டு சென்றுள்ளோம்.
இதனால், ஆத்ம கௌரவம் இருக்கும் அரசியல் அமைப்பு என்ற வகையில், எமது யோசனைகள் செயற்படுத்தப்படவில்லை என்றால், நாங்கள் அரசாங்கத்தில் இருக்க போவதில்லை என்று ஏற்கனவே தெரிவித்து விட்டோம்.
சுமார் 5 வருடங்களாக மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் இருக்கும் நிலையில், ஜனாதிபதியின் தேவைகளை நிறைவேற்ற இந்த பலம் பயன்படுத்தப்பட்டதே அன்றி நாட்டின் தேவைக்காக பயன்படுத்தப்படவில்லை எனவும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBTaKXgt7.html
மற்றுமொரு கொஸ்லந்தை மலையகத்தில் உருவாகும் அபாயம்- தொண்டமான் கலந்துரையாடல்
[ வியாழக்கிழமை, 06 நவம்பர் 2014, 07:46.16 AM GMT ]
அண்மையில் கொஸ்லாந்தை மீரியபெத்தை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு அனர்த்தத்தில் ஒரு கிராமமே மூழ்கிய சோகத்தை இன்னும் ஜீரணிக்க முடியாத நிலையில் மற்றுமொரு அனர்த்தமா? என்று கேட்குமளவிற்கு அறிகுறிகள் தென்படுகின்றன.
இதனை அங்குசென்ற மலையகத்தின் தன்னார்வத்தொண்டு நிறுவனமான மனித அபிவிருத்தித்தாபன குழுவினர் நேரடியாகக் கண்டுள்ளனர்.
நுவரெலியா மாவட்ட ஹங்குராங்கெத்த பிரதேச பிரிவிற்குட்பட்ட லூல்கந்துர அப்பர் கோனாவ மற்றும் ஹேவாஹெட்ட தோட்டங்களில் மண்சரிவு அனர்த்தம் ஏற்பட்டு மக்கள் பெரிதும் அவதியுறும் நிலைமை காணப்படுகின்றது என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் தொடர்ந்து 2006, 2012, 2014 ஆம் ஆண்டுகளில் இப்பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு அனர்த்தம் ஏற்பட கூடிய சந்தர்ப்பங்கள் காணப்படுவதாக கூறி, வெளியேறுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும். இருந்தும் மக்கள் வேறு இடங்களுக்கு செல்லவில்லை.
செல்லாமைக்கான காரணம் என்ன என்று ஆராயும் போது, அவர்களுக்கான காணிகளையோ அல்லது தகுந்த வீடுகளையோ அரசாங்கமோ அல்லது தோட்ட நிர்வாகமோ ஏற்பாடு செய்து கொடுக்காமை முழுமையான காரணமாக இருப்பதாக பாதிக்கப்பட்ட மக்கள் தங்களின் கருத்துக்களை குறிப்பிடுகின்றனர்.
மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளுக்கு நேரடியாக தன் விஜயத்தை மேற்கொண்ட மனித அபிவிருத்தி தாபன கள இணைப்பாளர் ஆர். நடராசா ‘ஒரு மனிதனின் அடிப்படைத் தேவைகளில் ஒன்று வீடு மற்றும் காணியும் ஆகும். அதனை உறுதிப்படுத்தும் சட்டங்கள் சர்வதேச அளவில் காணப்படுகின்றது.
இலங்கையில் பெருந்தோட்டதுறையில் வாழும் இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கு பல வீடமைப்புத் திட்டங்கள் வழங்கப்பட்டிருந்தாலும் கூட இவை முறையாக அமுல்படுத்தப்படவில்லை.
இதனை தெளிவுபடுத்தும் வகையில் பெருந்தோட்டத் தொழிலாளருக்கும் தான் வாழும் வீட்டின் உரிமைக்கான பத்திரம் இன்மைத் தெளிவுபடுத்துகின்றது. பெருந்தோட்டதுறையில் ஏறத்தாழ 220,000 குடும்பங்கள் வாழ்கின்றனர்.
ஒரு குடும்பத்திற்கு 2 ஏக்கர் காணி என்ற அடிப்படையில் பகிர்ந்தளித்திருக்லாம். ஆனால் இன்னும் அவ்வாறான ஒரு விடயம் பெருந்தோட்டப் பகுதிகளில் அமுல்ப்படுத்தப்படவில்லை என்பதே உண்மை.’ என்று கூறினார்.
அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்குமா?
எனவே எதிர்வரும் காலத்தில் அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும், ஏனையோருக்காகவும் தகுந்த நடவடிக்கைகளை எடுப்பதற்கு ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

பதுளையில் அமைச்சா் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் விசேட கலந்துரையாடல்
மலையக பெருந்தோட்டங்களில் காலநிலை சீர்கேடுகளால் ஏற்படும் வெள்ள அனர்த்தங்கள் காரணமாக மக்கள் பல்வேறு இடையூறுகளுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.
உதரணமாக கொஸ்லாந்த, மீரியபெத்த பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் முழு தோட்டப் பகுதியே மூழ்கியது.
இதனால் ஏனைய தோட்டப் பகுதிக்கும் இவ்வாறான சம்பவம் ஏற்படாமல் இருப்பதற்கு கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சரும், நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்ட தலைவருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் 06.11.2014 அன்று பதுளை பெருந்தோட்ட அபிவிருத்தி மனிதவள நிதியத்தின் கேட்போர் கூடத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
இக்கலந்துரையாடைலில் அமைச்சர் தெரிவித்ததாவது,
தோட்டப் பகுதியில் காலநிலை சீர்கேடுகளால் வருகின்ற அனர்த்தங்களை தோட்ட நிர்வாகத்தின் அதிகாரிகள் இவ்வாறான மண்சரிவுகளோ வெள்ள அனர்த்தங்களோ அறிந்து கொண்டு இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தோடு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
தோட்டங்களில் உள்ள அபாயங்களை இனங்கண்டு அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பதுளை மாவட்டத்திற்கு பொறுப்பான தேசிய கட்டிட நிர்மாண ஆய்வு நிறுவனத்திற்கு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் பணிப்புரை விடுத்தார்.
அத்தோடு மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக புதிய வீடுகள் அமைக்கப்படும் திட்டத்தின் வேலைகள் இம்மாதம் 15ம் திகதி ஆரம்பிக்கப்படும் என அவா் தெரிவித்தார்.
இதன்போது பொருளாதார பிரதி அசைமச்சர் முத்து சிவலிங்கம், ஊவா மாகாண சபை அமைச்சா் செந்தில் தொண்டமான் மற்றும் பதுளை மாவட்டத்தில் உள்ள உயர் பொலிஸ் அதிகாரிகள், தோட்ட அதிகாரிகள், வைத்தியர்கள், இராணுவத்தினா் என பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
Geen opmerkingen:
Een reactie posten