தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 1 november 2014

மீனவர்களுக்கு தூக்கு: இலங்கைத் தூதரகம் முற்றுகை! மகிந்த, சுவாமியின் உருவப்படம் எரிப்பு

தூக்கில் தவிக்கும் மீனவர்களை விடுவிக்க யாழ்.ஆயரிடம் மகஜர்!

இன்று பிற்பகல் நடத்தப்பட்ட இப்போராட்டத்தில் பொய்குற்றச்சாட்டினில் தண்டிக்கப்பட்டுள்ள இந்திய-இலங்கை மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரியே மகஜர் ஒன்றினையும் யாழ். ஆயரிடம் அவர்கள் வழங்கியுள்ளனர்.


மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களுள் ஜவர் தமிழக மீனவர்களாவர்.அவர்களது விடுதலையை வலியுறுத்தி தமிழகமெங்கும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.indian_fisherman_001
http://www.jvpnews.com/srilanka/85616.html

இந்திய மீனவர்கள் விடுதலை விவகாரம் மோடியிடம்

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 5 பேரை உடனே மீட்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கைவிடுத்து வருகின்றனர்.
மத்திய அரசு தூதரக மட்டத்தில் பேச்சுக்களை நடத்தி வருவதுடன் கொழும்பு உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழக மீனவர்கள் விவகாரம் பற்றி இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
இம்மாதம் 25ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை நேபாள தலைநகர் காட்மண்டுவில் நடைபெற உள்ள சார்க் நாடுகளின் மாநாட்டில் பங்கேற்க வரும் போது மோடி–ராஜபக்ஷ சந்திப்பு நடைபெறும். அப்போது ராஜபக்ஷவிடம் தமிழக மீனவர்களை விடுவிக்க மோடி வலியுறுத்துவார் என்று டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.jvpnews.com/srilanka/85619.html

மீனவர்களுக்கு தூக்கு: இலங்கைத் தூதரகம் முற்றுகை! மகிந்த, சுவாமியின் உருவப்படம் எரிப்பு

போதை பொருள் கடத்தியதாக கூறி தமிழக மீனவர்கள் 5 பேருக்கு இலங்கை நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது.
இதற்கு தமிழக அரசியல் கட்சிகள், தமிழ் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
ஐந்து மீனவர்களையும் பேரையும் உடனடியாக விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னையில் உள்ள இலங்கை சம்பந்தப்பட்ட அலுவலகங்கள் மீது தமிழ் அமைப்புகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதன் எதிரொலியாக நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகம், எழும்பூரில் உள்ள புத்த மகா போதி சொசைட்டி, இலங்கை வங்கி, நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை ஏயார் லைன்ஸ் ஆகியவற்றிற்கு 24 மணி நேர பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பினர் 150க்கும் மேற்பட்டோர் இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டனர். அவர்கள் அனைவரையும் பொலிசார் கைது செய்ததாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
valvurimai_kadsi_prot_001
valvurimai_kadsi_prot_002
valvurimai_kadsi_prot_003
valvurimai_kadsi_prot_004

valvurimai_kadsi_prot_005
http://www.jvpnews.com/srilanka/85623.html

Geen opmerkingen:

Een reactie posten