[ ஞாயிற்றுக்கிழமை, 23 நவம்பர் 2014, 03:26.18 PM GMT ]
ஆளுங்கட்சியின் பக்கமிருந்து சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் கட்சி தாவியதைப் போன்று ஐக்கிய தேசியக் கட்சியின் பெரும்புள்ளி ஒருவரை ஆளுந்தரப்புக்கு இழுத்து வருவது ஜனாதிபதியின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தற்போதைய நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க அல்லது துணைத் தலைவர் சஜித் பிரேமதாச ஆகிய இருவரில் ஒருவருக்கு ஜனாதிபதி கண் வைத்துள்ளார்.
கட்சி தாவும் பட்சத்தில் 250 கோடி வரையிலான பணம், லம்போகினி ரக கார் மற்றும் முக்கிய அமைச்சுப் பதவி என்பன உள்ளிட்ட பல வரப்பிரசாதங்கள் வழங்கப்படும் என்று ஆசை காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பான முடிவு நாளை வரவு செலவுத் திட்ட வாக்களிப்பின் போது எதிர்பார்க்கக் கூடியதாக இருக்கும் என்றும் அலரி மாளிகைத் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmszBRXKYfo7.html
பொலன்னறுவையில் கழற்றி எறியப்பட்ட மஹிந்தவின் கட்-அவுட்கள் - அரசாங்கத்தின் வன்முறைகளுக்கு எதிராக ஐ.தே.க. ஆர்ப்பாட்டம்
[ ஞாயிற்றுக்கிழமை, 23 நவம்பர் 2014, 03:12.20 PM GMT ]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று நண்பகல் பொலன்னறுவை சோமாவதிய விகாரைக்கு விஜயம் மேற்கொள்ளவிருந்த நிலையில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
நேற்று நள்ளிரவு முதல் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவினரும், வேறு மாவட்டங்களிலிருந்து தருவிக்கப்பட்ட பொலிசாரும் பொலன்னறுவையில் இதுவரை நிலைகொண்டுள்ளனர்.
எனினும் இவர்களைக் கண்டு அஞ்சாமல் சுதந்திரக் கட்சியின் முன்னாள் ஆதரவாளர்கள் பகிரங்கமாக களமிறங்கி ஜனாதிபதியின் கட்-அவுட்களை அகற்றியுள்ளனர்.
இதுகுறித்து கேள்விப்பட்டவுடன் பொலன்னறுவைக்கான தனது விஜயத்தை ரத்து்ச் செய்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வரவு செலவுத்திட்ட வாக்களிப்பின் பின்னர் அங்கு விஜயம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் வன்முறைகளுக்கு எதிராக ஐ.தே.க. ஆர்ப்பாட்டம்
அரசாங்கத்தின் வன்முறைகளுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியினர் இன்று கண்டியில் ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர்.
கண்டி மாவட்டம் வத்தேகம நகரில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
நேற்றிரவு வத்தேகம நகர சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் தனுஷ்க லியனகேயின் வீடு மற்றும் கார் ஆளுங்கட்சியினரால் அடித்து நொறுக்கப்பட்டிருந்தது.
இந்தச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும், ஆளுங்கட்சியின் வன்முறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் குறித்த ஆர்ப்பாட்டம் வத்தேகம பஸ் நிலையம் எதிரில் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹலீம், லக்ஷ்மண் கிரியெல்ல, மாகாணசபை உறுப்பினர் சித்ரா மன்திலக, மற்றும் உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
- மைத்திரியின் கோட்டைக்கு மஹிந்த விஜயம்
- அரசியல் ரீதியாக எவரையும் பழிவாங்கப் போவதில்லை!: ஜனாதிபதி மஹிந்த
- ஜனாதிபதி மஹிந்தவின் சலூன் கதவு பழுதடைந்துள்ளது: ஹரின் பெர்னாண்டோ
- வலை வீசுகிறார் மஹிந்த! சால்வைக்குள் சிக்கப் போவது யார்?
- மஹிந்தவின் வலதுகரம் அம்ஜத் கட்சி தாவினார்!
- மைத்திரிபாலவையும் சிறையில் அடைக்கக் கூடும்: சரத் பொன்சேகா
- மகிந்தவின் குடும்ப ஆட்சியில் இருந்து வெளியேறிய ஒரு விபீஷணன்
http://www.tamilwin.com/show-RUmszBRXKYfo5.html
Geen opmerkingen:
Een reactie posten