தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 23 november 2014

சித்திரவதைகளுக்கு எதிரான சர்வதேச தினம்! கொழும்பில் அனுட்டிப்பு!

ஜனாதிபதியாகி 100 நாளில், சமாதான நீதவானின் அதிகாரம் தான் மைத்திரிக்கு கிடைக்கும்!- மகிந்தானந்த
[ ஞாயிற்றுக்கிழமை, 23 நவம்பர் 2014, 03:23.20 PM GMT ]
அரசாங்கத்தை விட்டு வெளியேறிய மைத்திரிபால சிறிசேனவுக்கு ஜனாதிபதியாகி 100 நாட்களுக்குள் அதிகாரத்தை வழங்கினால், அகில இலங்கை சமாதான நீதவானின் அதிகாரம் தான் அவருக்கு எஞ்சும் என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். 
இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதேவேளை, அரசாங்கத்திலிருந்து இதன் பிறகு எவரும் வெளியேற மாட்டார்கள் என்பதை தான் உறுதியுடன் தெரிவித்துக் கொள்வதாக அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி அதே ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையில் கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmszBRXKYfo6.html

முடிவுகளின்றிக் கலைந்தது முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட கூட்டம்
[ ஞாயிற்றுக்கிழமை, 23 நவம்பர் 2014, 03:11.16 PM GMT ]
கொழும்பில் இன்று நடைபெற்ற முஸ்லிம் காங்கிரசின் உயர்பீடக் கூட்டம் முடிவுகளின்றிக் கலைந்து போயுள்ளது.
கொழும்பு பம்பலப்பிட்டியில் நடைபெற்ற இந்த உயர்பீடக் கூட்டத்தில் முஸ்லிம் காங்கிரசின் மாகாண சபை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
சுமார் இரண்டு மணி நேரங்களுக்கும் மேலாக நடைபெற்ற இந்த உயர்பீடக் கூட்டத்தில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்று இறுதி முடிவை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக இன்னொரு தடவை மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை கொழும்புக்கு அழைத்துக் கலந்துரையாடவுள்ளதாகவும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதன் பின்னரே முஸ்லிம் காங்கிரசின் அரசியல் அதியுயர்பீடம் கூடி ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்று இறுதி முடிவை எடுக்கும் என்றும் குறித்த வட்டாரங்களிலிருந்து தெரிய வந்துள்ளது.
எனினும் முஸ்லிம் காங்கிரஸ் தலைமையின் இந்த முடிவு கட்சி தொண்டர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBRXKYfo4.html

சித்திரவதைகளுக்கு எதிரான சர்வதேச தினம்! கொழும்பில் அனுட்டிப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 23 நவம்பர் 2014, 02:48.27 PM GMT ]
சித்திரவதைகளுக்கு எதிரான சர்வதேச தினம் வரும் 25ம் திகதி கொழும்பில் அனுட்டிக்கப்படவுள்ளது.
கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் நடைபெறும் இந்த வைபவத்தின்போது சித்திரவதைகளுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் மாலை 5.30 மணியளவில் நிகழ்வில் கலந்து கொள்ளும் அனைவரும் மெழுகுவர்த்தி ஏற்றி நிகழ்வை அனுட்டிக்கவுள்ளனர்.
இந்த நிகழ்வை இலங்கை இதழியல் கல்லூரியின் பழைய மாணவர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். இலங்கையில் நடைபெறும் சித்திரவதைகளுக்கு எதிரான ஒரே நிகழ்வாக இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் ஏராளமான அரசியல்வாதிகள் மற்றும் கலைஞர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா பிரியங்கனி எக்னெலிகொட நிகழ்வின் சிறப்பு அதிதியாக கலந்துகொள்ளவுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRXKYfo2.html

Geen opmerkingen:

Een reactie posten