தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 2 november 2014

அழகான கொழும்பு! அசுத்தமடையப்போகும் புத்தளம்!

கொழும்பு மாநகரை அழகுபடுத்தும் நோக்குடன் கொழும்பில் சேரும் குப்பை கூழங்களை புத்தளம் பிரதேசத்தில் கொட்டும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் திட்டத்துக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
இதன் பிரகாரம் கொழும்பில் சேரும் குப்பை, கூழங்களை தினமும் லொறிகளில் சேகரித்து புத்தளம் பிரதேசத்தில் கொட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பின்னர் அதனை கொம்போஸ்ட் உரமாக மாற்றும் சாத்தியம் குறித்து ஆய்வு செய்யப்படவுள்ளது.
எதிர்வரும் ஜனவரி மாதம் தொடக்கம் இந்தத் திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது.
இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கென எதிர்வரும் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பத்தாயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBTWKXiq0.html

Geen opmerkingen:

Een reactie posten