தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 9 november 2014

ஐ.நா ஊடக அதிகாரி இலங்கைக்கு ஆதரவாக செயற்படுவதாக இன்னர் சிற்றி பிரஸ் குற்றச்சாட்டு!

யாழில் குளிர்பான உற்பத்தியாளர் கூட்டமைப்பு நாளை போராட்டம்
[ ஞாயிற்றுக்கிழமை, 09 நவம்பர் 2014, 04:05.12 PM GMT ]
யாழ்.மாவட்டத்தில் மலத் தொற்றுள்ள குளிர்பானங்களை உற்பத்தி செய்ததாக குற்றம் சுமத்தி 58 குளிர்பான உற்பத்தி நிலையங்கள் மூடப்பட்டிருக்கும் நிலையில், மேற்படி அநீதிக்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டத்தை நாளை நடத்தவுள்ளதாக குளிர்பான உற்பத்தியாளர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் திடீரென குடாநாட்டில் இயங்கி வந்த 58 குளிர்பான உற்பத்தி நிலையங்கள் மலத் தொற்றுள்ள குளிர்பானங்களை உற்பத்தி செய்வதாக கூறி இழுத்து மூடப்பட்டன.
இந்நிலையில் மேற்படி திடீர் நடவடிக்கை நன்கு திட்டமிடப்பட்ட ஒரு அழிப்பு நடவடிக்கை என குளிர்பான உற்பத்தியாளர் கூட்டமைப்பு கூறிவருகின்றது.
இந்நிலையில் நேற்றைய தினம் ஒரு தொகுதி குளிர்பான உற்பத்தி நிலையங்களுக்கான தடை நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
எனினும் அவ்வாறு தடை நீக்கப்பட்டதாக கூறப்படும் உற்பத்தி நிலையங்கள் உண்மையில் தடை செய்யப்படாத உற்பத்தி நிலையங்களாகும் என மேற்படி அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
சர்வதேச மட்டத்திலும், தமிழ் மக்கள் மத்தியிலும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியிருக்கும் இந்தப் பிரச்சினையை ஒடுக்கும் வகையில் அல்லது யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணி மனை மற்றும் சில ஊடகங்கள் சேர்ந்து நடத்திய குறித்த பிரச்சினையை மறைக்கும் வகையிலேயே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தமக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்தும், உண்மையான நிலை என்ன? என்பதை கண்டறியவும் உடன் நடவடிக்கை எடுக்கவும் கோரும் வகையில் நாளைய தினம் காலை யாழ். துரையப்பா விளையாட்டரங்கிலிருந்து மேற்படி கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாக உற்பத்தியாளர் கூட்டமைப்பு கூறியுள்ளது.
குறித்த கவனயீர்ப்பு போராட்டம் காலை 10 மணிக்கு ஆரம்பிக்கப்படும், இதில் சமூக ஆர்வலர்கள், மனிதாபிமானிகள், உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிக்கும் அமைப்புக்கள் கலந்து கொள்ளுமாறும் மேற்படி அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBTdKXerz.html
ஜே.வி.பி.யின் தலைவருக்கு சஜின்வாஸ் எம்பி சவால்
[ ஞாயிற்றுக்கிழமை, 09 நவம்பர் 2014, 04:31.11 PM GMT ]
எதிர்வரும் ஜனவரி மாதம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என சர்ச்சைக்குரிய நாடாளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
பலபிட்டியில் இன்று நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
முடியுமென்றால் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க வேட்பாளராக போட்டியிடட்டும்.
இது அனுரகுமாரவிற்கு விடுக்கப்படும் சவலாகும்.  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சாதாரண கட்சியல்ல.
பழைய சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் எந்தப் பிரச்சினை வந்தாலும் கட்சியை விட்டு விலக மாட்டார்கள்.
நாம் தேர்தல் நடத்த முயற்சிக்கும் போது சிலர் வேண்டாம் என்று கோசம் எழுப்புகின்றனர். ஜே.வி.பிதான் இவ்வாறு கோசம் எழுப்பத் தொடங்கியது.
முடிந்தால் அனுரகுமார தேர்தலில் போட்டியிட்டு காட்டட்டும். கிடைக்கும் வாக்குகளை எண்ண முடியாத அளவிற்கு வெட்கித் தலைகுனிவார்கள்.
இதன் காரணமாகவே நாடு முழுவதிலும் கருத்தரங்குகளை நடத்தி வருகின்றனர். ஜே.வி.பி தற்போது முன்னாள் பிரதம நீதியரசரையும் இணைத்துக் கொண்டுள்ளனர்.
நான் இது பற்றி குறிப்பிடுவதனால் என்னை திருடன் என குறிப்பிடுவார்கள்.
சிங்கள, தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகளை கொலை செய்தவர்களிடமிருந்து நாட்டை மீட்டெடுத்தது சந்திரிக்காவா, ரணிலா அல்லது வேறு தலைவர்களா?
முன்னாள் பிரதம நீதியரசர் ஜனாதிபதியை கூட்டங்களில் இழிவாக பேசி வருகின்றார்.
ஹெல்பிங் ஹேன்ட் வழக்கில் ஜனாதிபதி;கு தண்டனை விதிக்காமைக்காக வருந்துவதாக சரத் என் சில்வா குறிப்பிட்டிருந்தார்.
மஹிந்தவை கைது செய்து சிறையில் அடைக்காமைக்காக வருந்துவதாக மேலும் குறிப்பிட்டிருந்தார்.
எனினும் ஜனாதிபதியை சிறையில் அடைக்க மக்கள் இடமளிப்பார்களா?
நாட்டில் ஓடிய இரத்த வெள்ளத்தை தடுத்து நிறுத்திய ஜனாதிபதியை சிறையில் அடைக்க மக்கள் அனுமதிக்க மட்டார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு மக்கள் நீதிமன்றினால் தண்டனை விதிக்கும் காலம் தொலைவில் இல்லை- சுசில் கிந்தல்பிட்டிய
அரசாங்கத்திற்கு மக்கள் நீதிமன்றில் தண்டனை விதிக்கும் காலம் தொலைவில் இல்லை என ஜனநாயகக் கட்சியின் மேல் மாகாணசபை உறுப்பினர் சுசில் கிந்தல்பிட்டிய தெரிவித்துள்ளார்.
நாம் தலைவர்களை தெரியும் போது, அந்த தலைவரிடம் காணப்பட வேண்டிய பண்புகளை தேடுகின்றோம். அவை என்ன? தமது நாட்டை நேசிக்க வேண்டும்.
தனது இனத்தை நேசிக்க வேண்டும். தாய் நாட்டை பாதுகாக்கக் கூடியவராக இருக்க வேண்டும். ஊழல் மோசடிகளில் ஈடுபட்டிருக்கக் கூடாது.
சமூக நீதிக்காக குரல் கொடுக்க வேண்டும். அதேபோன்று, நீதியின் அதிகாரத்தை பாதுகாக்க வேண்டும்.
இந்த அனைத்துப் பண்புகளும் உடைய அரசியல் தலைவர்களை வெளியே போட முடியாது.
இந்த அரசாங்கம் மக்கள் நீதிமன்றினால் தண்டிக்கப்படும் காலம் தொலைவில் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இம்புல்கொட பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBTdKXer0.html
ஐ.நா ஊடக அதிகாரி இலங்கைக்கு ஆதரவாக செயற்படுவதாக இன்னர் சிற்றி பிரஸ் குற்றச்சாட்டு
[ ஞாயிற்றுக்கிழமை, 09 நவம்பர் 2014, 04:57.02 PM GMT ]
ஐக்கிய நாடுகள் ஊடக அதிகாரி இலங்கைக்கு ஆதரவாக செயற்பட்டு வருவதாக இன்னர் சிற்றி பிரஸ் ஊடகம் குற்றம் சுமத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகள் செய்தியாளர் பேரவையின் முன்னாள் தலைவர் கியாம்பாலோ பியோலி இவ்வாறு இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்பட்டு வருகின்றார் என தெரிவித்துள்ளது.
பியோலி தனது மான்எட்டனில் அமைந்துள்ள வீட்டை, ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதி பாலித கொஹனவிற்கு வாடகைக்கு விட்டுள்ளார்.
போர்க்குற்றச் செயல்கள் நிராகரிக்கும் வகையிலான இலங்கை அரசாங்கத்தின் கணொளியொன்று ஐக்கிய நாடுகள் செய்தியாளர் பேரவையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
மாற்றுக் கருத்துக்களை வெளியிடும் சில ஊடக நிறுவனங்கள் செய்தி சேகரிப்பில் ஈடுபட தடைகள் ஏற்படுத்தப்படுவதுடன் அனுமதி மறுக்கப்படுகின்றது.
கடந்த சில காலங்களாகவே எமது நிறுவனத்திற்கு செய்தி சேகரிக்க தடைகள் ஏற்படுத்தப்படுகின்றன.
போர்க்குற்றச் செயல்களை நிராகரிக்கும் காணொளியை காட்சிப்படுத்த அனைவரினதும் அனுமதி பெற்றுக் கொள்ளப்படவில்லை.
பியோலியின் நடவடிக்கைளுக்கு சில ஊடகங்கள் ஆதரவளித்து வருகின்றன என இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBTdKXer1.html

Geen opmerkingen:

Een reactie posten