தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 10 november 2014

மஹிந்த ராஜபக்ச - நரேந்திர மோடி அலைபேசியில் உரையாடல்

ரணிலை தோற்கடிக்க கட்சிக்குள்ளேயே சூழ்ச்சி!– விஜயதாச ராஜபக்ச
[ ஞாயிற்றுக்கிழமை, 09 நவம்பர் 2014, 11:37.01 PM GMT ]
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை தோற்கடிக்க கட்சிக்குள்ளேயே சூழ்ச்சித் திட்டமொன்று வகுக்கப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறப்பினர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ரணிலை தோற்கடிக்கும் இரகசிய சூழ்ச்சித் திட்டம் தற்போது கட்சிக்கு உள்ளேயே மேற்கொள்ளப்படுகின்றது என அவர் சிங்களப் பத்திரிகை ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
கட்சிக்குள் மீளவும் குழப்பங்களை ஏற்படுத்த நான்கு பேர் அடங்கிய குழுவொன்று முயற்சிக்கின்றது.
இவர்களை நால்வர் அடங்கிய குழு ஒன்று அடையாளப்படுத்த முடியும்.
இந்த நடவடிக்கையினால் கட்சிக்கு பாதிப்பு ஏற்படக்கூடுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கட்சிக்குள் எவ்வித முரண்பாடுகளும் கிடையாது என ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
கட்சிக்குள் ஒற்றுமை நிலவுவதனால் கட்சியின் வெற்றியை எவராலும் தடுக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBTdKXer3.html
மஹிந்த ராஜபக்ச - நரேந்திர மோடி அலைபேசியில் உரையாடல்
[ ஞாயிற்றுக்கிழமை, 09 நவம்பர் 2014, 11:59.41 PM GMT ]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் தீர்வு காண வேண்டிய பிரச்சினைகளையிட்டு நேற்று காலை அலைபேசி மூலம் உரையாடியதாக, நம்பகரமான தகவல்கள் கிடைத்துள்ளன.
பேசப்பட்ட விடயங்களில், மரணதண்டனை விதிக்கப்பட்ட ஐந்து இந்திய மீனவர்கள் விடயம் மற்றும் காத்மண்டுவில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள சார்க் மாநாட்டில் மோடியின் பிரசன்னம் ஆகியவையும் அடங்கியிருந்ததாக கூறப்பட்டது.
தடைகள் விதிக்கப்பட்ட மீனவர்கள், இந்திய சிறைகளில் தமது சிறைத்தண்டனையை அனுபவிப்பர் எனும் உடன்பாட்டுடன், கைதிகளை பரிமாறிக்கொள்ள ராஜபக்ச விரும்பியதாவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmszBTdKXer5.html

Geen opmerkingen:

Een reactie posten