தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 3 november 2014

கொஸ்லந்தை பெயரை விற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐரோப்பிய நாடுகளில் நிதி திரட்டி வருகின்றது!– சிங்கள ஊடகம்!

மஹிந்தவை தோற்கடிக்க மக்கள் தீர்மானித்துவிட்டனர்!– ரஞ்சித் மத்துமபண்டார
[ திங்கட்கிழமை, 03 நவம்பர் 2014, 11:46.22 PM GMT ]
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை தோற்கடிக்க மக்கள் தீர்மானித்து விட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் மொனராகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
சிங்கள பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எந்தவொரு நபருக்கும் எந்தவொரு கனவையும் காண முடியும் அவற்றை நிஜமாக்க முடியாவிட்டால் அவை வெறும் கனவுகளாகவே நீடிக்கும்.
கடந்த காலங்களில் ஜனாதிபதிக்கு இருந்த நற்பெயரின் அடிப்படையில் இம்முறையும் ஜனாதிபதிக்கு மக்கள் ஆதரவளிப்பார்கள் என சில அமைச்சர்கள் கனவு காண்கின்றார்கள்.
எனினும் இந்த மண்ணில் வாழ்ந்து வரும் மக்கள் மஹிந்த ராஜபக்சவின் நடவடிக்கைகளை நன்கு புரிந்து கொண்டுள்ளனர்.
அமைச்சர்களின் நடவடிக்கைகள் பற்றியும் அவர்களுக்குத் தெரியும்.
ஜனாதிபதி மஹிந்தவை தோற்கடிக்க வேண்டும் எனவும்ää ஐக்கிய தேசியக் கட்சியினால் களமிறக்கப்பட உள்ள மக்கள் தலைவரையும் வெற்றியீட்டச் செய்ய வேண்டுமெனவும் மக்கள் தீர்மானித்துள்ளனர்.
தலைமைத்துவம் தொடர்பில் கட்சிக்குள் முரண்பாட்டு நிலைமை காணப்பட்டது.
அந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளார்.
கட்சியில் சமாதானம் கிடையாது என பிரச்சாரம் செய்த தரப்பினருக்கு பதிலளிக்கப்பட்டுள்ளது.
கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் பல்வேறு நிலைப்பாடுகள் காணப்படலாம்.
அவ்வாறான நிலைப்பாடுகள் தொடர்பில் கட்சிக்குள்ளேயே தீர்மானம் எடுக்கப்படும்.
கட்சியுடன் தொடர்பற்று இருந்தவர்களும் இன்று கட்சியுடன் இணைந்து செயற்படத் தீர்மானித்துள்னர் என மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBTXKXho7.html
கொஸ்லந்தை பெயரை விற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐரோப்பிய நாடுகளில் நிதி திரட்டி வருகின்றது!– சிங்கள ஊடகம்
[ திங்கட்கிழமை, 03 நவம்பர் 2014, 11:28.24 PM GMT ]
கொஸலந்தை மிரியாபெத்த மண்சரிவு அழிவைப் பயன்படுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐரோப்பிய நாடுகளில் நிதி திரட்டி வருவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதாகத் தெரிவித்து இவ்வாறு பாரியளவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிதி திரட்டும் பணிகளை ஆரம்பித்துள்ளது.
சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் இயங்கி வரும் அமைப்பு ஒன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருக்கு பணம் அனுப்பி வைத்துள்ளது.
மிரியபெத்த மண் சரிவில் பாதிக்கப்பட்ட சிறுவர்களை பராமரிக்க அனுமதியளிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
மிரியாபெத்த அனர்த்தம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு சாதகத் தன்மையை ஏற்படுத்தியுள்ளது.
மட்டக்களப்பைச் சேர்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பண்டாரவளைக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கவெனத் தெரிவித்து பொருட்களை கொள்வனவு செய்துள்ளார் தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்கத் தரப்பில் சுமத்தப்பட்டு வரும் இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரையில் பதில்கள் எதனையும் அளிக்கவில்லை.
http://www.tamilwin.com/show-RUmszBTXKXho6.html

Geen opmerkingen:

Een reactie posten