[ செவ்வாய்க்கிழமை, 04 நவம்பர் 2014, 12:03.10 AM GMT ]
இந்த வழக்கு நேற்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போதே நீதிபதி மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.
பலாலியிலிருந்து இரத்மலானை நோக்கி பறந்துகொண்டிருந்த போதே இலங்கை விமானப்படைக்கு சொந்தமான லயன் எயர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.
இதன் பிரகாரம் இம்மாதம் 10,11 மற்றும் 12ஆம் திகதிகளில் இந்த விசாரணை முன்னெடுக்கப்படவிருக்கின்றது.
இரணைதீவுக் கடலில் கடந்த 1998ஆம் ஆண்டு செப்டெம்பர் 29ம் திகதி சுட்டுவீழ்த்தப்பட்ட லயன் எயர் விமானத்திலிருந்து மீட்கப்பட்ட 72 வகையான தடயப் பொருட்களில் 11பேர் தங்களுடைய உறவினர்களின் பொருட்களை அடையாளம் காட்டியுள்ளனர் என்று பாணந்துறை சட்ட வைத்திய அதிகாரி பிரசன்ன தஸநாயக்க தெரிவித்தார்.
இதற்கு முன்னரும் இந்தவழக்கு தொடர்ச்சியாக நான்கு நாட்களுக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்தது.
சம்பவம் தொடர்பில் அதிகுற்றங்கள் சுமத்தப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் சந்தேகநபர்கள் இருவரையும் அந்த மூன்று நாட்களும் நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக ஆஜர்படுத்துமாறும் பணித்தார்.
இந்த சம்பவத்தில் பாதுகாப்பு பிரிவினர் உள்ளிட்ட 32 பேர் பலியானமை குறிப்பிடத்தப்பது.
இந்த விமானம் சுட்டுவீழ்த்தப்பட்ட இரணைதீவுக் கடலில் இருந்து மீட்கப்பட்ட 72 வகையான தடயப் பொருட்கள் யாழ். சுப்பிரமணியம் சிறுவர் பூங்காவுக்கு முன்பாக 2014ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 11,12ம் திகதிகளில் காட்சிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszBTYKXhpy.html
அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்வதிலேயே அரசாங்கம் அதிக கவனம் செலுத்துகிறது: மாவை குற்றச்சாட்டு
[ செவ்வாய்க்கிழமை, 04 நவம்பர் 2014, 01:32.38 AM GMT ]
நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கு மக்களின் காணிகளை அரசாங்கம் பலவந்தமாக பெற்றுக்கொள்கின்றது.
இது ஓர் பாரதூரமான பிரச்சினையாகும். வடக்கு கிழக்கில் தொடர்ந்தும் இராணுவ ஆட்சியை நீடித்து வருகின்றது.
பெரும் எண்ணிக்கையிலான படையினர் தொடர்ந்தும் வடக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.
பிரதேசத்தில் வாழ்ந்து வரும் மக்களுக்கு எவ்வித சுதந்திரமும் கிடையாது.
அதிகாரத்தில் நீடிப்பதற்கு அரசாங்கம் பல்வேறு உபாயங்களை பின்பற்றி வருகின்றது.
உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையின் ஊடாக நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது.
சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் இலங்கைக்கு வருவதனை இந்தியா விரும்பவில்லை.
எதிர்காலத்தில் இது பாரதூரமான பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடும் என மாவை சேனாதிராஜா நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBTYKXhpz.html
நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்த அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை: அனுரகுமார திஸாநாயக்க
[ செவ்வாய்க்கிழமை, 04 நவம்பர் 2014, 01:40.17 AM GMT ]
வரவு செலவுத்திட்டம் தொடர்பிலான நாடாளுமன்ற விவாதத்தில் நேற்று பங்குபற்றி உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் மக்கள் பற்றி அரசாங்கம் தொடர்ந்தும் ஏன் பேசுகின்றது? அரசாங்கம் தொடர்ந்தும் கடந்த காலங்களில் வாழ்ந்து வருகின்றது. புலம்பெயர் மக்களுக்கு அஞ்ச வேண்டிய அவசியம் கிடையாது.
அரசாங்கம் தனது இருப்பினை தக்க வைத்துக் கொள்ள கடந்த காலத்திலேயே வாழ முயற்சிக்கின்றது.
ஏகாதிபத்திய ஜனாதிபதி முறைமையை இந்த நாட்டுக்கு பொருந்தக் கூடியதல்ல.
தனியொரு நபரைச் சுற்றி அதிகாரம் கட்டியெழுப்பப்படுவதனால் பாரியளவில் பிரச்சினைகள் ஏற்படக் கூடும்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையின் பாதக விளைவுகளை மக்களே அனுபவிக்கின்றனர்.
ஜனாதிபதிக்காக நாளொன்றுக்கு 261 லட்ச ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தனியொரு நபருக்காக இவ்வளவு பாரியளவு தொகை ஒதுக்கீடு செய்யப்படுவது மாபெரும் விரயமாகவே கருதுகின்றோம் என ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBTYKXhp0.html
வரவு செலவுத் திட்டத்தில் தமிழ் மக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளனர்: செல்வம் அடைக்கலநாதன்
[ செவ்வாய்க்கிழமை, 04 நவம்பர் 2014, 01:48.39 AM GMT ]
ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீடு குறித்த நாடாளுமன்ற விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போது நேற்று அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மொழி பேசும் மக்கள் இந்த வரவு செலவுத் திட்டத்தில் முற்று முழுதாக நிராகரிக்கப்பட்டுள்ளனர்.
போர் காரணமாக அநாதரவான நிலையில் வாழ்ந்து வரும் அப்பாவி மக்களுக்கு இந்த வரவு செலவுத்திட்டத்தில் நன்மைகள் கிடைக்கும் என எதிர்பார்த்தோம்.
எனினும் இந்த வரவு செலவுத் திட்டத்திலும் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலன்கள் கிடைக்கவில்லை.
தேசிய இனப்பிரச்சினைக்கு அரசாங்கம் இதுவரையில் எவ்வித தீர்வுத் திட்டத்தையும் முன்வைக்கவில்லை என செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBTYKXhp1.html
அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதிராக செயற்படவில்லை: அஸ்கிரி மாநாயக்கர்
[ செவ்வாய்க்கிழமை, 04 நவம்பர் 2014, 02:05.56 AM GMT ]
பிரிட்டன் உயர்ஸ்தானிகர் ஜோன் ரான்கீன் நேற்று கண்டிக்கு விஜயம் செய்து அஸ்கிரி மற்றும் மல்வத்து பீடாதிபதிகளை சந்தித்திருந்தார்.
இந்த சந்திப்பின் போது ஜோன் ரான்கீனிடம், உடுகம புத்தரக்கித தேரர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதிராக செயற்படுகின்றது என சில தரப்பினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். எனினும் இந்த பிரச்சாரத்தில் உண்மையில்லை என்பது நீங்கள் இங்கு பணியாற்றிய நான்கு ஆண்டு காலத்தில் புரிந்து கொண்டிருப்பீர்கள் என நினைக்கின்றோம்.
இங்கிலாந்தின் காலணித்துவ ஆட்சியில் இருந்த காலம் முதல் இரு நாடுகளுக்கும் இடையில் சிறந்த பிணைப்பு காணப்பட்டது.
சில பிழையான புரிதல்களின் காரணமாக கடந்த காலங்களில் அமெரிக்காவும் பிரிட்டனும் இலங்கைக்கு எதிராக செயற்பட்டது. எனினும் தற்போது இங்கிலாந்து உண்மை நிலைமையை புரிந்து கொண்டுள்ளது. இது குறித்து மகிழ்ச்சி அடைகின்றோம்.
சில சில சம்பவங்கள் எந்தவொரு நாட்டிலும் இடம்பெறும். அவை இலங்கையில் மட்டும் இடம்பெறும் பிரச்சினைகள் அல்ல.
இன்று இலங்கையை விடவும் இங்கிலாந்தில் பயங்கரவாத அச்சுறுத்தல் காணப்படுகின்றது.
நான் இங்கிலாந்து விஜயம் செய்திருந்த போது வெள்ளையர்களை விடவும் அரேபிய மற்றும் கறுப்பின மக்களையே அதிகமாக காணக்கூடியதாக இருந்தது.
இங்கிலாந்தில் ஏதேனும் ஓர் ஆக்கிரமிப்பு இருக்கின்றதா என்ற சந்தேகம் எனக்குள் எழுந்தது.
உலகின் எந்தவொரு நாட்டிலும் பயங்கரவாதத்தை நாம் எதிர்க்கின்றோம் என அஸ்கிரி பீடாதிபதி உடுகம புத்தரக்கித தேரர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, லண்டனில் பல்லின மக்கள் நீண்ட காலமாக வாழ்ந்து வருகின்றனர் என ஜோன் ரான்கீன் தெரிவித்துள்ளார்.
இது லண்டன் நகருக்கு உரிய பண்பிலட்சணமாகும். நீண்ட காலமாக இவ்வாறு பல்லின மக்கள் லண்டனில் வாழ்ந்து வருகின்றனர்.
இதன் மூலம் அனைத்து இன மக்களும் சமாதானமான முறையில் வாழக் கூடிய பின்னணி காணப்படுகின்றமை வெளிப்படுத்தப்படுவதாக ரான்கீன் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புபட்ட செய்தி
http://www.tamilwin.com/show-RUmszBTYKXhp2.html
Geen opmerkingen:
Een reactie posten