தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 22 november 2014

ராஜபக்ச சகோதரர்கள் இரண்டாவது முள்ளிவாய்க்காலை எதிர்கொள்கிறார்கள்: நிலாந்தன்

ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு: முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீடம் நாளை கூடுகிறது
[ சனிக்கிழமை, 22 நவம்பர் 2014, 09:17.26 AM GMT ]
ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது பற்றி கலந்துரையாடுவதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அதியுயர் பீடம் நாளை கூடவுள்ளது.
இந்த கூட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள், நாடாளுமன்ற, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
அதேவேளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 18வது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தமை குறித்து தற்போது வருந்துவதாக அதன் தேசிய அமைப்பாளர் சபீக் ரஜாப்தீன் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் நாளை கூடும் அதியுயர் பீட கூட்டத்தில் 18வது திருத்தச் சட்டம் குறித்து முக்கிய கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதனிடையே ஜனாதிபதித் தேர்தலில் எந்த தரப்புக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழு எதிர்வரும் திங்கட் கிழமை கூடவுள்ளதாக அதன் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRWKYgq3.html

ராஜபக்ச சகோதரர்கள் இரண்டாவது முள்ளிவாய்க்காலை எதிர்கொள்கிறார்கள்: நிலாந்தன்
[ சனிக்கிழமை, 22 நவம்பர் 2014, 09:31.07 AM GMT ]
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலானது ராஜபக்ச சகோதரர்களுக்கு இரண்டாவது முள்ளிவாய்க்கால் போன்று அமையவுள்ளதாக சிரேஸ்ட ஊடகவியலாளர் நிலாந்தன் குறிப்பிட்டுள்ளார்.
2015 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் நாட்டில் பாரியதொரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. எதிர்காலத்தில் எவ்வாறானதொரு ஆட்சி அமையவுள்ளது, என்பது தொடர்பாக லங்காசிறி வானொலிக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszBRWKYgq5.html

Geen opmerkingen:

Een reactie posten