தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 25 november 2014

கட்சி மாறுவதற்காக, யாழ். எம்.பி. அப்பாத்துரை விநாயகமூர்த்திக்கு 5கோடி ரூபா! அவர் நிராகரித்தார்!- ஜேவிபி!

ரணிலை ஏமாற்றினார் சந்திரிகா! மைத்திரி களமிறங்க ரணில் இடமளிக்க மாட்டார்!- விமல் வீரவன்ச
[ செவ்வாய்க்கிழமை, 25 நவம்பர் 2014, 12:11.57 AM GMT ]
டிசம்பர் 8ம் திகதி எதிர்க்கட்சி பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன வேட்பு மனு தாக்கல் செய்ய மாட்டார். அதற்கு ரணில் விக்கிரமசிங்க இடமளிக்கமாட்டார். ஏனென்றால் அவர் ஏமாற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
நிதி அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியதாவது,
2010ம் ஆண்டுக்கு முன்னர் ஜனநாயக அரசாங்கம் அமைப்பது குறித்து பேசப்படவில்லை. மக்களின் உயிர்களையும் நாட்டையும் பாதுகாப்பது குறித்தே பேசப்பட்டது.
ரணில் விக்கிரமசிங்கவுக்கு பதிலாக கரு ஜயசூரியவை பொது வேட்பாளராக கொண்டு வருவதற்கே மாதுலுவாவே சோபித தேரர் முயன்றார்.
ஒரு வெளிநாட்டு தூதரகம் பொது வேட்பாளராக சந்திரிகா குமாரதுங்கவின் பெயரை சிபார்சு செய்தது. அதற்கு அவர் விரும்பினாலும் குடும்பத்தார் எதிர்த்ததால் அவர் பின் வாங்கினார்.
நூறு நாட்களில் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதாக எதிர்க்கட்சி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
64 பேருடன் வருவதாக சந்திரிகா குமாரதுங்க கூறியதாலேயே ரணில் விக்கிரமசிங்க, மைத்திரிபால சிறிசேனவுக்கு இணக்கம் தெரிவித்தார்.
ஆனால், அவர் தற்பொழுது ஏமாந்து விட்டார். அந்தக் கவலையிலேயே அவரல் இருக்கிறார்.
பட்டப்பகலிலே முழு ஐ.தே.க.வையும் சந்திரிகா குமாரதுங்க ஏமாற்றியுள்ளார்.
அதனாலே 24 மணி நேரத்தில் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க வேண்டும் என திஸ்ஸ அத்தநாயக்க கூறுகின்றார்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட ஐ.தே.க.வில் யாரும் இல்லையா? 20 வருடங்கள் காத்திருந்த ஐ.தே.க.வுக்கு சந்திரிகா பிரேரித்த நபரை ஏற்க நேரிட்டுள்ளது.
ஜனநாயகத்தை பலப்படுத்த வேண்டுமென்றால் அதனை செய்வோம். நல்லாட்சி ஏற்படுத்த வேண்டுமென்றால் அதனையும் செய்வோம். ஆனால், ஐ.தே.க.வை விற்று சொர்க்கம் செல்ல முயல்கிறார்கள்.
ரணில் விக்கிரமசிங்கவை தோற்கடிப்பதை விட இந்த பொதுவேட்பாளரை தோற்கடிப்பது இலகு.
டிசம்பர் 8ம் திகதி வேட்பு மனுத் தாக்கல் செய்யப் போவது மைத்திரிபால சிறிசேனவா ரணில் விக்கிரமசிங்கவா என பார்ப்போம்.
http://www.tamilwin.com/show-RUmszBRZKYfv4.html
கட்சி மாறுவதற்காக, யாழ். எம்.பி. அப்பாத்துரை விநாயகமூர்த்திக்கு 5கோடி ரூபா! அவர் நிராகரித்தார்!- ஜேவிபி
[ செவ்வாய்க்கிழமை, 25 நவம்பர் 2014, 12:53.43 AM GMT ]
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் கட்சி மாறுவதை தடுப்பதற்காக கொடுக்கப்படவுள்ள பணம் எங்கிருந்து வந்தது என்று வெளிப்படுத்த வேண்டும் என்று ஜே வி பி கோரியுள்ளது.
ஜே.வி.பி. யின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
பல அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து கொள்ள தயாராகவுள்ளனர்.
இந்தநிலையில் அவர்களின் மனங்களை மாற்ற பெருந்தொகை பணம் வழங்கப்பட்டுள்ளது.
இந்தவகையில் யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்திக்கு 50 மில்லியன் ரூபாய்களை வழங்க உறுதியளிக்கப்பட்டது.
எனினும் அவர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.
இந்தநிலையில் இந்தளவு தொகைப்பணம் எங்கிருந்து வந்தது என்பதை அரசாங்கம் வெளிப்படுத்தவேண்டும் என்று ஹேரத் கோரியுள்ளார்.
தமது அரசாங்கத்தில் உள்ளவர்களின் கோவைகள் தம்மிடம் இருப்பதாக பயமுறுத்தும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவ்வாறானவர்களை பாதுகாக்கும் ஒருவராக இருப்பதையிட்டு வெட்கப்படவேண்டும் என்று ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
எனவே குறித்த கோவைகளை மஹிந்த ராஜபக்ச வெளிப்படுத்தவேண்டும் என்று ஹேரத் கோரிக்கை விடுத்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRZKYfv6.html

Geen opmerkingen:

Een reactie posten