தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 25 november 2014

தமிழகத்தில் தமிழ் அகதி முகாம்கள் தீவிர கண்காணிப்பில்..

நுவரெலியாவிலும் ஜனாதிபதி மஹிந்தவை வெற்றி பெறச் செய்ய வேண்டும்: திகாம்பரம்
[ செவ்வாய்க்கிழமை, 25 நவம்பர் 2014, 01:59.58 AM GMT ]
நுவரெலியாவிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை வெற்றி பெறச் செய்ய வேண்டுமென தேசிய மொழிகள் பிரதி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
2010ம் ஆண்டில் ஜனாதிபதி மஹிந்தவை வீட்டுக்கு அனுப்பும் முயற்சியில் நாங்களும் ஈடுபட்டோம். எனினும் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த மகத்தான வெற்றியீட்டினார்.
பின்னர் அவரிடம் சென்று சேர்ந்து கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
இம்முறை ஜனாதிபதி தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை அமோக வெற்றியடைச் செய்ய வேண்டும்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி நுவரெலியாவில் தோல்வியைத் தழுவினார். ஏனெனில் நாம் எதிரணிக்கே ஆதரவளித்திருந்தோம்.
ஜனாதிபதி வெற்றியீட்டியதன் பின்னர் நாம் அவரிடம் சென்று பெருந்தோட்டப் பகுதியில் பாரியளவு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்துள்ளோம்.
மீண்டும் ஜனாதிபதிக்கு எதிராக செயற்பட முடியாது.
எனவே ஜனாதிபதி மஹிந்தவை வெற்றியடையச் செய்ய அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செற்பட வேண்டுமென பழனி திகாரம் கோரியுள்ளார்.
ஹற்றனில் அண்மையில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRZKYfwz.html
ரஷ்ய நாசகாரி கப்பல் கொழும்பு துறைமுகத்தில்..
[ செவ்வாய்க்கிழமை, 25 நவம்பர் 2014, 01:24.09 AM GMT ]
ரஷ்ய கடற்படை கப்பலான “யாரோஸ்லோவ்முட்ரி”  ( " Yaroslav Mudriy ")கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது 
நல்லெண்ண விஜயமாகவே குறித்த கப்பல் கொழும்பு வந்துள்ளது.
126.6 மீற்றர் நீளமுடைய நாசகாரி கப்பலான யாரோஸ்லோவ்முட்ரி 4489 தொன் எடையை கொண்டது. இதில் 210 கடற்படை வீரர்கள் உள்ளனர்.
இந்தக் கப்பல் எதிர்வரும் 28ம் திகதி வரை கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருக்கும்
http://www.tamilwin.com/show-RUmszBRZKYfwy.html
தமிழகத்தில் தமிழ் அகதி முகாம்கள் தீவிர கண்காணிப்பில்..
[ செவ்வாய்க்கிழமை, 25 நவம்பர் 2014, 01:05.23 AM GMT ]
தமிழக புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து, அங்கு உள்ள இலங்கை தமிழ் மக்கள் வாழும் முகாம்கள் கண்காணிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையை சேர்ந்த தமிழர் குழுவொன்று, நாகபட்டனம் மாவட்டத்தில் இருந்து சட்ட விரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முனைவதாக கிடைத்த தகவலையடுத்தே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நாகபட்டினத்தில் உள்ள தரங்கம்பாடி முகாமில் உள்ள இலங்கை தமிழர்கள் 30 லட்சம் ரூபா நிதியினை சேகரித்து படகு ஒன்றை கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ளதாக புலனாய்வு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இதற்கு சில இந்திய மீனவர்களின் உதவியும் கோரப்பட்டுள்ளதாக நியூ இந்தியா எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBRZKYfv7.html

Geen opmerkingen:

Een reactie posten