தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 6 november 2014

3வது தடவை விவகாரம்! திறந்த விவாதத்தை கோர சட்டத்தரணிகள் நடவடிக்கை - 7 நீதிபதிகள் குழு ஆராய்வு



உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தி ஒப்பாரி போராட்டம்!
[ வியாழக்கிழமை, 06 நவம்பர் 2014, 01:40.31 AM GMT ]
கொஸ்லந்த - மீரியபெத்த தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவில் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தியும் மலையக மக்களின் சொந்த வீடு, காணி பிரச்சினையை வலியுறுத்தியும் லிந்துலை - திஸ்பனை தோட்ட மக்கள் நேற்று ஒப்பாரி போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.
திஸ்பனை சந்தியில் ஒன்றுகூடிய மக்கள் பாதைகைகள் ஏந்தி கோஷங்கள் எழுப்பியவாறு சவப்பெட்டி ஒன்றையும் தூக்கிக் கொண்டு ஊர்வலமாக திஸ்பனை மைதானத்திற்குச் சென்றனர்.
அங்கு மலையக மக்களின் அவலத்தை கூறி தாய்மார் ஒப்பாரி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, நாகசேனை - டீமலை தோட்ட மக்களும் அனுதாபப் பேரணி சென்றனர். இதில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
http://www.tamilwin.com/show-RUmszBTaKXgr2.html
3வது தடவை விவகாரம்! திறந்த விவாதத்தை கோர சட்டத்தரணிகள் நடவடிக்கை - 7 நீதிபதிகள் குழு ஆராய்வு
[ வியாழக்கிழமை, 06 நவம்பர் 2014, 02:17.16 AM GMT ]
அரசியலமைப்பின் 18வது திருத்தத்தின் பிரகாரம் 3வது தடவை ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்சவுக்கு போட்டியிட முடியுமா முடியாதா? என்பது தொடர்பில் திறந்த விவாதத்தை உயர்நீதிமன்றத்தின் ஊடாக கோருவதற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரியவருகின்றது.
அதேவேளை, குறித்த மூன்றாம் முறை விவகாரம் தொடர்பில் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தலைமையிலான ஏழு நீதியரசர்கள் கொண்ட குழாம் ஆராயவிருப்பதாகவும் நீதிமன்றத்தின்; வியாக்கியானம், ஜனாதிபதி அலுவலகத்திற்கு வரும் திங்கட்கிழமை எழுத்து மூலம் அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
http://www.tamilwin.com/show-RUmszBTaKXgr3.html

Geen opmerkingen:

Een reactie posten