தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 24 november 2014

கிளிநொச்சி வட்டக்கச்சியில் முதன்முதலாக நிறுவப்பட்ட நாவலர் சிலை!

மட்டக்களப்பில் ஆஸி மற்றும் நியூசிலாந்து மருத்துவர்கள் பங்குபற்றிய இலவச பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை முகாம்
[ திங்கட்கிழமை, 24 நவம்பர் 2014, 01:28.28 PM GMT ]
எரிகாயங்கள், விபத்தில் ஏற்பட்ட அங்கவீனங்கள், பிறப்பால் ஏற்பட்ட குறைபாடுகளைச் சீர் செய்யும் இலவச பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை கிளினிக் இன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நடைபெற்றது.
சுகாதார அமைச்சின் அழைப்பின் பேரில் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த மருத்துவக் குழாம் இச்சிகிச்சை முகாமை நடாத்தியது.
நாளை முதல் இரண்டு வாரங்கள் வரை இன்று தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான சத்திரசிகிச்சை நடைபெறும் என மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிளாஸ்டிக் சத்திர சிகிச்சைப் பிரிவின் வைத்திய அதிகாரி கே. ஜெயசுதன் தெரிவித்தார்.
இது தொடர்பான ஆரம்ப நிகழ்வு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் இப்ராலேப்பை தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வைத்தியர்கள்,தாதியர்கள் கலந்துகொண்டனர்.
மருத்துவக் குழுவில் சத்திரசிகிட்சை நிபுணர்களான ஜேம்ஸ் சவுந்திரா மற்றும் பீட்டர் கேவோட், மயக்க மருந்து கொடுக்கும் வைத்தியர்களான நரின்டா டீ மெல் மற்றும் பெனலோப் குளுஸ் ரோஸ், தாதியர்களாக கிலன் பத்தகே, ஜெனீபர் பெர்னன் ஆகியோரோடு பிளாஸ்டிக் மீள்கட்டமைப்பு சத்திர சிகிச்சை நிபுணர்களான எச்.ஏ.எஸ். ரட்னாயக்கா மற்றும் சாந்தினி பெரேரா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது சிகிச்சை தேவை எனக் கருதும் 150க்கும் மேற்பட்டவர்கள் இம்முகாமில் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி வட்டக்கச்சியில் முதன்முதலாக நிறுவப்பட்ட நாவலர் சிலை
[ திங்கட்கிழமை, 24 நவம்பர் 2014, 01:57.03 PM GMT ]
தமிழுக்கும் சமயத்துக்கும் பெருந்தொண்டாற்றி தமிழ் காத்தும் தமிழர் தம் அறிவும் அறமும் காத்தும் நம்மண்ணின் பாரம்பரியத்தில் அழியாப் புகழ் கொண்ட பெருமகன் நல்லை நாவலருக்கு இன்று வட்டக்கச்சி மண்ணில் சிலை வைத்து பெருமை கண்டது நம் மண்ணின் தமிழ் காக்கும் தலைமுறை.
நாவலர் பற்றி சுவாமி விபுலானந்தர் கீழ்வருமாறு பாமாலை சூட்டினார்.
“பாவலர் போற்றும் ஞான தேசிகரை
பணிந்தவராணையின் வண்ணம்
பூவலர் கொன்றை புனைந்தவர் புகழைப்
புலமிகு மறிவர் கூட்டுண்ணக்
காவலர் வியப்ப உரைத்திடல் கேட்டுக்
கருணைகூர் தேசிகர் இவர்க்கு
நாவலரெனும் பேர் தகுமென அளித்தார்
ஞாலத்தார் தகுந்தகும் என்ன?"
1822 ல் பிறந்த யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர் சைவசமயம் தழைத்தோங்க பாடுபட்ட பெருந்தகைஎன வரலாறு சொல்கின்றது.
மொழியில் பாண்டத்தியம் உடைய ஆறுமுகநாவலர் ஏராளம் அறிவுப் பொக்கிசங்களை வருங்காலத்திற்கு படைத்துச் சென்றிருக்கின்றார்.
அந்த போற்றத்தகு காவலனின் சிலையை வட்டக்கச்சி முருகன் ஆலய வளாகத்தில் இன்று நிறுவி இருக்கின்றது நம் சமுகம்.
முன்னாள் கூட்டுறவு துறையின் பொது முகாமையாளரும் சமுக அபிமானியுமான புவனேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், நாவல் நற்பணி மன்றத்தலைவர் அருமையானந்தம், அதன் உபதலைவர் கொழும்பு றோயல்கல்லூரியின் பிரதிமுதல்வரும் தமிழ் புத்திஜீவியுமான மா.கணபதிப்பிள்ளை மற்றும் அறநெறித்துறை தமிழ்மொழி வளர்ச்சியில் பங்காற்றும் ஓய்வுபெற்ற சமயபாட ஆசிரிய ஆலாசகர் திருமதி.செல்வராணி, பண்டிதர் மகாலிங்கம், கரைச்சி பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தர் ,அதிபர்கள், ஆசிரியர்கள் அப்பகுதி கிராம சேவையாளர்கள் என நாவலர் சிலை நிறுவும் வைபவபத்தில் கலந்து நாவலரின் புகழ்பேசியும் கேட்டும் பெருமை சேர்த்துள்ளனர்.
வட்டக்கச்சி மகா வித்தியாலயத்தில் இருந்து நாவலரின் சிலை ஊர்தியில் பூரணகும்பம் வைத்த மக்களின் வணக்கம் வரவேற்புடன் வட்டக்கச்சி முருகன் ஆலயத்திற்கு எடுத்து வரப்பட்டு முருகன் ஆலயத்தில் நிகழ்வுகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Geen opmerkingen:

Een reactie posten