தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 3 december 2014

அமெரிக்கா எதிர்பாராத திடீர் திருப்பம்! சிரியாவில் ISIS சக்கை போடு போட போகிறது !

அமெரிக்க விமானத் தாக்குதல்கள் சிரியாவில், யாரும் எதிர்பாராத மாற்றம் ஒன்றை ஏற்படுத்த தொடங்கியுள்ளது – சிரியா ராணுவத்துக்கு எதிராக (அமெரிக்க ஆதரவுடன்) யுத்தம் புரியும் போராளி இயக்கத்தினர் (FSA – Free Syrian Army) குழு, குழுவாக ISIS இயக்கத்துடன் கூட்டணி சேர தொடங்கியுள்ளார்கள். அமெரிக்கா எதிர்பாராத திருப்பம் இது – ISIS இயக்கத்தை அழிப்பதற்காக தொடங்கப்பட்ட விமானத் தாக்குதல்கள் பூமராங் ஆகி, இப்போது ISIS இயக்கத்தை பலப்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
சிரியா ராணுவத்துக்கு எதிராக அமெரிக்க ஆதரவுடன் யுத்தம் புரியும் போராளி இயக்கம் என்பது, FSA என்று ஒற்றைப் பெயரில் அழைக்கப்பட்டாலும், அதற்குள் பல குழுக்கள் அல்லது இயக்கங்கள் உள்ளன. சிரியாவில் அமெரிக்க விமானத் தாக்குதல்கள் தொடங்கப்பட்டபின், ISIS இயக்கத்தை அமெரிக்கா கவனித்துக் கொள்ளட்டும் என விட்டுவிட்ட சிரியா ராணுவம், இப்போது முன்பைவிட மூர்க்கமாக இந்த போராளி இயக்கங்களை தாக்க தொடங்கியுள்ளது.
அதிலேயே, போராளி இயக்கங்கள் திணறுகின்றன. போதும் போதாதற்கு ISIS இயக்கத்தினரும் இவர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர்.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த போராளி இயக்கத்தினர், பொதுமக்கள் ஆதரவையும் இழக்க தொடங்கியுள்ளனர். காரணம், சிரியாவில் பொதுமக்களிடையே பரவலாக உள்ள ‘அமெரிக்க எதிர்ப்பு’ அலை. பொதுமக்களில் ஒரு பகுதியினர், அச்சம் கொள்வதற்கு காரணம் – முன்பு ஈராக்கை அமெரிக்க ராணுவம் கைப்பற்றி, ஆண்டுக் கணக்கில் வைத்திருந்தது போன்ற நிலை சிரியாவிலும் ஏற்படலாம் என்பதுதான். இந்த சாத்தியத்தை அங்குள்ள பலர் விரும்பவில்லை. பொதுமக்களில் மற்றொரு சாரார் என்ன சொல்கிறார்கள் என்றால், “சிரியா ராணுவம் எமது பகுதிகளை தாக்கியபோது, அமெரிக்காவோ, வேறு எந்த நாடோ உதவிக்கு வரவில்லை. ஆனால் ISIS இயக்கம் சிறு சிறு நிலப்பகுதிகளை கைப்பற்றியவுடன், போர் விமானங்களுடன் வந்துள்ளார்கள். இதுதான் அமெரிக்கர்களின் லட்சணம்” என்கிறார்கள்.
இந்த மனநிலை பொதுமக்களிடையே அதிகமாகி வருவதால், அமெரிக்க ஆதரவு நிலையில் உள்ள போராளி இயக்கத்தினர், பொதுமக்களின் ஆதரவை இழக்க தொடங்கியுள்ளார்கள். இப்படியான நிலையில்தான், இதுவரை அமெரிக்க ஆதரவு நிலைப்பாட்டில் இருந்த போராளி இயக்கத்தில் உள்ள வெவ்வேறு குழுக்கள், ISIS இயக்கத்தினருடன் சமாதான ஒப்பந்தம் செய்துகொள்ள தொடங்கியுள்ளனர். அவர்களுடன் இணைந்து (அமெரிக்காவுக்கு எதிராக) போராடவும் தொடங்கியுள்ளனர். “ISIS இயக்கம் இப்போது இஸ்லாமியர்களை காந்தம் போல கவர தொடங்கியுள்ளது. அமெரிக்க எதிர்ப்பு மனநிலையால், பலனடைவது, ISIS இயக்கம்தான்” என்கிறார், அபு தல்ஹா. இவர், போராளி இயக்கத்தில் உள்ள குழு ஒன்றின் தலைவர். தற்போது, ISIS இயக்கத்துடன் கூட்டணி சேர்ந்துள்ளார். “எமது இயக்கம் போலவே, மற்ற சிறுசிறு இயக்கங்களும் இப்போது ISIS இயக்கத்துடன் பேச்சுவார்த்தைகளை தொடங்கியுள்ளனர்.
விரைவில் அல்-நுஸ்ரா (சிரியாவின் அல்-காய்தா பிரிவு) இயக்கம்கூட ISISயுடன் கூட்டணி சேரவும் வாய்ப்பு உள்ளது” என்றும் கூறுகிறார் அவர். “அமெரிக்கர்கள் ISIS இயக்கத்தினர் மீது தாக்குதல் நடத்த தொடங்கியபின், நாம் ISIS இயக்கத்துக்கு எதிரான எந்த நடவடிக்கையில் ஈடுபட்டாலும், மக்கள் ஆதரவை முழுமையாக இழக்க நேரிடும். இதனால், ISIS இயக்கத்துடன் கூட்டணியில் இணைவதை தவிர எமக்கு வேறு தெரிவு ஏதும் கிடையாது” என்கிறார், அசாம் முராட். அசாம் முராட், ஹொம்ஸ் நகரில் உள்ள போராளி இயக்கத்தில், 600 போராளிகளை கொண்ட ஓரளவு வலிமையான அணியை சேர்ந்தவர். இதுவரை ISIS இயக்கத்தை தாக்கிவந்த இவரது அணி, இப்போது ISIS இயக்கத்துடன் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. அமெரிக்காவே எதிர்பார்த்திருக்க முடியாத இந்த திடீர் மாற்றம், உடனடியாக சிரியாவிலும், அதன்பின் ஈராக்கிலும் ISIS இயக்க கொடியை உயரப் பறக்கவிட போகிறது!

http://www.athirvu.com/newsdetail/1567.html

Geen opmerkingen:

Een reactie posten