[ சனிக்கிழமை, 27 டிசெம்பர் 2014, 05:00.47 PM GMT ]
மட்டு. மாவட்ட இந்து இளைஞர் பேரவை விடுத்துள்ள அறிக்கையில்,
கடந்த இருவாரமாக மட்டக்களப்பில் பெய்து கொண்டிருக்கும் தொடர்மழை காரணமாகவும், குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டமையினாலும் பல கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
இதனால் பாதிப்புக்குள்ளான மக்கள் இடம் பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
இவ்வகையில் மாவட்டத்தில் 103 முகாம்களில் 12012 குடும்பங்களைச் சேர்ந்த 41419 நபர்களும், உறவினர் வீடுகளில் 38329 குடும்பங்கள் சேர்ந்த 136184 பேர்களும் தஞ்சமடைந்துள்ளனர்.
தஞ்சமடைந்த முகாம்களிலும் மக்களுக்கு அரசாங்கத்தின் அனர்த்த சேவைப் பிரிவு மூன்று வேளை உணவுகளை மாத்திரம் வழங்கிக் கொண்டிருக்கிறது.
இம்மக்களுக்கான ஏனைய அடிப்படை உதவிகளான சிறுவர்களுக்கான பால்மா, பெரியார்களுக்கான பால்மா, வெட்சீற், பாய், உடைகள், சோப், துவாய், சிறுவர்களுக்கான சுகாதாரப் பொருட்கள், நுளம்பு வலை, சிக்னல், விறஸ், சமையல் பாத்திரங்கள், உணவு உண்ணும் பாத்திரம் எனும் அவசியப் பொருட்கள் தேவையாக உள்ளதுடன் அவர்கள் மீண்டும் தமது இருப்பிடம் செல்லும் போது அவர்களுக்கான உலர் உணவுப் பொருட்கள் போன்றவை தேவையாக உள்ளது.
எனவே மனித நேய உணர்வு மிக்க எமது உறவுகள் கீழ்வரும் முறைகளில் தங்களது உதவிகளை வழங்கலாம்.
பொருள் உதவிகளை மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை, மாவட்ட காரியாலயம், இல – 84, பார்வீதி, மட்டக்களப்பு. என்ற முகவரியிலோ அல்லது நிதி உதவியானால் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை என்ற பெயரில் உள்ள கீழ்காணும் வங்கி கணக்கு மூலமோ அனுப்பலாம்.
நிதி, பொருள் உதவி வழங்குவோருக்கு அவர்கள் வழங்கிய தொகைகளை உறுதிப்படுத்தும் பற்றுச்சீட்டு, நன்றி நவிலல், உதவிகள் வழங்கியமைக்கான புகைப்படங்கள் அமைப்புக்கள், ஆலயங்கள் போன்றவற்றின் வெனர் பாவிக்கப்பட்ட வழங்கல் உட்பட்ட வகைகள் தங்களுக்கு அனுப்பப்படும்.
உதவி வழங்குவோர் தங்களது விபரங்களை எங்களது மேலுள்ள ஈமெயிலில் தெரிவித்தல் அவசியமாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கொமர்ஷல் வங்கி கணக்கு இல: 1105040264
Swift Code cceylklx Commercial Bank
Swift Code cceylklx Commercial Bank
http://www.tamilwin.com/show-RUmszCRbKafoz.html
போர்க்குற்றத்துக்கு எதிராக இராஜதந்திர போர்! பொதுவேட்பாளர் எதிரணி
[ சனிக்கிழமை, 27 டிசெம்பர் 2014, 04:51.18 PM GMT ]
போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணைகளின் மூலம் நாட்டை சீரழிக்கும் செயற்பாடுகளுக்கு எதிராக இராஜதந்திர போரை நடத்தப் போவதாக பொதுவேட்பாளர் எதிரணி தெரிவித்துள்ளது.
ஜாதிக ஹெல உறுமயவின் செயலாளர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
கொழும்பு பொரளை பகுதியில் மைத்திரிபால சிறிசேனவுக்காக வீடுவீடாக சென்று பிரசாரம் நடத்தும் நடவடிக்கையின்போதே ரணவக்க இதனை குறிப்பிட்டார்.
இந்தநிலையில் அடுத்த ஞாயிற்றுக்கிழமைக்கு முன்னர் மைத்திhபாலவின் தேர்தல் அறிக்கை இலங்கையின் அனைத்து வீடுகளுக்கும் விநியோகிகப்பட்டு விடும் என்றும் அவர் தெரிவித்தார்.
போர்க்குற்றச்சாட்டு தொடர்பி;ல் உள்நாட்டு விசாரணை நடத்தப்படும் என்று மஹிந்தவின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் பொது எதிரணி ஒருபோதும் ஒரு இராணுவ வீரரையும் போர்க்குற்றச்சாட்டின்பேரில் வெளிநாட்டுக்கு அனுப்பாது என்றும் சம்பிக்க ரணவக்க கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCRbKafoy.html
Geen opmerkingen:
Een reactie posten