தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 27 december 2014

மாணவர்கள் மீது பொலிஸ் தாக்குதல்: அமைச்சர் கண்டனம்



சீரற்ற வானிலையால் மக்களின் இயல்பு வாழக்கை பாதிப்பு! இதுவரை 15 பேர் பலி 12 பேர் மாயம்
[ சனிக்கிழமை, 27 டிசெம்பர் 2014, 05:29.48 AM GMT ]
நாட்டில் தற்போது நிலவிவரும் சீரற்ற காலநிலையால் இதுவரை 15 பேர் உயிரிழந்தனர் என்றும், 12 பேர் காணாமல் போயிருக்கின்றனர் என்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்தது.
அத்துடன் 9 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டனர் என அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் சரத் லால் குமார தெரிவித்தார்.
கடந்த சில நாட்களில் மட்டும் பல மாவட்டங்களிலும் தொடரும் அனர்த்தப் பாதிப்புக்களால் 17 ஆயிரத்து 200 வீடுகள் முழுமையாகவும், பகுதியளவிலும் சேதடைந்தன என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
அத்துடன் பதுளை, ரில்பொல பிரதேசங்களில் இடம்பெற்ற மண்சரிவுகளில் 15 பேர் உயிரிழந்தனர் என்றும் 12 பேரைக் காணவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
சீரற்ற வானிலையால் மக்களின் இயல்பு வாழக்கை பாதிப்பு
சீரற்ற வானிலையால் மக்களின் இயல்பு வாழக்கை பாதிப்பு அடைந்துள்ளது. குறிப்பாக மண்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.
இதேவேளை, மண்சரிவு, மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளமையால் பல பிரதான வீதிகளின் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பிதமடைந்துள்ளது.
கண்டி வத்தேகம பம்பரல்ல பிரதான வீதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளமையால் வீதியுடனான போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்திருந்தது. தற்போது வழமைக்கு மாறியுள்ளது.
மேலும், ஹட்டன் நுவரெலியா வீதியில் நானுஓயா பங்களாஅத்த பகுதியில் ஏற்பட்டுள்ள மண்சரிவு காரணமாக போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டிருந்தது.
இதனிடையே, பதுளை , பசறை பிரதான வீதியில் ஆறாம் கட்டை பகுதியில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளமையாலும் பசறை மடுல்சீமை – எக்கிரிய வீதியில் மண்சரிவு ஏற்ட்டமையாலும் பல மணி நேரம் போக்குவரத்துக்கு சிக்கல் ஏற்பட்டிருந்தது.
இதேவேளை, மண்சரிவு அபாயம் விடுக்கப்பட்டுள்ள 11 மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளிலும் மண்சரிவு, கற்பாறை புரள்வுகள் ஏற்படக்கூடிய அபாயம் நிலவியுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக ஹட்டன் , நுவரெலியா மற்றும் பதுளை மஹியங்கனை ஆகிய பகுதிகளில் வீதிகளில் மண்சரிவு அபாயம் நிலவுவதால் மிக அவதானத்துடன் செயற்படுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பலத்த மழையினால் பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவிக்கின்றது. களனி கங்கை மற்றும் நில்வளா கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.
களனிகங்கையின் நாகலகம்வீதிய நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் மூன்று தசம் 2 அடி வரை உயர்ந்துள்ளது.
அனர்த்த அபாய எச்சரிக்கை தொடர்பில், களினி கங்கையை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென அவர் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.
இதேவேளை, மவுஸாக்கலை, காசல்ரீ, கொத்மலை ஆகிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால், காசல் ரீ நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறந்துவிடப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனா்.
மவுஸாக்கலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் எந்நேரமும் திறக்கப்படலாம் என அதிகாரிகள் மேலும் தெரிவிக்கின்றனா்.
இதனால் களனி கங்கையின் நீர்மட்டம் அதிகரிக்கக்கூடுமெனவும், கங்கையின் இரு மருங்கிலும் உள்ளவர்களை பாதுகாப்பாக இருக்குமாறும் இடர் முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தியுள்ளது.
கொழும்பு – குருநாகல் வீதியின் ஐந்தாம், ஆறாம் பிரிவுகளில் வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. மேலும், நுவரெலியா நகருக்குள் பிரவேசிக்கும் பிரதான வீதிகள் சிலவற்றில் மண்மேடு சரிந்துள்ளதால் போக்குவரத்து
தடைப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் டீ.பி.ஜி குமாரசிறி குறிப்பிட்டார்.
எட்டியாந்தோட்டை பிரதேசங்களின் 53 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதேவேளை, மண்மேடு சரிந்து விழுதல் மற்றும் கற்பாறைகள் உடைந்து விழுதல் காரணமாக, பதுளையில் இருந்து, பஸ்ஸர, மகியங்கனை, வெலிமடை மற்றும் பண்டாரவளை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
மாத்தளை, நாவுல, நாலந்தா நீர்த்தேக்கத்தின் மட்டத்தில் இருந்து 03 அடிக்கு மேலாக நீர் வெளியேற்றப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் 27 வருடங்களின் பின்னர் திறந்துவிடப்பட்டுள்ளதாகவும், அதனால் சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பதுளை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள மண்சரிவு அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.
கல்கந்த பகுதியில் வீடொன்றின் மீது, மற்றுமொரு வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஹெகொட பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில், இருவர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், பஹலகம பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் மற்றுமொரு பெண் உயிரிழந்துள்ளார். பதுளை – மகியங்கனை வீதியின், சிறிகெத்த பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் மற்றுமொரு பெண் உயிரிழந்துள்ளதாக அப்பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனா்.

இதேவேளை, வேவல்ஹிண்ண ரில்பொல – மெதகம பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் வீடுகள் சிலவற்றுக்கு பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்த அனர்த்தத்தில் 10 பேர் காணாமல் போயுள்ளதாகவும் காணாமல் போனவர்களில் இரண்டு பெண்களும், 5 சிறுவர்களும் அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே பண்டாரவளை நாயபெத்த நடுகணக்கு பகுதியில் மண்சரிவு அபாயம் காரணமாக 60 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளாதக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், மண்சரிவில் சிக்கி காணாமற்போனவர்களை மீட்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் இராணுவம், பொலிஸார், பிரதேசவாசிகள் ஈடுபட்டிருக்கின்றனா்.
http://www.tamilwin.com/show-RUmszCRbKagt7.html

அக்குரஸ்ஸ பிரதேசத்தில் மகிந்தவின் தேர்தல் காரியாலயம் இனந்தெரியாதோரால் தாக்குதல்
[ சனிக்கிழமை, 27 டிசெம்பர் 2014, 05:35.32 AM GMT ]
அக்குரஸ்ஸ பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் காரியாலயம் மீது இனந்தெரியாதோர் தாக்குதல் நடாத்தி சேதம் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தாக்குதலை மேற்கொண்டவர்கள் தொடர்பில் இதுவரை அறியப்படவில்லை. இக்காரியாலயத்தில் வைக்கப்பட்டிருந்த பிரச்சாரப் பதாதைகளுக்கும் பாரியளவில் சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
http://www.tamilwin.com/show-RUmszCRbKaguy.html
கடலுக்கு செல்பவர்கள் அவதானத்துடன் செல்லவும்: எச்சரிக்கை
[ சனிக்கிழமை, 27 டிசெம்பர் 2014, 05:44.32 AM GMT ]
புத்தளத்தில் இருந்து பொத்துவில் ஊடாக காங்கேசன்துறை வரையான கடற்பகுதியைச் சூழவுள்ள கடற்தொழிலில் ஈடுபடுபவர்கள் சீரற்ற காலநிலை குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
கடல் பிரதேசங்களில் அடை மழை மற்றும் கடல் கொந்தளிப்பாக காணப்படும் வாய்ப்புள்ளதாக நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் கொடிபிலி தெரிவித்தார்.
மேலும் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 150 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சிக்கான வாய்ப்புள்ளதாகவும் வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.
மழை நேரங்களில் இடி, மின்னல் தாக்குதல்களினால் ஏற்படும் பாதிப்புக்களைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் மக்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszCRbKaguz.html
ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய மாகாண சபை உறுப்பினர் மஹிந்தவுக்கு ஆதரவு
[ சனிக்கிழமை, 27 டிசெம்பர் 2014, 05:48.03 AM GMT ]
ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஒருவர் மஹிந்தவுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய மாகாண சபை உறுப்பினர் சித்ரா மந்திலகவே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCRbKagu0.html
யாழில் வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்
[ சனிக்கிழமை, 27 டிசெம்பர் 2014, 05:52.28 AM GMT ]
யாழ்ப்பானம், கொடிகாமம் - நாவலடி பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார் மற்றுமொறு பெண் காயமடைந்துள்ளார்.
பாதையில் பயணித்த வான் பாதையை கடந்துக்கொண்டிருந்த இரண்டு பெண்கள் மீது மோதியதனால் இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ் விபத்தில் உயிரிழந்தது மூன்று பிள்ளைகளின் தாய் என கொடிகாமம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

http://www.tamilwin.com/show-RUmszCRbKagu1.html
மாணவர்கள் மீது பொலிஸ் தாக்குதல்: அமைச்சர் கண்டனம்
[ சனிக்கிழமை, 27 டிசெம்பர் 2014, 06:03.00 AM GMT ]
உயர் தேசிய டிப்ளோமா கற்கை நெறி மாணவர்களின் போராட்டத்தின் போது நடத்தப்பட்ட பொலிஸ் தாக்குதலை அரசாங்க அமைச்சர் கண்டித்துள்ளார்.
இளைஞர் விவகார அமைச்சர் டளஸ் அழகப்பெரும இந்த கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
கடந்த 22 ஆம் திகதியன்று குறித்த மாணவர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன்னிலையில் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
இதன்போது ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸார் பலாத்காரத்தை பிரயோகித்தனர்.
இந்தநிலையில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமையை கண்டிப்பதாக அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
இளைஞர் விவகார அமைச்சர் என்ற வகையில் இந்த செயலை ஏற்றுக்கொள்ளமுடியாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை குறித்த சம்பவத்தின் போது சில பொலிஸ் அலுவலர்களின் செயற்பாடுகளை நியாயப்படுத்த முடியாது.
எனவே குறித்த பொலிஸ் அலுவலர்களின் நடவடிக்கை குறித்து விசாரணைகள் நடத்தப்படுவதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்
http://www.tamilwin.com/show-RUmszCRbKagu2.html

Geen opmerkingen:

Een reactie posten