தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 30 december 2014

சொல்லிவைத்தது போல பிரிட்டனை தாக்கியது "எபொல்லா" வைரஸ்: இனி அனைவரும் ஜாக்கிரதையாக ... !

ஆபிரிக்க நாடுகளை எபொல்லா வைரஸ் தாக்கிக்கொண்டு இருக்கும்வேளை, வெகு விரைவில் இது பிரித்தானியாவுக்கும் பரவலாம் என்று அதிர்வு இணையம் எதிர்வு கூறியிருந்தது அனைவருக்கும் நினைவில் இருக்கலாம். ஆம் ! தற்போது ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் உள்ள ரத்த பரிமாற்று சேவை வைத்தியசாலையில் உள்ளவர்களுக்கு "எபொல்லா" வைரஸ் தாக்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை NHS தற்போது உறுதி செய்துள்ளது. இவர்களோடு தொடர்பில் இருந்த எத்தனை நபர்களுக்கு இந்த வைரஸ் தொற்றியுள்ளது என்று தெரியவில்லை. இதேவேளை இவர்கள் ரத்த வங்கியில் வேலைசெய்யும் நபர்கள் என்பதனால், எத்தனை மருத்துவமனை மற்றும் சர்ஜரிகளுக்கு இந்த வைரஸ் பரப்பப்பட்டுள்ளது என்று தெரியவில்லை.
பிரித்தானியாவில் உள்ள மிகவும் முக்கியமான இடத்தில் இந்த வைரஸ் பரவியுள்ளமை, பெரும் அச்சத்தை தோற்றுவித்துள்ளது. லண்டனில் இருந்து ஸ்காட்லான் மிகவும் தொலைவில் தான் உள்ளது. இருப்பினும் எவரால் இந்த வைரஸ் லண்டனுக்குள் கொண்டுவரப்படவுள்ளதோ தெரியவில்லை. குறித்த இந்த வைரஸ் வௌவால் உடலில் காணப்படுகிறது. ஆனால் அவை வௌவால் உடலை தாக்குவது இல்லை. இதன் இறைச்சியை மனிதர் உட்கொண்டால் அந்த வைரஸ் உடனே மனிதரை தாக்க ஆரம்பிக்கிறது. இதேபோலத்தான் எயிட்ஸ் வைரசும்ஒரு வகை குரங்குகளில் காணப்படுகிறது. அவை அக் குரங்கின் உடலை தாக்குவது இல்லை. ஆனால் மனிதர்களை தாக்குகிறது.
பிரித்தானியாவில் தோன்றியுள்ள இன் நிலையை, அரசு எவ்வாறு கையாளப் போகிறது என்று தெரியவில்லை. இது நாம் நினைப்பதை விட மிக மோசமாக பரவலாம்.எனவே தமிழர்கள் ஜாக்கிரதை. ஒருவிதமான திடீர் காச்சல். மூச்சு விட திணறல், மற்றும் சளி காணப்பட்டால் உடனே மருத்துவரை அணுகி தகுந்த சிகிச்சை எடுப்பது நல்லது.


Geen opmerkingen:

Een reactie posten