[ ஞாயிற்றுக்கிழமை, 28 டிசெம்பர் 2014, 11:37.41 AM GMT ]
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தேர்தல்கள் ஆணையாளரால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் யூ.அமரதாஸ குறிப்பிட்டுள்ளார் .
வாக்காளர் அட்டை விநியோகம் கடந்த 22ம் திகதி ஆரம்பிக்கப்பட்டதோடு, எதிர்வரும் 31ம் திகதி நிறைவடையவிருந்தது. சில மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இந்த நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதுவரை 55% , 60% வீதமான வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்றைய தினம் விசேட விநியோகிக்கும் தினமாக கொண்டு வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பதாக தபால் திணைக்கள அதிகாரி ரோஹன அபேரத்ன தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszCRcKafs5.html
மலையகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்: உதயகுமார்- லயன் வாழ்க்கையை இல்லாதொழிப்போம்: பி.இராஜதுரை
[ ஞாயிற்றுக்கிழமை, 28 டிசெம்பர் 2014, 11:51.37 AM GMT ]
மலையகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸிலிருந்து விலகி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு தெரிவித்த மத்திய மாகாண சபை உறுப்பினா் உதயகுமார் தெரிவித்தார்.
எதிர்க்கட்சி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு தெரிவித்து நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஜக்கிய தேசிய கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளருமான பி.இராஜதுரையுடன் இணைந்து ஹட்டன் பிரிண்ஸ் மண்டபத்தில் நடைபெற்ற பிரச்சாரச் கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவா் மேலும் உரையாற்றுகையில்,
அவா் மேலும் உரையாற்றுகையில்,
மக்களின் தேவைகளை அறிந்து நாம் சேவை செய்வோம். மலையகத்தில் உள்ள அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து கட்சி பேதங்களின்றி, தொழிற்சங்க பேதங்களின்றி அனைத்து மக்களுக்கும் தேவையான சேவைகளையும் எந்தவித பாகுபாடு இன்றியும் நேர்மையாகவும் ஒழுக்கமாகவும் செய்வோம்.
மக்களின் பிரச்சினைகளை தீா்ப்பதற்காக நாம் ஒன்றுப்பட்டு ஒரே நோக்கத்தோடு மலையக மக்களின் பிரச்சினைகளை குறுகிய காலத்திற்குள் தீர்வுகளை பெற்றுக்கொடுப்போம்.
ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி எதிர்காலத்தில் ஒரு சுபீட்சமான மலையகத்தை ஏற்படுத்தி, மலையக மக்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக நாங்கள் இந்த அரசியலில் செயற்படுவோம் என தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினரும் ஜ.தே.கவின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளருமான பி.இராஜதுரை கருத்து தெரிவிக்கையில்,
மலையக மக்களுக்கு லயன் வாழ்க்கை முறையை இல்லாதொழித்து காணி உரிமையுடன் கூடிய தனி வீடு அமைப்பு திட்டம் மற்றும் நுவரெலியா, பதுளை, மாத்தளை, கண்டி, கேகாலை ஆகிய மாவட்டங்களில் உயர்தரத்திலான பாடசாலைகள் அமைத்தல் என இந்த இரண்டு விடயத்தையும் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தோடு மலையக மக்களின் தேவைகளை அறிந்து செயற்பட இருப்பதாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஜக்கிய தேசிய கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளருமான பி.இராஜதுரை தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினா் பி.இராஜதுரை மற்றும் ஜக்கிய தேசிய கட்சியின் மத்திய மாகாண சபை உறுப்பினரும் மஸ்கெலியா தொகுதியின் அமைப்பாளருமான கே.கே. பியதாஸ என பல முக்கியஸ்தா்களும் கலந்து கொண்டனர்.
http://www.tamilwin.com/show-RUmszCRcKafs6.html
Geen opmerkingen:
Een reactie posten