தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 30 december 2014

மைத்திரிக்கு கூட்டமைப்பு ஆதரவு வழங்கினால் தமிழர்களை படுகொலை செய்வதற்கு ஒப்பானது: பிள்ளையான்



பசீர் சேகுதாவூத் இராஜினாமா கடிதம்! முஸ்லிம் மக்கள் சீற்றம்! - இறைவனுக்கு அடுத்தபடியாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச!
[ செவ்வாய்க்கிழமை, 30 டிசெம்பர் 2014, 07:33.28 AM GMT ]
பல்வேறு இழுத்தடிப்புகளுக்குப் பின்னர் எல்லோரும் எதிர்பார்த்திருந்த முஸ்லிம் காங்கிரசின் முடிவு எதிரணிக்கு சாதகமாக அமைந்தது.
கிழக்கில் தேர்தல் நடவடிக்கைகள் சூடுபிடிக்கின்ற தருணத்தில் மு.கா தவிசாளர் பசீர் சேகுதாவூத்தின் பதவி விலகல் கடிதம் பல்வேறு சந்தேகங்களை தோற்றுவிக்கிறது.
ஏதோ தான் வேண்டாவெறுப்பில் கட்சி முடிவுக்கு அடிபணிந்ததாக சொல்லும் இந்த அமைச்சர் முஸ்லிம் மக்களின் நாடித்துடிப்பை அறியாதவராக இவ்வளவு காலமாக பாராளுமன்ற உறுப்பினராக, அமைச்சராக இருந்தது வியக்க வைக்கிறது.
எதிரணியில் சேர்ந்து கொண்டு ஜனாதிபதி மகிந்தவின் வெற்றிக்காக இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் என்று சொல்வது யாராலும் நியாயப்படுத்த முடியாத கூற்றாகும்.
இதைவிட அவர் அரசாங்கத்துடனே இணைந்து கொண்டிருக்கலாம் என்பதே பலரது கருத்தாகும். முஸ்லிம்களுக்கு இந்த நாட்டில் ஏற்பட்ட பிரச்சினைகளின் போது வாய்மூடி மௌனியாக இருந்து விட்டு, நாட்டில் ஜனாதிபதி நல்லிணக்கத்தை ஏற்படுத்தினார் என்று குறிப்பிட்டிருப்பது முஸ்லிம்களை காட்டிக் கொடுக்கும் செயலுக்கு ஒப்பானதாகும்.
சேனைகளை உருவாக்கி இஸ்லாமிய நெஞ்சங்களை புண்படுத்தி, புனித குர்ஆன் வசனங்களை திரிபுபடுத்தி, அல்லாஹ்வுக்கு உருவம் செய்து எம் மார்க்கத்தை களங்கத்திற்கும் எம்மை கலக்கத்திற்கும் உட்படுத்தி வேடிக்கை பார்த்த நாட்டின் தலைவருக்கு அவர் நற்பெயருக்கு களங்கம் ஏற்படாதவாறு தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்வேன் என்று தனது பதவி விலகல் கடித்ததில் குறிப்பிட்டிருப்பது எம்மை மேலும் சீற்றமடைய வைக்கிறது.
முஸ்லிம் கட்சிகள் தற்போதே தமது முடிவுகளை அறிவித்தாலும் முஸ்லிம்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று அவர்களுக்கு முன்னரே தீர்மானித்து விட்டார்கள்.
இறைவனுக்கு அடுத்தபடியாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச!-  பஷீர் சேகுதாவூத் புகழாரம்
நாட்டு மக்களை பாதுகாப்பதில் விசேடமாக முஸ்லிம் மக்களின் பாதுகாப்பிற்கு இறைவனுக்கு அடுத்தபடியாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீது  நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் கட்சியின் முடிவுக்கமைவாகவே தான் வெளியேறுவதாகவும்  முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார்.
உற்பத்தித்திறன் ஊக்குவிப்பு அமைச்சராக இருந்த முஸ்லிம் காங்கிரசை சேர்ந்த பஷீர் சேகுதாவூத் நேற்று முன்தினம் அரசிலிருந்து வெளியேறினார்.
தாம் வெளியேறியமைக்கான காரணங்களை ஜனாதிபதி மகிந்தவுக்கு அவர் தெரியப்படுத்தியுள்ளார்.
தமது கட்சி எடுத்த தீர்மானத்திற்கு இணங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், முஸ்லிம் மக்களிடையே தமது கட்சி துரோகம் இழைக்கிறது என்ற நிலைப்பாட்டை இல்லாமல் செய்யவும் அதிகாரத்தில் பேராசை கொண்டவர்கள் அல்ல என்பதை தெரிவிக்கவுமே தாம் இராஜினாமாச் செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மகிந்தவின் தலைமைத்துவத்தின் கீழ் ஏற்பட்ட அதிருப்தியோ அல்லது நம்பிக்கையின்மை காரணமாகவோ தாம் தமது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்யவில்லை என்றும் கூறியுள்ள அவர், நாட்டுப்பற்றுள்ள பிரஜையாக அனைத்து மக்களிடையேயும் ஐக்கியத்தை ஏற்படுத்த ஜனாதிபதி ஆற்றிய சேவையை மறுக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக தேர்தல் பிரசார நடவடிக்கையெதிலும் ஈடுபடப் போவதில்லை என்று தெரிவித்துள்ள அவர், ஓர் அமைச்சராக இருந்து ஜனாதிபதிக்காக வாக்கு சேகரிக்க முடியாத நிலை ஏற்பட்டமையைிட்டு வருந்துவதை தாழ்மையாக அறிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அமோக வெற்றியீட்ட தாம் இறைவனைப் பிரார்த்திப்பதாகவும் முன்னாள் அமைச்சர் பஷீச் சேகுதாவூத் ஜனாதிபதி மகிந்தவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்
http://www.tamilwin.com/show-RUmszCQUKaeu7.html

மைத்திரிக்கு கூட்டமைப்பு ஆதரவு வழங்கினால் தமிழர்களை படுகொலை செய்வதற்கு ஒப்பானது: பிள்ளையான்
[ செவ்வாய்க்கிழமை, 30 டிசெம்பர் 2014, 03:08.42 AM GMT ]
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கினால், அது தமிழர்களுக்கு அரசியல் ரீதியாகச் செய்கின்ற படுகொலையாகத்தான் அமையும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
நேற்று நடைபெற்ற பத்திகையாளர் மாநாட்டில் பத்திகையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆலோசகருமான சிவசேனதுரை சந்திரகாந்தன் மேலுள்ளவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்தமுறை தமிழரசுக் கட்சி அல்லது தமிழ் தேசிய கூட்டமைப்பு மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்குமென்றால் அந்தச் செயலை தமிழர்களுக்கு அரசியல் ரீதியாகச் செய்கின்ற படுகொலையாகத்தான் அதைப் பார்க்கமுடியும்.
ஏனென்றால் எதிரணியுடைய தேர்தல் விஞ்ஞாபனத்திலே எந்தவிதமான மக்கள் நலன் சார்ந்த குறிப்பாக, சிறுபான்மை மக்களுக்கு ஒன்றுமே சொல்லப்படவில்லை.
எனக்குத் தெரிந்த வகையில் ஐயாயிரம் ஏக்கர் காணியாவது மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்கு வந்தால் விடுவிப்போம் என்று சொல்கிற வசனத்தைக்கூட கூட்டமைப்பினரால் சேர்க்க முடியாமல் போயிருக்கிறது.
அதைச் சேர்க்கச் சொல்லி சந்திரிக்காவுடன் கேட்டபோது, சந்திரிக்கா அவர்கள் மைத்திரிபால சிறிசேன அவர்களைப் பார்த்ததாகவும் மைத்திரிபால சிறிசேன அவர்கள் சம்பிக்க ரணவக்கவைப் பார்க்க அவர் அதற்கு பதில் சொன்னதாக கடைசியான தகவல் இருக்கிறது. இது ஒரு ஒண்மைத் தகவலும்கூட.
இந்த அடிப்படையில் தமிழர்களுக்குத் தீர்வும் இல்லை. அதிகாரப் பகிர்வும் இல்லை. வடபகுதியையே மாத்திரம் அதாவது வடக்கு கிழக்கை எல்லாம் மறந்து வடபகுதி காணிப் பிரச்சினைக்கே முடிவுகொடுக்க முடியாத, அதை எழுத்திலே உறுதிப்படுத்த முடியாத ஒரு கூட்டத்திற்கே இவர்கள் வாக்களித்தால்,
நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிற கடந்தகால இலங்கை அரசியல் வரலாற்றில் ஒப்பிட்டுக் கொண்டிருக்கிறபோது யாழ் மேலாதிக்கவாதிகளுடைய வர்க்க அரசியலாகப் பார்க்க முடியும். இந்த நாட்டை ஒன்றிணைக்கின்ற அல்லது அவர்கள் எதிர்பார்த்திருக்கின்ற தீர்வுத் திட்டத்திற்கான ஒரு அரசியல் போக்காகப் பார்க்கமுடியாது.
ஆகையால் இந்த முறை தமிழ் தேசிய கூட்டமைப்பு விரும்பியோ, விரும்பாமலோ நீண்ட வரலாற்றிலே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியோடு ஒரு இணக்கப்பாட்டு அரசியலுக்கு வந்தால் அதை வெளிப்படையாகப் பேசினால் பல நன்மைகள் மாற்றங்கள் தமிழர்களுக்கு நிகழ முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszCQUKaet5.html

Geen opmerkingen:

Een reactie posten