பொலிவூட் நடிகர்கள் வரவழைப்பு செயல் வெட்கப்படவேண்டியது! ஐ.தே.க - பிரச்சாரக் கூட்டங்களில் சல்மான் கான்! 200 கோடி சன்மானம்
[ செவ்வாய்க்கிழமை, 30 டிசெம்பர் 2014, 01:21.10 AM GMT ]
இலங்கையில் வெள்ளம் மற்றும் மண்சரிவால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தளவு கீழ்நிலை செயற்பாடு குறித்து இலங்கை மக்கள் வெட்கப்படுகிறார்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஸா டி சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலாக அமரதேவ மற்றும் மாலினி பொன்சேகா ஆகியோரை பிரசாரங்களுக்கு பயன்படுத்தியிருக்க முடியும் என்று ஹர்சா சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை பொது வேட்பாளர் மைத்திரிபாலவுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்ட கலைஞர்கள் குழு ஒன்றின் மீது குருநாகலில் நேற்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதியின் பிரச்சாரக் கூட்டங்களில் சல்மான் கான்! இருநூறு கோடி சன்மானம்
ஜனாதிபதியின் பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக இலங்கைக்கு வருகை தந்துள்ள பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு இருநூறு கோடி அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இன்று காலை கொழும்பை வந்தடைந்த சல்மான் கான் , பிற்பகலில் கொழும்பு பொரளையில் நடைபெற்ற ஜனாதிபதியின் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.
இக்கூட்டத்தில் இலங்கையை பிறப்பிடமாக கொண்ட பாலிவுட் நடிகை ஜாக்குலிண் பெர்ணான்டஸும் கலந்து கொண்டுள்ளார்.
இவரும் இன்று காலை சல்மான் கானுடன் இலங்கை வந்திருந்த நிலையில், இவருக்கு அன்பளிப்பாக நூற்றி இருபத்தி ஐந்து கோடி ரூபா பணம் மற்றும் பெறுமதியான வாகனம் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே எதிர்வரும் நாட்களில் பெரும்பாலும் சமீரா ரெட்டி உள்ளிட்ட இன்னும் பல நடிகைகளும் ஜனாதிபதியின் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் நோக்கில் இலங்கை வரவுள்ளதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்களை தனது பிரச்சார மேடைகளில் ஏற்றுவதன் மூலம் ஆளுங்கட்சியின் பிரச்சாரக் கூட்டங்களுக்கு பெருமளவிலான பொதுமக்களை வரவழைக்க முடியும் என்று அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten