தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 28 december 2014

தமிழரின் போராட்டத்தில் தளபதி ரமேஷ்!

கைதானாரா  சரணடைந்தாரா ??கொள்கை மீறுவதே தலைவர் செயலாக இங்கு கொள்கை மீறியதும் சத்தியத்தை மீறியதும் இவரா,தலைவரா??தமிழரின் போராட்டத்தில் தளபதி ரமேஷ்!

கொக்கட்டிச்சோலை அரசடித்தீவில் தமிழீழ விடுதலைக்காய் வெடித்த எரிமலையேதான் தளபதி ரமேஷ் அண்ணா.
1986 ஆம் ஆண்டு தலைவரின் நம்பிக்கையின் சூரியனாக தமிழீழ விடுதலைப் பாதையில் தன்னை இணைத்து ஒரு சிறந்த தளபதியாக எமது மண்ணில் வீர முரசிட்டவரே எம் தளபதி ரமேஸ்.
1987 களில் சிறீலங்காவுக்குள் வந்திறங்கிய இந்திய அமைதிகாக்கும் படையினர் காந்தியின் விம்பங்களை முகமூடிகளாக அணிந்து, அமைதியின் சின்னங்களாக தம்மை காண்பிக்க முயன்றனர். ஆனால் அவர்களின் உண்மையான நோக்கம் என்ன, அவர்களின் ஜனநாய செயற்பாடுகள் என்ன? ஜனநாயக போராட்டங்களுக்கு காந்தி தேசம் கொடுக்கும் மதிப்பு என்ன? காந்தீயம் தற்போதும் இந்தியாவில் உயிர்வாழ்கின்றதா? என்பதற்கான விடைகளை தியாகதீபம் திலீபனின் உண்ணாநிலை போராட்டம் வெளிக்கொண்டுவந்திருந்தது.
நீர் கூட அருந்தாது போராடிய திலீபன் துடி துடித்து உயிரைத்துறந்து இந்தியாவின் ஜனநாயக முகமூடியை தகர்த்திருந்தார். அன்று திலீபன் மேற்கொண்ட முதல் தகர்ப்புத் தான் பின்னர் விடுதலைப்புலிகளின் போரை இலகுவாக்கியதுடன், தமிழ் மக்களை விடுதலைப்புலிகளின் பின்னால் அணிதிரளவும் வைத்திருந்தது.
தமிழ் மக்களின் விடுதலைப்போரை நகர்த்துவதில் விடுதலைப்புலிகள் மேற்கொண்ட தியாகங்களில் பல அற்புதங்கள் உண்டு. உலகில் யாரும் அதற்கு இணையாக முடியாது. நல்லூர் முதல் ஜெனீவா வரை அதன் சுவடுகளை நாம் காணலாம் அது வரலாறும் கூட.
தளபதி ரமேஸ் இன் மரணமும் திலீபனின் மரணம் போன்றதே, தான் அவமானப்படுத்தப்பட்டு, கோரமாக கொல்லப்படுவேன் என தெரிந்தும், கழுத்தில் கிடந்த சயனைட் குப்பியை கழற்றி எறிந்துவிட்டு, தலைவனின் கட்டளையை ஏற்று எதிரிகளின் பாசறையை நோக்கி வெள்ளைக் கொடியுடன் சென்றார் தளபதி ரமேஸ்.
எமது விடுதலைக்காய்
எம் வருங்கால சந்ததிக்காய் இத்தகைய தியாகத்தை அந்த நொடியில் அந்த தருணத்தில்  எமது தேசியத் தலைவரின் கட்டளைக்கு அமைய செயல் வடிவம் கொடுத்தவரே தளபதி ரமேஸ் அண்ணா. சக போராளிகளுடனும் எம் உறவுகளுடனும் பழகும் போது தான் ஒரு தளபதி என்ற இறுமாப்பு இல்லாத சாதாரண போராளியாகவே பழகும் குண இயல்பு உடையவர்.
விடுதலைப் போராடத்தில் அகலப் பதிந்து தனது தமிழீழ மண்மீது கொண்ட காதல்,பற்று, எல்லாவற்றையும் முள்ளிவாய்க்கால் மண்ணில் சர்வதேசத்துக்கே உறுதி செய்து கொண்ட தளபதி ரமேஸ் அண்ணா. எங்கள் இதயக்கதவுகளை இறுகப்பூட்டி உங்களை எம் நெஞ்சுக்குள் பத்திரமாக வைத்துள்ளோம் நாங்கள்.
மூடிகள் புலனாய்வின் முகவரிகள்.
Ramas Ramas-01 Ramas-02
- See more at: http://www.asrilanka.com/2014/12/28/27627#sthash.AQm6MCS0.dpuf

Geen opmerkingen:

Een reactie posten