தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 28 december 2014

பறிக்கப்பட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பொருட்களும் சந்திரகுமாரின் அரசியலும்!

எதிர்பார்த்த பெறுபேறு கிடைக்கவில்லை! மட்டக்களப்பில் மாணவி தற்கொலை
[ ஞாயிற்றுக்கிழமை, 28 டிசெம்பர் 2014, 03:54.03 PM GMT ]
க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறு சரியான முறையில் அமையாததால் மட்டக்களப்பில் மாணவியொருவர் நஞ்சருந்தி தற்கொலை செய்துள்ளார்.
மட்டக்களப்பு கொக்குவில் பிரதேசத்தில் வசித்துவரும் சிறிக்குமார் அபிநயா எனும் மாணவி நேற்று வெளியாகிய உயர்தர பரீட்சை பெறுபேற்றை பார்த்த பின்பு நஞ்சருந்தி தற்கொலை செய்துள்ளார்.
குறித்த மாணவியின் பெற்றோர் பரீட்சைப் பெறுபேற்றை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்திருந்ததாகவும் அந்தப்பெறுபேறு கிடைக்காத காரணத்தினால் தனது தாய் தந்தையரை ஏமாற்றி விட்டோம் என்ற விரக்தியில் நஞ்சருந்தியதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த மாணவி உயர்தரப் பரீட்சையில் விஞ்ஞனப் பரிவில் கல்வி கற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவரது உடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டதாகவும் இது தொடர்பான விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmszCRcKaft7.html


அம்பாறை, திருமலை மாவட்டங்களில் பல கிராமங்கள் வெள்ளத்தில்!
[ ஞாயிற்றுக்கிழமை, 28 டிசெம்பர் 2014, 04:01.31 PM GMT ]
நாட்டில் காணப்படும் சீரற்ற காலநிலையால் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அந்த வகையில், அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் பல கிராமங்கள் வெள்ளக்காடாய் காட்சியளிக்கின்றன.
அம்பாறை மாவட்டத்தில் உள்ள பல கிராமங்கள் நீரில் மூழ்கிக் காணப்படுவதோடு, அங்குள்ள மக்கள் பாடசாலைகளிலும் பொதுக்கட்டடங்களிலும் தங்களது உறவினர் வீடுகளிலும் தஞ்சமடைந்துள்ளார்கள்.
இவர்களது வீடுகளுக்குள் புகுந்த நீர் வெளியே போக முடியாத அளவிற்கு தொடர்ந்து மழை பெய்து வருவதனால் எதுவும் செய்ய முடியாத நிலையில் மக்கள் திண்டாடுகின்றார்கள்.
அம்பாறை மாவட்டத்தில் உள்ள பல கிராமங்கள் எந்தவிதமான தொடர்புகளும் அற்ற நிலையில், வீதிகள் அனைத்தும் வெள்ளக்காடாக காட்சியளிப்பதனால் போக்குவரத்துக்கள் அனைத்தும் துண்டிக்கப்பட்டு மக்கள் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றார்கள்.
அதிகளவு மழைவீழ்ச்சி காணப்படுவதனால் சில குளங்கள் உடைப்பெடுக்கக்கூடிய நிலையில் இருப்பதாகவும் அறியமுடிகின்றது.
திருமலையில்...
திருகோணமலை மாவட்டத்தில் மூதூரில் வெள்ள நிலைமை மோசமான கட்டத்துக்கு வந்துள்ளது. இறால்குழி மற்றும் கங்குவேலி கிராமங்கள் வெள்ளத்தில் முற்றிலும் வெள்ளத்தால் சூழப்பட்டும் ஏனைய இடங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டும் உள்ளது.
அத்துடன் வெருகல் பிரதேசத்தில் பல கிராமங்களுடனான போக்குவரத்து துண்டிக்கப்பட்டும் உள்ளது  என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் நாகேஸ்வரன் தெரிவித்தார்.
தாழ் நில பகுதிகளில் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmszCRcKafuy.html

நுவரெலியாவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம்
[ ஞாயிற்றுக்கிழமை, 28 டிசெம்பர் 2014, 04:20.45 PM GMT ]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரசாரக் கூட்டம், இலங்கை தொழிலாளர் காங்கிஸின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் நுவரெலியாவில் இன்று நடைபெற்றது.
இதன்போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான முத்து சிவலிங்கம், ஊவா மாகாண சபை அமைச்சர் செந்தில் தொண்டமான், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் என பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.
http://www.tamilwin.com/show-RUmszCRcKafuz.html
மகிந்தவுக்கு ஆதரவாக படையினர் பிரச்சாரம்! தபால் அதிபரால் தடுத்து நிறுத்தம்
[ ஞாயிற்றுக்கிழமை, 28 டிசெம்பர் 2014, 04:45.53 PM GMT ]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு பிரச்சாரம் செய்யும் நோக்கில் இராணுவத்தினர் தபாலிடவிருந்த பெருந்தொகை கைநூல்கள் தபால் மா அதிபரால் தடுக்கப்பட்டுள்ளன.
படைவீரர்களின் குடும்பங்களுக்கு அனுப்பி வைப்பதற்காக இந்த நூல்கள் இராணுவத்தினரால் அனுப்பி வைக்கப்படவிருந்தன.
இந்த நூல்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச போரை வெற்றி கொண்டதாக காட்டும் பிரசாரங்கள் உள்ளக்கப்பட்டிருந்தன.
இந்த நூல்களை படையினரின் குடும்பங்களுக்கு தபாலில் அனுப்புவதற்கான 25 மில்லியன் ரூபாய்கள் செலவிடப்படவிருந்தன.
எனினும் தேர்தல்கள் ஆணையாளரின் உத்தரவுக்கு அமைய தபால் மா அதிபர் இந்த முயற்சியை தடுத்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCRcKafu0.html

பறிக்கப்பட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பொருட்களும் சந்திரகுமாரின் அரசியலும்
[ ஞாயிற்றுக்கிழமை, 28 டிசெம்பர் 2014, 04:58.20 PM GMT ]
ஈபிடிபி பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார், வடமாகாண சபை உறுப்பினர் தவநாதன்,கரைச்சிப் பிரதேச சபை உறுப்பினர் மனோகரன் ஆகியோர் கிளிநொச்சியில் அனர்த்த முகாமைத்துவப்பிரிவின் பொருட்களை நேற்று முன்தினம் வலுக்கட்டாயமாக எடுததுச் சென்றனர்.
உத்தியோகத்தர்கள் முன்னிலையில் தமது அதிகார வெறியை அரங்கேற்றியிருந்தார்கள். அவ்வாறு பெற்றுக்கொண்ட பொருட்களை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கண்டாவளை, உழவனூர்மக்களுக்கு தாம் வழங்கியதாக கூறி பித்தலாட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்கள்.
பொருட்கள் வழங்கப்பட்டபோது எந்தவொரு அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தரும் கலந்து கொள்ளவில்லை.
இதில் நகைப்புக்குரிய விடயம் யாதெனில் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நுளம்பு வலையும் பாயும் கொடுத்த சந்திரகுமாரும் தவநாதனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விமர்சித்து அரசியல் பிரச்சாரங்களை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கே மேற்கொள்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszCRcKafu1.html

Geen opmerkingen:

Een reactie posten