தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 31 december 2014

பார்க்க வேண்டிய பகுதிகளுக்கு அழைத்து செல்ல ராஜபக்ச அனுமதித்தால் இலங்கை வரத் தயார்: நெடுமாறன்

கலைஞர்கள் மீதான தாக்குதல் சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் பொலிஸில் சரண்!
[ புதன்கிழமை, 31 டிசெம்பர் 2014, 05:27.14 AM GMT ]
புதிய தலைமுறை கலைஞர் அமைப்பின் மீது குருநாகல் பிரதேசத்தில் தாக்குதல் நடத்திய சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான மேல் மாகாணசபை உறுப்பினர் தொன் கமல் பொலிஸில் சரணடைந்துள்ளார்.
இன்று காலை கொகரெல்ல பொலிஸில் அவர் சரணடைந்துள்ளதாக மேல்மாகான பொலிஸ் அதிகாரி சரத் குமார தெரிவித்துள்ளார்.
ஏகாதிபதித்துவ நிலையை தோற்கடித்தல் என்பதை இலக்காகக் கொண்டு இளம் கலைஞர்கள் கடந்த 29ம் திகதி குருநாகல் கும்புகெட்டே பகுதியில் நடத்திய கலாச்சார நிகழ்ச்சியில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சமனலி பொன்சேகா, இந்ரசாப லியனகே, உள்ளிட்ட இளைய கலைஞர்கள் மற்றும் திரைபட இயக்குனர் உதய தர்மவதன பாடகர் லக்ஷ்மன் விஜேசேகர ஆகியோர் சம்பவத்தின் போது காயமடைந்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszCQVKbnq6.html
பார்க்க வேண்டிய பகுதிகளுக்கு அழைத்து செல்ல ராஜபக்ச அனுமதித்தால் இலங்கை வரத் தயார்: நெடுமாறன்
[ புதன்கிழமை, 31 டிசெம்பர் 2014, 05:51.31 AM GMT ]
இலங்கை ஜனாதிபதி ராஜபக்ச தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தமிழக தலைவர்கள் இலங்கை வந்து ஈழத்தமிழர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுதந்திரம் பற்றி அறியலாம் என கூறியிருந்தார். அதன்பிரகாரம் நாம் அங்கு சென்று பார்க்க வேண்டிய பகுதிகளுக்கு அழைத்து செல்ல ராஜபக்ச தயாரா? என பழ. நெடுமாறன் கேள்வியெழுப்பியுள்ளார்.
மன்னார்குடியில் செய்தியாளர்களை சந்தித்த பழ.நெடுமாறன் மேற்கண்டவாறு கேள்வியெழுப்பினார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்சவை ஆதரித்து ஹிந்தி நடிகர்–நடிகைகள் பரப்புரைக்கு சென்று இருப்பது தவறான முன் உதாரணமாக அமைந்து விடும்.
எனவே இலங்கை வந்துள்ள இவர்கள் உடனடியாக இந்தியா திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்தார்.
அதேவேளை, இலங்கை ஜனாதிபதி ராஜபக்ச தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தமிழக தலைவர்கள் இலங்கை வந்து ஈழத்தமிழர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுதந்திரம் பற்றி அறியலாம் என கூறினார்.
இதை வரவேற்று தமிழக தலைவர்களுடன் இலங்கை செல்ல தயார். ஆனால் பேச வேண்டிய, பார்க்க வேண்டிய பகுதிகளுக்கு தடை விதிக்காமல் அழைத்து செல்ல ராஜபக்ச தயாரா?
அதேபோல இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை ஐ.நா.குழு மேற்பார்வையிட அவர் அனுமதி அளிப்பாரா? என கேள்வி எழுப்பினார்.
http://www.tamilwin.com/show-RUmszCQVKbnq7.html

Geen opmerkingen:

Een reactie posten