பாதுகாப்புத் தேடும் மோடியின் மனைவி….
பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி யசோதா பென், தனக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆர்.டி.ஐ. சட்டத்தில் தகவல் கோரியிருந்தார்.
அவரது மனுவில், “நான் பிரதமரின் மனைவி. அந்த வகையில் எனக்கு என்னென்ன சலுகைகள் உள்ளன. நான் பொது போக்குவரத்தையே பயன்படுத்தி வருகிறேன். ஆனால், எனது பாதுகாவலர்கள் அரசு வாகனங்களில் என்னை பின் தொடர்கின்றனர்.
என்னைச் சுற்றி பாதுகாப்பு வளையம் இருப்பதால் சில நேரங்களில் அச்சப்பட வேண்டியுள்ளது. எனக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து முழுமையான தகவல்களை அளிக்க வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், ஆர்.டி.ஐ. சட்டத்தின் கீழ் அவர் கோரியிருந்த தகவல்களை அவருக்கு தெரிவிக்க இயலாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து குஜராத்தின் மெஹாசனா மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜே.ஆர். மொதாலியா கூறும்போது, “பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி யசோதா பென் கோரியுள்ள தகவல்கள் உள்ளூர் புலனாய்வுப் பிரிவுக்கு சம்பந்தப்பட்டது. அதனால் தகவல்களை அவருக்கு தெரிவிக்க இயலாது. இது தொடர்பான விளக்கம் அவருக்கு அனுப்பப்பட்டுள்ளது” என்றார்.
யசோதா பென்னுக்கு அனுப்பப்பட்டுள்ள மனுவுக்கான பதில் விவரத்திலும் இதே தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.jvpnews.com/srilanka/91969.html
மக்கள் பணத்தை நாசம் செய்யும் ஹிஸ்புல்லா…
காத்தான்குடி: காத்தான்குடி நகரின் மத்தியில் அமைந்துள்ள ஹிஸ்புல்லாஹ் பொது விளையாட்டு மைதானத்தை சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதானமாக மாற்றுவதாகக்கூறி பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் பல மில்லியன் ரூபாய்களைக் கொண்டு கடந்த ஓராண்டுக்கும் மேலாக அபிவிருத்தி செய்யும் வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வந்தார்.
இதற்காக கடந்த ஒரு வருடகாலமாக இம்மைதானம் முற்றாக மூடப்பட்டு அங்கு புல் வளர்ப்பு நடவடிக்கைகள் உட்பட அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
இவ்வாறு மைதானம் ஒரு நல்ல நோக்கத்திற்காக அபிவிருத்தி செய்யப்படும் பொருட்டு காத்தான்குடி நகர சபை நிர்வாகத்தினரால் மூடப்பட்டிருந்ததால் இப்பிரதேசத்திலுள்ள விளையாட்டுக் கழக வீரர்களும், பாடசாலை மாணவர்கள் மற்றும் சிறார்களும் தமது விளையாட்டு மற்றும் பயிற்சி நடவடிக்கைகளை
எல்லாம் கடற்கரைப் பகுதியிலும், கொங்றீட் வீதிகளிலும், மத்திய மகா வித்தியாலய மைதானம், விக்டரி மைதானம் போன்ற மைதானங்களிலுமாக பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் மேற்கொண்டு வந்ததுடன், நாளாந்தம் இம்மைதானத்தில் வளரும் புற்களின் வளர்ச்சியையும், அபிவிருத்திப் பணிகளையும் அக்கறையுடன்
அவதானித்தும் வந்தனர்.
அவதானித்தும் வந்தனர்.
இந்நிலையில், கடந்த 19ம் திகதி வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றினை இந்த விளையாட்டு மைதானத்தில் நடாத்துவதற்கு ஜனாதிபதியின் மட்டக்களப்புத் தொகுதிக்கான தேர்தல் முகவரும், பிரதியமைச்சருமான எம்.எல்ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஏற்பாடு செய்தார்.
இதற்காக ஓராண்டுக்கும் கூடுதலாக மூடப்பட்டிருந்த இம்மைதானம் திறக்கப்பட்டு, மேடை அமைப்பதற்கான பொருட்களை ஏற்றி வந்த கனரக வாகனங்கள் பலவும் மைதானத்திற்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்பட்டன.
பல நாட்களாகத் தொடர்ந்து பெய்த கடும் மழைக்கு மத்தியில் இந்த கனரக வாகனங்கள் மைதானத்தின் உட்பகுதிகளில் அங்கும் இங்குமாக ஓட்டப்பட்டன. இதனால் பசுமையாக வளர்ந்திருந்த புற்கள் அழிந்து நாசமாகி, மைதானம் சேறும் சகதியுமாக மாறியது.
பல நாட்களாகத் தொடர்ந்து பெய்த கடும் மழைக்கு மத்தியில் இந்த கனரக வாகனங்கள் மைதானத்தின் உட்பகுதிகளில் அங்கும் இங்குமாக ஓட்டப்பட்டன. இதனால் பசுமையாக வளர்ந்திருந்த புற்கள் அழிந்து நாசமாகி, மைதானம் சேறும் சகதியுமாக மாறியது.
கனரக வாகனங்களின் போக்குவரத்தாலும், மழை நீரினாலும் சேறு சகதியான இம்மைதானத்தின் ஒரு பகுதியை சீரமைப்பதற்காக காத்தான்குடி கடற்கரைப் பகுதியில் இருந்து பல டிப்பர் வாகனங்களில் கடல் மண் இரவோடிரவாக சட்டவிரோதமான முறையில் அகழ்ந்தெடுத்து ஏற்றி வரப்பட்டு மைதானத்தில் பரத்தப்பட்டன. இதனால் கடற்கரையிலும் பள்ளம் ஏற்பட்டிருக்கின்றது.
போதாக்குறைக்கு மைதானத்தின் ஒரு பக்க நுழைவாசலில் இருந்து உள்ளே அமைக்கப்பட்ட பிரச்சார மேடை வரைக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் காரில் வந்து இறங்குவதற்காக மைதானத்தின் உள்ளே விஷேட வீதியொன்றும் பல இலட்சம் ரூபாய் செலவில் அவசர அவசரமாக அமைக்கப்பட்டது.
இவ்வாறான அதிதீவிர அவசர ஏற்பாடுகளின் அடிப்படையில் கடந்த 19ம் திகதி இப்பிரதேசத்தில் வீசிய கடும் சுழல்காற்றுக்கும், மழைக்கும் மத்தியில் ஜனாதிபதி அவர்களின் இத்தேர்தல் பிரச்சாரக்கூட்டம் ஒருவாறு நடைபெற்று முடிவடைந்தது.
இப்போது, காத்தான்குடிப் பிரதேச இளைஞர்களும், மாணவர்களும், சிறார்களும் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த இச்சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதானமானது பெரும் அலங்கோலமாகக் காட்சியளிக்கின்றது. மைதானத்திற்கு மத்தியில் கற்பாதையும், புற்கள் நாசமாகியும், மைதான மட்டம் சீரழிந்தும் பார்ப்பதற்கு பெரும் அவலமாகக் காணப்படுகின்றது.
இந்த சர்வதேச தரத்திலான மைதான நிர்மாணத்திற்காக ஒதுக்கப்பட்ட கோடிக்கணக்கான ரூபா பணம் இம்மாவட்டத்தின் அபிவிருத்திக் குழுத் தலைவரும், பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும், காத்தான்குடி மக்களின் வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் தீர்க்கதரிசனமற்ற வகையில் ஜனாதிபதியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை நடாத்துவதற்காக இம்மைதானத்தை பயன்படுத்தியதால் முற்றாகவே விரயமாக்கப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்களும், இளைஞர்களும், வரியிறுப்பாளர்களும் கடும் விசனம் தெரிவிக்கின்றனர்.
தான் ஆதரிக்கும் ஒரு கட்சியின், வேட்பாளரின் தேர்தல் பிரச்சாரத்திற்காக ஊர் மக்களின் பொதுச் சொத்தாகிய இந்த விளையாட்டு மைதானத்தை இவ்வாறெல்லாம் நாசப்படுத்திய சமூக விரோதச் செயலை எவ்வாறு, எந்த நியாயத்தின் அடிப்படையில் அங்கீகரிக்க முடியும்?
இதற்காக மத்திய அரசாங்கம் முதல் நகர சபை வரையான பல்வேறு நிர்வாக மட்டங்களில் இருந்தும் ஒதுக்கப்பட்டுச் செலவு செய்யப்பட்ட பல மில்லியன் ரூபாய்களை எவ்வாறு ஈடு செய்ய முடியும்?
இந்தப் பணமெல்லாம் நாட்டு மக்களின் வரிப்பணமல்லவா? ஆதனை இப்படி வீண்விரயமாக்கலாமா? என்றெல்லாம் இம்மைதானத்தைப் பார்க்கும் பலரும் இன்று கேள்விகளை எழுப்புகின்றனர்.
கடந்த 2010 ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்திற்காக காத்தான்குடிக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வருகை தந்தபோது, ஒரு பள்ளிவாசலையே முற்றாகத் தரை மட்டமாகத் தகர்த்து உடைத்து அதனை ஜனாதிபதி நிதியிலிருந்து ஜெரூஸலேமிலுள்ள ‘மஸ்ஜிதுல் அக்ஸா’ பள்ளிவாசலின் வடிவில் கட்டித்தருவதாக வாக்குறுதியளித்து அதற்கான நினைவுக்கற்களையும் மும்மொழிகளிலுமாக நாட்டிச் சென்றார்.
அப்பள்ளிவாசல் நான்காண்டுகள் கழிந்த நிலையிலும் இன்னமும்தான் நிர்மாணித்து முடிவடையாதிருக்கின்ற நிலையில், இந்தத் தேர்தல் பிரச்சாரத்திற்காக அவர் மீண்டும் இவ்வூருக்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய வருகை தந்து நாம் இராப்பகலாக எதிர்பார்த்துக் காத்திருந்த எமது சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதானத்தை நாசமாக்கிச் சென்று விட்டாரே.. என்றும் உள்ளுர் வரியிறுப்பாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
http://www.jvpnews.com/srilanka/91959.html
Geen opmerkingen:
Een reactie posten