அக்கரைப்பற்றில் மயிரிழையில் தப்பிய ரணில்….
தேர்தல் பிரச்சார நடவடிக்கைக்காக தமது குழுவினருடன் வருகை தந்த எதிர்க்கட்சித் தலைவர் மீது அக்கரைப்பற்று மணிக்கூண்டு கோபுரத்திற்கு முன்னாலேயே கற்கள் வீசி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டன.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது.
இன்று மாலை காத்தான்குடி தேர்தல் பிரச்சார கூட்டத்தை முடித்துவிட்டு அக்கரைப்பற்றுக்கு ரணில் விக்ரமசிங்க தலைமையிலான குழுவினர் வருகை தந்தனர். இவர்கள் அக்கரைப்பற்றில் மைத்திரிபாலவின் தேர்தல் பிரச்சார காரியாலயம் ஒன்றையும் திறந்து வைத்தனர்.
இவர்களின் வருகையினால் உற்சாகமடைந்த அக்கரைப்பற்று மக்கள் அமோக வரவேற்பு அளித்ததுடன் கோசமிட்டு தமது சந்தோசத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இதன்போது அக்கரைப்பற்று மணிக்கூண்டுக்கு அருகில் தேர்தல் காரியாலயத்தில் சனத்திரளுடன் ரணில் விக்ரமசிங்க உரையாடிக்கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக கற்கள் வீசி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டன.
இதனால் இங்கு பதற்ற நிலை தோற்றம் பெற்றது. எதிர்க்கட்சித் தலைவரின் பிரத்தியேக பாதுகாவலர்களின் முயற்சியினால் பதற்றம் கட்டுப்படுத்தப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். கல் வீச்சுத் தாக்குதலில் எவரும் காயமடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.jvpnews.com/srilanka/91914.html
மைத்திரியிடம் சென்ற இருவர் மீண்டும் மகிந்தவிடம் ஓட்டம்…
இவ்விருவரும் தாம் முரண்பட்ட தத்தமது கட்சிகளின் தலைவர்கள் தற்போது பொது எதிரணியின் பக்கம் கட்சி தாவி வந்துள்ளதால் அவர்கள் தம்மைப் பழிவாங்கக் கூடும் என்ற காரணத்தினால் மீண்டும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படவுள்ளதாகத் தெரிய வருகிறது.
இவர்கள் இருவரும் இவ்வாறு இணைந்து கொள்ளும் பட்சத்தில் உனைஸ் பாரூக்கிற்கு முன்னாள் அமைச்சர் ரிசாத் பதவி வகித்த அமைச்சர் பதவியும், இராஜதுரைக்கு முன்னாள் பிரதியமைச்சர் திகாம்பரம் வகித்த பிரதியமைச்சர் பதவியும் வழங்கப்படலாம் என தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சிரேஷ்ட பதவியிலுள்ள ஒருவரிடமும், திகாம்பரத்தின் கட்சியிலுள்ள முக்கியஸ்தர் ஒருவரிடமும் தொடர்பு கொண்டு விசாரித்தபோது இச்செய்தியை அவர்கள் இருவருமே மறுப்பதற்கில்லை எனத் தெரிவித்தனர்.
http://www.jvpnews.com/srilanka/91918.html
ஹக்கீமின் துருப்புச் சீட்டாக தவம்….
அது மாத்திரமன்றி, ஏழு மாகாண சபை உறுப்பினர்களும் ஏக குரலில் தலைமையின் இறுதி முடிவே தமது முடிவு என்கின்ற கருத்தை, மிகப்பலமாக எல்லா மட்டத்திலும் பேசி வருவதும், தலைவரை பல இடங்களில் விட்டுக் கொடுக்காமல் தாங்கிப் பிடிப்பதும், தலைவருக்குச் சாதகமான தவத்தின் மன நிலையே என்பதை எல்லோரும் கூறுகிறார்கள்.
அப்படியாயின், தலைவர் றஊப் ஹக்கீமின் துருப்புச் சீட்டாக தவம் பயன்படுத்தப்படுவது தலைவரின் ராஜதந்திரம் என்பதை யாரும் மறுக்க முடியாது. அதேபோன்று, நேற்றைய ( 26.12.2014) மக்கள் பிரதிநிதிகளுடனான தலைவரின் தனித் தனி சந்திப்புகளிலும் தவம் உள்வாங்கப்படவில்லை. தலைவரின் கருத்தே தவத்தின் கருத்து எனக் கூறி, தவத்திற்கென பிரத்தியேக நேரம் ஒதுக்கப்படவில்லை. இந்நிகழ்வும் தலைவர் தவத்தை தனது துருப்புச் சீட்டாகப் பயன்படுத்துகிறார் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணமாகும்.
இதனை நாம் பரீட்சித்துப் பார்ப்பதாயின், இன்றைய (27.12.2014) உயர்பீடக் கூட்டத்தில் தவம் மௌனம் காக்கிறாரா? அல்லது பேசுகிறாரா என்பது தொடர்பில் கவனம் செலுத்திப் பார்க்க வேண்டும். பேசினால், அவர் தலைவரின் துருப்புச் சீட்டல்ல. பேசாமல் மௌனமாக இருந்தால் நிட்சயம் துருப்புச் சீட்டே. எல்லோரும் உயர்பீடக் கூட்டத்தில் அவரைக் கவனியுங்கள்.
http://www.jvpnews.com/srilanka/91921.html
ரங்கா MP அலரி மாளிகையில்…..
மகிந்த இடம் பைல் உள்ளது ஊழல் இருக்கு என்றெல்லாம் வதந்தியை கிளப்பி அரசியல் குளிர் காய்ந்த சிலர் தான் கடமை புரியும் ஊடகத்தின் உதவியால் தன்னை பழுத்த அரசியல் வாதியென்று அடையாளப்படுத்த முயன்றார் இறுதியில் அவர் முகத்தில் ரிசாத் கரி பூசி விட்டார்.
மக்கள் ஆதரவு இல்லாத தகுதியும் இல்லாத தொகுதியும் இல்லாத அஸ்வர் மற்றும் மலையாக மக்களை பகடைக்காயாக பயன் படுத்தி மீண்டும் ஒரு முறை பாராளுமன்றம் செல்ல திட்டமிடும் ரங்கா போன்ற கோடரிக்காம்புகள் இன்று முழு பூசணிக்காயும் சொத்தில் மறைக்க முயல்வது மக்கள் அறியாத விடயமில்லை ஐக்கிய தேசிய கட்சி எம் பி யான ரங்காவுக்கு தினமும் அலரி மாளிகையில் என்ன வேலை? நாமல் ரங்கா கூட்டு என்ன? இவைகள் விரைவில் வெளிவரும் என்றார் ரியாஸ் சாலி.
ரிஷாத் பிரிந்தார்.. கடுப்பில் ரங்கா…
http://www.jvpnews.com/srilanka/91924.html
SLMC இல் பாரிய உடைவு..! ஹசன் அலி – ஹக்கீம் பயணம் முடிவா…??
மேலும் உயர்பீடகூட்டம் தொடங்கும் முன்னர் கட்சியின் பொது செயலாளர் ஹசன் அலி மற்றும் கட்சி தலைவர் சுமார் அரை மணித்தியாலங்கள் வரை தனியாக உரையாடியுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
அதனை தொடர்ந்து இடம்பெற்ற உயர்பீட கூட்டத்தின் போது கட்சியின் பொது செயலாளர் ஹசன் அலி அவர்கள் தனது முகத்தை மிக கடுமையாக வைத்திருந்ததை அவதானிக்க முடிந்ததாக அக்கட்சி உயர்பீட உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் ஹசன் அலி அவர்களை பொருத்தமட்டில் ஆளும் தரப்பின் கடந்த கால நடவடிக்கைகள் தொடர்பாக துணிவுடன் விமர்சித்து வந்துள்ள அத்வேளை பொது பல சேனாவின் நடவடிக்கைகள் தொடர்பாக துணிவுடன் குரல்கொடுத்து வந்த ஒருவர் என அக்கட்சி உயர்மட்ட உறுப்பினர்களிடம் அவர் தொடர்பாக ஒரு நல்ல அபிப்ராயம் உள்ளது.
இன்று கட்சி உயர்பீடம் தலைவருக்கு முடிவை அறிவிக்கும் அதிகாரத்தை வழங்கியுள்ள நிலையில், நடைபெறவுள்ள ஊடக மாநாட்டில் அமைச்சர் ஹக்கீம் ஆளும் தரப்பை ஆதரிக்க தீர்மானிக்கும் முடிவை அறிவித்தால் கட்சிக்குள் இருந்துகொண்டே மைத்ரியை ஆதரித்து பிரச்சாரம் செய்ய ஹசன் அலி தீர்மாணிக்க வாய்ப்புள்ளதாக அக்கட்சி உயர்பீட உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.
பாராளுமன்றத்தில் எதிர்கட்சியில் கபீர் ஹசீம் ஹலீம் தவிர்ந்த பதினெட்டு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆளும் தரப்பில் இருக்கும் போதே முஸ்லிம்களுக்கு முழுமையான உத்தரவாதத்தை எம்மால் பெற்றுக்கொடுக்க முடியவில்லை என முஸ்லிம் காங்கிரஸ் பொது செயலாளர் ஹசன் அலி அண்மைக்காலங்களில் கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.jvpnews.com/srilanka/91927.html
ரணிலின் வலது கை மகிந்தரின் மடியில்….
இதன்போது ஆளும் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க எவ்வாறு தம்பக்கம் கொண்டு வந்தார் என்ற தகவலை சமரவிக்கிரம, ஜனாதிபதிக்கு விளக்கியுள்ளார்.
இதேவேளை பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபா அரசாங்கத்தில் இருந்து கட்சிமாறினாலும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அவரை ஏற்றுக்கொள்ளமாட்டார் என்று சமரவிக்கிரம குறிப்பிட்டுள்ளார்.
குறித்த தொலைபேசி உரையாடலின்போது ஆளும் கட்சியில் இருந்து எதிர்க்கட்சிக்கு கொண்டு வரப்படவுள்ளவர்களின் பெயர்பட்டியலையும் சமரவிக்கிரம ஜனாதிபதியிடம் வெளியிட்டார்.
வர்த்தகரான மலிக் சமரவிக்கிரம, ஏற்கனவே பெருந்தொகை பணத்தை சம்பாதிக்கக்கூடிய அரசாங்கத்தின் கொழும்பு- கண்டி அதிவேக பாதை நிர்மாணிப்பணிகளை முன்னெடுக்கும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தார் என்று சிங்கள நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது.
http://www.jvpnews.com/srilanka/91935.html
Geen opmerkingen:
Een reactie posten