தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 27 december 2014

வவுனியாவில் மைத்திரியை ஆதரிக்கத் தயாராகும் செல்வம் குழு…

மகிந்தவிடம் குதிக்கும் பொன்சேகா கம்பனி…??

அரசாங்கத்தில் அவர் இணையும்பட்சத்தில் பறிக்கப்பட்ட அவரது உரிமைகள், ஜெனரல்பதவி,ஓய்வூதியம்,உட்பட அணைத்தையும் வழங்க தயார் எனவும் அரசாங்கம் இந்த பேச்சுக்களின் போது உறுதியளித்துள்ளது. இதேவேளை அரசாங்கம் பாதுகாப்பு அமைச்சில் எந்த பதவியும் வழங்கப்படாது என்றும் தெரிவித்துள்ளது.
இதன் முதற்கட்டமாகவே பொன்சேகாவின் மருமகன் உறவினரான தனுன திலகரட்ணவிற்கு பினைவழங்கப்பட்டதாகவும்,அவரது மனைவியும், பிள்ளைகளும் அவரை அரசுடன் சேருமாறு அழுத்தம் கொடுப்பதாகவும், தகவல்வெளியாகியுள்ளன.
இது குறித்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுடன் சரத்பொன்சேகா நேற்று தீவிரமாக ஆராய்ந்துள்ளார், இந்த பேச்சுக்களில் திருப்தி அடையாவிட்டால் அவர் கட்சியை கலைத்துவிட்டு அவர் அடுத்த சில நாட்களில் அரசாங்கத்துடன் இணையலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது
இதேவேளை இந்தத் தகவல்கள் குறித்து பொன்சேகா தரப்பினர் மறுத்து உள்ளதோடு திட்டமிட்ட வகையில் எதிர்த்தரப்பை பலவீகமடையச் செய்யும் செய்தி இதுவெனத் தெரிவித்துள்ளது….

வவுனியாவில் மைத்திரியை ஆதரிக்கத் தயாராகும் செல்வம் குழு…

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என கூட்டமைப்பு தெளிவாக அறிவிக்காத நிலையில் கூட்டமைப்பின் சில உறுப்பினர்கள் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவான கருத்துக்களை மக்கள் மத்தியில் தெரிவித்து வந்தனர்.
இந் நிலையில் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், வினோ, சிவசக்தி ஆனந்தன், வடக்கு சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வடமாகாணசபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், ம.தியாகராஜா, இ.இந்திரராஜா, புளொட் அமைப்பின் மத்தியகுழு உறுப்பினர் சந்திரகுலசிங்கம், சுத்தானாந்தா இந்து இளைஞர் சங்க தலைவரும் தமிழரசுக் கட்சி மத்தியகுழு உறுப்பினருமான ந.சேனாதிராஜா, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உபதலைவர் து.ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் ந.சேனாதிராஜா தலைமையில் இடம்பெறவுள்ள பிரச்சார நடவடிக்கைகளை கூட்டமைப்பு தீவிரமாக மேற்கொள்ள தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான செய்தி இணையம் மற்றும் முக நூல்களில் பிரசுரமாகியுள்ளமையும் குறிப்பிடத் தக்கது.
http://www.jvpnews.com/srilanka/91832.html

Geen opmerkingen:

Een reactie posten