தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 3 december 2014

யார் சாவுக்கு இந்த "தில்லாணா போஸ்" தெரியல என்கிறர்கள் அவர் கட்சியில் உள்ளவர்கள் ..

மகிந்தர் தலையில் அடுத்த பாறாங் கல் விழுந்தது: அமைச்சர் விமல் வீரவம்ச ஓட்டம் பிடித்தார் ?

[ Dec 03, 2014 12:00:00 AM | வாசித்தோர் : 21950 ]
மகிந்த ராஜபக்ஷவுக்கு சனி உச்சத்தில் நின்று ஆட்ட ஆரம்பித்து விட்டது எனலாம். அமைச்சர் விமல் வீரவம்ச எதிரணியோடு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதனைக் கேள்விப்பட்ட மறு நிமிடமே அவர் பாதுகாப்பை விலக்கிக்கொள்ள உத்தரவிட்டுள்ளார் கோட்டபாய. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியுடன் அமைச்சர் விமல்வீரவன்ச இரகசிய பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டமை தெரியவந்ததை தொடர்ந்து அவருக்கு வழங்கப்பட்டிருந்த அமைச்சரவைப் பாதுகாப்பு விலக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. தனது முந்தைய ஜேவிபி சகா நந்தனகுணதிலக ஊடாக அமைச்சர் விமல்வீரவன்ச ஐக்கியதேசிய கட்சியுடன் இரகசியபேச்சுக்களை மேற்கொண்டுள்ளார். இது அரசாங்கத்தின் மிகஉயர்மட்டத்தில் உள்ளவர்களுக்கு தெரியவந்ததை தொடர்ந்து, அவருக்கு வழங்கப்பட்டிருந்த அமைச்சரவை பாதுகாப்பு பிரிவினரின் பாதுகாப்பு விலக்கப்பட்டு, விசேட அதிரடிப்படையினர் நிறுத்தப்பட்டுள்ளதாக அரசவட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அட அதிரடிப்படையினர் என்றால் அதன் அர்த்தம் என்ன என்று உங்களுக்கு நிச்சயம் தெரியும். அது வீட்டுக் காவல் போன்றது தான். மேலும் அவர் எங்கே செல்கிறார் என்பதனை கோட்டபாயவின் அதிரடிப்படை அப்படியே கண்கானித்துச் சொல்லும். இதேவேளை இந்த விடயம் தெரியவந்துள்ளதை தொடர்ந்து மகிந்தர், விமல் வீரவன்சவின் முறைகேடுகள் குறித்த கோப்புகளை கோரியுள்ளதாகவும், அதன்படி அவருடைய மற்றும் அவரது நெருங்கிய சகாக்களின் கோப்புகள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டு உள்ளதாகவும் ரகசிய தகவல்கள் அதிர்வு இணையத்திற்கு கசிந்துள்ளது.
இதேவளை Gk 6257, NA 3971 KD 3774 . குறிப்பிட்ட இலங்கங்களை உடையவாகனங்களை உன்னிப்பாக அவதானிக்குமாறு அரச புலனாய்வுபிரிவினர் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
விமல் வீரவன்ச 2010ம் ஆண்டு, ஐ.நா போர் குற்றத்தை விசாரிக்க கூடாது என்று உண்ணாவிரதம் இருந்தார். இவர் இருந்த உண்ணாவிரதத்தை "பால்" கொடுத்து முடித்துவைத்தவர் மகிந்தர். "பாலூட்டி வளர்த்த கிளி பழம் கொடுத்து பார்த கிளி"  பாட்டை மகிந்தர் சொன்னால் எப்படி இருக்கும் ?  
"அதிங்.... பாலூட்டி வளர்த்த கிளிங்.... பழம் கொடுத்து பார்தது இலிங்.... அது தான் பறந்திடுச்சு.....

http://www.athirvu.com/newsdetail/1565.html

யார் சாவுக்கு இந்த "தில்லாணா போஸ்" தெரியல என்கிறர்கள் அவர் கட்சியில் உள்ளவர்கள் ..

[ Dec 03, 2014 12:00:00 AM | வாசித்தோர் : 14145 ]
இந்த அம்மா பல போஸ் கொடுத்து பார்த்து இருப்பீர்கள். ஆனால் இப்படி ஒரு போஸ் கொடுத்தது கடைசியாக 1988ம் ஆண்டுதானாம். பின்னர் இப்ப தான் இப்படி ஒரு தில்லானா போஸ் கொடுத்திருக்கிறார் என்கிறார்கள் சிங்களவர்கள். சும்மா தில்லாணா ஆடுறமாதிரி தான் இந்த போஸ் இருக்கு. ஆனால் இதுக்கு பின்னால் பல விடையங்கள் ஒளிந்து இருக்கு. 26 வருடங்களுக்கு பின் இப்படி இந்த அம்மா ஒரு போஸ் கொடுக்க என்ன காரணம் என்று தெரியாமல், பழைய அரசியல் பக்கங்களை புரட்டுகிறார்கள் அரசியலில் உள்ளவர்கள். 1988ம் ஆண்டு சந்திரிக்கா அம்மையாரின் கணவர் விஜய குமாரதுங்க சுட்டுக்கொல்லப்பட்டார். காமினி என்று அழைக்கப்படும் காவலாளி ஒருவரே கணவரை மதியம் 12.00 மணிக்கு சுட்டுக்கொன்றார். அன்று ஏற்பட்ட அரசியல் நெருக்கடிக்கு முடிவுகாண சில கட்சிகளை கூட்டுச் சேர்த்து களம் இறங்கினார் சந்திரிக்கா அம்மையார்.
கணவரின் மறைவுக்குப் பின்னர், அன்றைய தினம் சில எதிர்கட்சிகளை தன் பக்கம் இழுத்து சாதனை ஒன்றை நிகழ்த்திய பின்னரே 1988ம் ஆண்டு இவர் இவ்வாறு கைகளை கோர்த்து ஒரு போஸ் கொடுத்துள்ளார். பின்னர் அவர் 1994ம் ஆண்டு முதல் 2005 ஆண்டு வரை சுமார் 10 வருடங்கள் ஜனாதிபதியாக இருந்தார். தற்போது மகிந்தரை எதிர்த்து, பெரும் அரசியல் புயல் ஒன்றை இவர் கிளப்பியுள்ளார் என்பது உண்மைதான். நேற்று முன் தினம் எதிர்கட்சிகள் ஒன்றுகூடி மாத்தறையில் தமது முதலாவது மாபெரும் மாநாட்டை நடத்தியுள்ளார்கள். இதில் சுமார் 15,000 ஆயிரம் சிங்களவர்கள் கலந்துகொண்டுள்ளார்கள் என்றும் கூறப்படுகிறது. இக் கூட்டத்திலேயே இந்த அம்மையார் மீண்டும் இப்படி ஒரு தில்லாணா போஸ் கொடுத்துள்ளார்.
அட அப்ப கணவர் இறந்த பின்னர் இப்படி ஒரு போஸ் கொடுத்தார், இப்ப இவர் கொடுக்கும் தில்லாணா போஸ் யார் சாவுக்காக ? என்று சிங்கள ஊடகங்கள் கேள்வி எழுப்பியுள்ளது. அதற்கு விடை தமிழர்களுக்கு நன்றாகத் தெரியும். படித்தவர்கள், நடுத்தர மற்றும் மேல்வர்க சிங்களவர்கள் மைத்திரிக்கு வாக்குகளை போடவுள்ள நிலையில், கிராமப்புற மக்கள் மத்தியில் புலிகளை வென்றது மகிந்தர் தானே, என்ற செல்வாக்கு இன்னும் இருக்கிறது. அந்த திமிரில் தான் மகிந்தர் தெனாவெட்டாக அலைந்து திரிகிறார். அதனை உடைக்காவிட்டால் எதிர் கட்சிகள் பாடு சிலவேளை திண்டாட்டமாக இருக்க வாய்ப்புகள் உள்ளது என்கிறார்கள் கள நிலைகளை ஆராயும் ஆய்வாளர்கள்.
அதிர்வுக்காக,
வல்லிபுரத்தான்
http://www.athirvu.com/newsdetail/1572.html

Geen opmerkingen:

Een reactie posten