தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 28 december 2014

ஜனவரி எட்டு எப்படி முடியும் யார் அறிவார் அச்சோவே!



கிளிநொச்சி கண்ணகைபுரம் மத்தியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செரண்டிப் சிறுவர் இல்லத்தினர் உதவி
[ ஞாயிற்றுக்கிழமை, 28 டிசெம்பர் 2014, 12:39.27 PM GMT ]
வெள்ளப்பாதிப்பால் கிளிநொச்சியின் அநேக கிராமங்களில் மக்கள் இடம்பெயர்ந்து பாடசாலைகளிலும் பொது இடங்களிலும் தங்கியுள்ளனர்.
இந்தநிலையில் பா.உறுப்பினர் சி.சிறீதரனின் தலைமையின் கீழ் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு புலம்பெயர் கருணை உள்ளங்கள் உள்ளூரில் இருக்கும் கொடையாளிகளின் உதவியுடன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக சென்று உலர் உணவு வசதிகள் உதவிகளை இரவுபகலாக மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று கிளிநொச்சி, கண்ணகைபுரம் மத்தி பகுதிக்கு பயணம் மேற்கொண்ட கட்சியின் அனர்த்த முகாமைத்துவ பிரிவு, கருணை எண்ணம் படைத்த செரண்டிப் சிறுவர் இல்லத்தினரால் வழங்கப்பட்ட பொதிகளை மக்களுக்கு கையளிக்கும் பணியில் ஈடுபட்டது.
இந்த பணியின்போது பா.உறுப்பினர் சி.சிறீதரன், செரண்டிப் சிறுவர் இல்ல இயக்குநர் கந்தசாமி, அவர்தம் பாரியார், இல்லத்தின் இளம் செயற்பாட்டாளர்கள்,  ஏழாலை கலைமகள் விளையாட்டுக்கழகத்தின் உறுப்பினர்கள், நிர்வாகிகள், வடமாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை, கரைச்சி பிரதேச சபை உறுப்பின் தயாபரன், கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் சுப்பையா,
அக்கராயன் பிரதேச தமிழ் தேசிய கூட்டமைப்பின் அமைப்பாளர் கரன், அக்கராயன் பிரதேச கட்சிக்கிளையின் தலைவர் சிறி, மாவட்ட கட்சியின் இளைஞர் அணி செயலாளர் சர்வானந்தா, வடமராட்சி கிழக்கு கட்சியின் அமைப்பாளர் சூரியகாந், கண்ணகைபுரம் மத்தி பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.
http://www.tamilwin.com/show-RUmszCRcKafs7.html
ஜனவரி எட்டு எப்படி முடியும் யார் அறிவார் அச்சோவே!
[ ஞாயிற்றுக்கிழமை, 28 டிசெம்பர் 2014, 12:52.21 PM GMT ] [ வலம்புரி ]
2015 ஜனவரி 8ம் திகதி நெருங்க நெருங்க நெஞ்சிடி வேகமெடுக்கிறது. ஜனவரி 8ம் திகதி நடக்கும் ஜனாதிபதித் தேர்தலின் முடிவு எப்படி அமையுமோ? ஏது நடக்குமோ? என்ற ஏக்கம் பொதுமக்களை ஆட்டிப்படைக்கிறது.
தேர்தலில் யார் வெல்லுவார்? யார் தோற்பார்? என்று அபிப்பிராயம் சொல்லக்கூட முடியாத அளவில் தேர்தல் நிலைமை உள்ளது.
மகிந்த - மைத்திரிக்கிடையேயான கடும் போட்டியில் யார் வென்றாலும் ஒரு குறிப்பிட்ட சிலர் கைது செய்யப்படுவர் என்பது தவிர்க்க முடியாத உண்மை.
அதேநேரம் தேர்தல் வன்முறைகளும், கலவரங்களும் ஏற்படக்கூடிய வாய்ப்புகளும் நிறையவே உண்டு.
தேர்தலைக் குழப்பி விட்டால் என்ன என்று நினைப்போரும் உளர்.
எதுவாயினும் பொலிஸ் மற்றும் படைத் தரப்பினரின் நேர்மைத் தன்மையிலேயே இலங்கையின் எதிர்கால ஜனநாயகம் தங்கியுள்ளதென்பது மறுக்க முடியாத உண்மை.
ஒழுங்கான தேர்தலை நடத்த வேண்டுமென தேர்தல் ஆணையாளர் விரும்பினாலும் அந்த ஒழுங்கை, சட்டத்தை நிலைநாட்ட வேண்டிய பொறுப்பு பொலிஸாரைச் சார்ந்ததாகும்.
ஆக, பொலிஸார் பக்கம் சார்பவர்களாக இருந்தால் இலங்கையில் ஜனநாயகம் என்பது வேரறுந்து போகும்.
எனவே, பொலிஸாரினதும் படைத்தரப்பினதும் கைகளில் நாட்டின் ஜனநாயகம் இப்போது உள்ளது என்று கூறலாம்.
இந்த நாட்டில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையின் விளைவு ஜனநாயகத்திற்கு ஆபத்தானதென்ற உண்மையை இப்போதாவது தென்பகுதி மக்கள் உணர்வார்களா? என்பது கேள்விக்குரியது.
எதுவாயினும் நடைபெறப் போகும் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்தவா? மைத்திரியா? வெல்வார்கள் என்று பட்டிமன்றம் நடத்துவது தேவையற்றது.
நம்மைப் பொறுத்தவரை ஜனவரி 8ம் திகதி தேர்தல் முடிந்த கையோடு அறிவிக்கப்படும் தேர்தல் முடிவுகளின்படி தோற்றுப் போனவர்களைப் பாதுகாப்பது அல்லது தேர்தல் முடிவுக்குப் பின்னர் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படும் கலவரங்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் யார் நடவடிக்கை எடுப்பது என்பதே இப்போதிருக்கக்கூடிய ஏக்கமாகும்.
அதாவது ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன தோற்றால் நிலைமை எப்படியாக இருக்கும் என்று ஒரு கணம் கற்பனை செய்து பாருங்கள்.
அந்தக் கற்பனையில் உங்களுக்குக் காட்சியாகத் தெரியக்கூடியவற்றைப் பட்டியலிடுங்கள்.
மாறாக தேர்தலில் மகிந்த ராஜபக்­ச  தோற்று விட்டார் என்று கற்பனை செய்யுங்கள். இந்தக் கற்பனையில் உங்கள் மனக்கண் தெரியும் காட்சிகளை வரிசைப்படுத்துங்கள்.
இந்த இரண்டு கற்பனைகளும் ஒரு சுமுகமான முடிவாக, காட்சிகளாக நிச்சயம் இருக்காது என்று அடித்துக்கூறலாம்.
கற்பனையில் மிக மோசமான சம்பவங்கள் தென்படுகின்றன. எனவே, இங்கு கற்பனைகள் எதிர்வு கூறல்களாக மாற்றப்படக் கூடியவை என்பதால், ஒழுங்கான முறையில் தேர்தல் நடைபெறுவதை தேர்தல் திணைக்களமும் தேர்தலைக் கண்காணிக்கும் அமைப்புகளும் முன்கூட்டியே உறுதி செய்ய வேண்டும்.
பொலிஸாருக்கும் படைத்தரப்புக்கும் கட்டளை பிறப்பிக்கும் அதிகாரம் குறித்து சீரமைப்புச் செய்வதும் இங்கு அவசியமான விடயமாகும்.
பொதுவில் சோதிடத்தில் எட்டாம் நம்பர் சிக்கலானது என்று கருதப்படுவதுண்டு. ஜனாதிபதித் தேர்தலும் எட்டாந் திகதியில் (8-ம் நம்பர்) நடத்தப்படுவதால் என்ன? நடக்கும் என்பதை யார் அறிவார் அச்சோவே.
http://www.tamilwin.com/show-RUmszCRcKafty.html

Geen opmerkingen:

Een reactie posten