தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 27 december 2014

போர்க்குற்றம் தொடர்பில் உள்நாட்டு ரீதியான விசாரணை செய்வது பொருத்தமானது: விக்ரமபாகு

1.44 கோடி ரூபா பெறுமதியான கஞ்சாவை கடத்த முயன்ற இலங்கையர்கள் கைது
[ வெள்ளிக்கிழமை, 26 டிசெம்பர் 2014, 04:25.40 PM GMT ]
1.44 கோடி இந்திய ரூபா பெறுமதியான கஞ்சாவை இலங்கைக்கு கடத்த முயன்ற இரண்டு இலங்கையர்கள் உட்பட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகம் தங்கச்சிமடத்தில் இருந்து கடத்தப்படவிருந்த கஞ்சா தொகையே கைப்பற்றப்பட்டதுடன் மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர்.
தலைமன்னார் மற்றும் கொழும்பை சேர்ந்தவர்களும் தமிழகத்தை சேர்ந்த ஒருவரும் இதில் அடங்குகின்றனர்.
தகவல் ஒன்றின் அடிப்படையிலேயே இந்த கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டது.
இதேவேளை கடல்குதிரை உட்பட்ட கடல் உயிரினங்களை இலங்கைக்கு கடத்தமுயன்ற இலங்கையர் ஒருவர் மற்றும் ஒரு சந்தர்ப்பத்தில் திருச்சிராபள்ளியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCRaKags0.html
ஜோதிடமும் பதவி ஆசையுமே மகிந்த தேர்தல் நடத்தக் காரணம்: சிறிதுங்க ஜயசூரிய
[ வெள்ளிக்கிழமை, 26 டிசெம்பர் 2014, 04:36.20 PM GMT ]
இம்முறை நடைபெறவுள்ள ஐனாதிபதித் தேர்தலானது சென்ற முறையையும் விட மாறுபட்டதாகவே இருக்கின்றது. ஜனாதிபதி அவசரமாக தேர்தலை நடத்துவதன் அவசியம் ஜோதிடத்தின் மீதுள்ள நம்பிக்கையும் பதவி ஆசையுமே என்கிறார் ஐக்கிய சோசலிசக் கட்சியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான சிறிதுங்க ஜயசூரிய.
ஐக்கிய சோசலிசக் கட்சியின் ஏற்பாட்டில் யாழ் பிரதான வீதியிலுள்ள பஸ்ரியான் ஹோட்டலில் நேற்று மாலை நடாத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே சிறிதுங்க ஜயசூரிய மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவித்ததாவது,
வடக்கு, கிழக்கு, மலையகம் தென்பகுதி என நாட்டின் அனைத்துப் பகுதிகளிலுமுள்ள மக்கள் ஐனாதிபதி மகிந்த ராஜபக்ஷவைத் தோற்கடிக்கும் எண்ணத்துடனும் இத் தேர்தலுடன் மகிந்தவை வீட்டுக்கு அனுப்ப வேண்டுமென்ற கோசத்துடனுமே உள்ளனர்.
ஆனால் மகிந்தவைத் தோற்கடிக்கும் அதே நேரம் அதற்கு மாற்றீடாக பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனாவை ஆதரிப்பதென்பதையும் ஏற்றுக் கொள்ள முடியாது.
கடந்த 1994 ஆம் ஆண்டும் இதே போன்றதான கொடுங்கோல் ஆட்சி நடைபெற்று வந்த நிலையிலையே மாற்றம் ஏற்பட்டு மக்களுக்கு விடிவு வேண்டுமென்று ஐனாதிபதியாக சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவு செய்யப்பட்டார்.
ஆனால் சந்திரிக்கா வந்தும் எந்தவித விடிவும் கிடைக்கவில்லை.இதே போன்று தான் மகிந்த தோல்வியுற்று மைத்திரிபால வந்தாலும் எந்த விடிவும் கிடைக்கப் போவதில்லை.
ஆகவே தமிழ் மக்கள் சிந்தித்துச் செயற்பட வேண்டும். இதற்கு மேற்படி இரண்டு பிரதான வேட்பாளர்களுக்கும் 50 வீதமான வாக்குகளை அளிக்காமல் விடுவதே காலத்தின் தேவையாகும்.
இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் 50 வீதத்திற்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
இந்த நிலையில் மேற்படி இரண்டு பிராதான வேட்பாளர்களையும் நிராகரித்து 50 வீதமான வாக்குககள் கிடைக்காமல் தமிழ், முஸ்லிம், மலையக மக்களினது வலுவினை தெரியப்படுத்துவோம் என்றார் சிறிதுங்க ஐயசூரிய.
இந்த முறை நடைபெறவுள்ள ஐனாதிபதித் தேர்தலானது சென்ற முறையையும் விட மாறுபட்டதாகவே இருக்கின்றது. இத்தேர்தலை நாங்களோ ஏன் எந்தப் பிரiஐயும் கோரவில்லை.
இத்தேர்தல் நடத்துவதற்கு இன்னும் 2 வருடங்கள் இருக்கின்ற நிலையில் அவசரப்பட்டு ஐனாதிபதி நடத்துவதன் அவசியம் என்னவென்றால் ஜோதிடத்தின் மீதுள்ள நம்பிக்கையும் பதவி ஆசையுமே என்றார்.
அதாவது தேர்தல் ஐனவரி 8ம் திகதி நடைபெற்றால் மகிந்த வெல்லுவார் என்று ஜோதிடத்தில் கூறியிருப்பதால் அவரின் வேண்டுகோளுக்கு அமைய தேர்தல் அவசரப்பட்டு நடாத்தப்படுகிறது.
ஆனால் ஜோதிடம் சொல்வது பொய் என்பதுடன் மகிந்தவின் தோல்வியும் உறுதியாகவே தெரிகிறது. அந்த நாள் ஊடகவியியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்ட கறுப்பு நாளாகும்.
ஆகவே அன்றைய நாள் மகிந்தவிற்கும் மறைவு நாளாக அமையலாம். தற்போதுள்ள தேர்தல் நிலைமைகளைப் பார்க்கும் போது தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் இங்கு கலவரங்கள் ஏற்படலாம் என்ற நிலையே உள்ளது.
அதாவது பலவிதமான அடக்குமுறைகள் மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக பொத்துவில் பிரதேசத்தில் என்னுடைய கட்சிக் கூட்டத்தையும் குழப்புவதற்கு முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர்.
இவ்வாறு அடக்குமறைகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் தொடர்ந்தும் வாழ்வதனை மக்கள் விரும்பவில்லை. இதனாலேயே மகிந்த ஆட்சியை ஒழித்து மகிந்தவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று மக்கள் தீர்மானித்திருக்கின்றனர்.
ஆனால் அதிலும் பிரச்சினை இருக்கின்றது. மகிந்தவை வீட்டுக்கு அனுப்பி யாரை ஆதரிப்பது என்ற கேள்வியும் எழுகிறது.கடந்த 1994 ஆம் ஆண்டு அட்டுழியங்கள் நிறைந்த ஆட்சி நடைபெற்று வந்த போது அந்த ஆட்சியை ஒழிக்க வேண்டுமென கோரி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்காவை ஜனாதிபதியாக்கினர்.
ஆனால் அவர் வந்தும் எந்தவித மாற்றமும் ஏற்படாமல் குறிப்பாக சமாதானமோ அல்லது இனப்பிரச்சினைக்கான தீர்வோ எவையும் ஏற்படுத்தப்படவில்லை.
அதே போன்று தான் எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவையும் அமர்த்தி எமக்கு ஏதுமே கிடைக்கப் போவதில்லை.
இந்த இருவருக்கும் எந்தவித வித்தியாசமும் இல்லை. ஏனெனில் மகிந்த மீண்டும் பதவிக்கு வந்து செய்வாரென நம்பவும் முடியாது.
மைத்திரி தன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூட தமிழ் மக்கள் பிரச்சினைகள் தீர்க்கும் திட்டம் தொடர்பில் ஏதுமே தெரிவிக்கவில்லை. ஆனாலும் மகிந்த ராஜபக்சவை வீட்டுக்கு அனுப்பியே ஆக வேண்டும்.
ஆனாலும் சந்தரிக்காவை கொண்டு வந்து ஏமாந்தது போல் மைத்திரியையும் கொண்டு வந்து ஏமாறக் கூடாது. ஆகவே தமிழ் சிந்தித்து வாக்களிக்க வேண்டுமெனக் கோருகின்றேன்.
மகிந்த- மைத்திரி இந்த 2 பேருடைய போட்டியும் பெரும்பான்மை சிங்கள மக்களை மையப்படுத்தியே மேற்கொள்ளப்படுவதை காணமுடிகிறது.
இதனையே கடந்த கடந்த 2005 ஆம் ஆண்டு ஐனாதிபதித் தேர்தலில் தமிழிழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் கூறியிருந்தார் இத் தேர்தலானது எங்களுக்கான போட்டி அல்ல.
தென்பகுதியில் நடக்கும் போட்டி. ஆகவே தமிழ் மக்கள் நாங்கள் இதிலிருந்து விலகுவோம் என்றார். ஆனால் அவ்வாறு பிரபாகரன் கூறியது சரி ஆனால் செய்தது தவறு.
ஆகவே நாம் இதனைச் சரியாகப் பயன்படுத்தி குறித்த 2 பேரையும் ஆட்டங்காணச் செய்து தமிழ் முஸ்லிம் மலையகம் ஏன் தென்பகுதி மக்களையும் இணைத்து எமது பலத்தைக் காண்பிப்போம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszCRaKags1.html
'மஹிந்தவுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் இராணுவம்'
[ வெள்ளிக்கிழமை, 26 டிசெம்பர் 2014, 11:03.48 PM GMT ] [ பி.பி.சி ]
மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக இலங்கை இராணுவம் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதாக டிரான்ஸ்பரன்ஸி இண்டர்நாஷனல் என்ற தன்னார்வ அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் படத்துடனான சில கடிதங்கள் இராணுவத்தினால், இராணுவ சிப்பாய்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் அனுப்பப்பட்டதாக அது குற்றஞ்சாட்டியுள்ளது.
ஆனால், அதனை மறுத்துள்ள இராணுவத்தினர், அவை வருடாந்தம் வழமையாக அனுப்பப்படும் சாதாரண வாழ்த்துச் செய்திகளே என்று கூறியுள்ளனர்.
இது தொடர்பாக டிரான்ஸ்பரன்ஸி இண்டர்நாஷனல் அமைப்பின் சார்பிலான ஷான் வீரதுங்க அவர்களை கேட்டபோது, இப்படியான ஆயிரக்கணக்கான கடிதங்கள் தபால் திணைக்களத்தின் மூலம் அனுப்பப்பட்டதாக தமக்கு தகவல் கிடைத்ததாக கூறினார்.
கடந்த சில வாரங்களாகவே இலங்கை இராணுவத்தினர் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு ஆதரவான தேர்தல் பிரச்சாரங்களுக்கு பயன்படுத்தப்பட்டதை தாங்கள் அவதானித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
அந்த கடிதங்களில் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் படங்களுடன், கடந்த பத்து வருடங்களாக செய்த சாதனைகள் குறித்து சிங்களத்தில் எழுதப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார். அவை தேர்தல் விதிகளுக்கு முரணானவை என்றார் அவர்.
அவை வெறுமனே வருடாந்தம் இராணுவத்தினரின் குடும்பங்களுக்கு அனுப்பப்படும் சாதாரண வாழ்த்து துண்டுப் பிரசுரங்கள் என்று இராணுவம் கூறுவதையும் அவர் நிராகரித்தார்.
இது தொடர்பாக தேர்தல் ஆணையரிடம் தாங்களும் பவ்ரல் தேர்தல் கண்காணிப்பு அமைப்பும் முறைப்பாடு செய்திருந்ததாகவும், அவரும் இவை வெறுமனே வாழ்த்துச் செய்திகள் அல்ல என்பதை புரிந்துகொண்டார் என்றும் குறிப்பிட்ட ஷான் வீரதுங்க, அந்த கடிதங்கள் விநியோகிக்கப்படுவதை நிறுத்துமாறு தபால் மா அதிபருக்கு தேர்தல் ஆணையர் உத்தரவிட்டதாகவும் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszCRaKags2.html
என்னைக் கொலை செய்ய காத்திருக்கின்றார்கள்: ஹிருணிகா
[ சனிக்கிழமை, 27 டிசெம்பர் 2014, 12:31.36 AM GMT ]
தம்மைக் கொலை செய்ய காத்திருப்பதாக மேல் மாகாணசபை உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.
எனது தந்தையின் உடலுக்குள் 43 துப்பாக்கி தோட்டாக்கள் துளைக்கப்பட்டிருந்தன.
போதைப் பொருள் வர்த்தகர்கள் இன்று நாட்டில் சுதந்திரமாக உலவித் திரிகின்றனர்.  எனது எதிரிகள் என் மீது அசிட் வீசவும் கொலை செய்யவும் காத்திருக்கின்றார்கள்.
எனது தந்தையின் மரணம் தொடர்பில் நியாயம் கோரி நிற்பதே இதற்கான காரணமாகும்.
தந்தையின் உடல் தீயில் சங்கமித்த தினத்தில் ஜனாதிபதி எனக்கு தொலைபேசி மூலம் நாட்டில் கிளர்ச்சி ஏற்படும் வகையில் நடந்து கொள்ள வேண்டாம் என கோருகின்றார். நீர் ஓர் பெண் பிள்ளை தானே என கேட்டார்.
தந்தையின் கொலை குறித்த வழக்கு விசாரணைக்கு செல்லும் போது அம்மாவிற்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தி, என்னை வழக்கு விசாரணைக்கு செல்ல வேண்டாம் என ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
எனது தந்தையின் மரணம் தொடர்பில் நியாயம் கிடைக்க வேண்டும் என்பதே எனது கோரிக்கையாகும்.
ஜனாதிபதியின் மகனுக்கு ஒரு நீதியும், பாரத லக்ஸ்மன் பிரேமசந்திரவின் மகளுக்கு ஒரு நீதியும், கிராமத்தில் உள்ள பெற்றோரின் பிள்ளைகளுக்கு ஒரு நீதியும் இருக்க முடியாது.
அதற்காகவே நாம் நாட்டில் மைத்திரி ஆட்சி நிறுவப்பட வேண்டுமென கோருகின்றோம் என ஹிருணிகா பிரேமசந்திர அண்மையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCRbKags3.html
ஜனாதிபதி மஹிந்தவிற்கு ஓய்வு வழங்கப்பட வேண்டும்: ரணில்
[ சனிக்கிழமை, 27 டிசெம்பர் 2014, 12:36.49 AM GMT ]
ஜனாதிபதி மஹிந்தவிற்கு ஓய்வு பெற்றுக் கொடுக்கப்பட வேண்டியது அவசியமாகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எனது நல்ல நண்பர், கடந்த எட்டு ஆண்டுகளாக அவர் கடமையாற்றியுள்ளார். அவரை ஓய்வூறுத்தி அதிக வேலைப்பளுவிலிருந்து விடுவிக்க வேண்டிய பொறுப்பு என்னைச்சாரும்.
அமைச்சரவையில் 70 பேர் அங்கம் வகிக்கின்றனர். நாடாளுமன்ற அதிகாரங்களும் வலுவிழக்கச் செய்யப்பட்டுள்ளது.
எல்லா இடங்களிலும் ராஜபக்ச அதிகாரம் பரவியுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் பொதுச் செயலாளரும் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
ஒருவர் ராஜபக்ச அரசாங்கத்தையும் மற்றுமொருவர் மக்களையும் பிரதிநிதித்துவம் செய்து போட்டியிடுகின்றனர்.
ராஜபக்ச அரசாங்கத்தின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் பத்து பக்கங்கள் செய்தவை பற்றியும், 100 பக்கங்களில் செய்யப் போவது பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ராஜபக்ச அரசாங்கம் தேர்தல் விஞ்ஞாபனம் ஒன்றை வெளியிடாது, சுய விமர்சனம் ஒன்றையே செய்துள்ளது.
நாட்டில் தொழில் வாய்ப்பு இல்லையாம், போதைப் பொருள் பயன்பாடு தலைவிரித்தாடுகின்றதாம்.
அதுசரி இந்த நாட்டை கடந்த எட்டு ஆண்டுகள் யார் ஆட்சி செய்தார்கள்? நாமா அல்லது ராஜபக்ஸ குடும்பத்தினரா?
இளைஞர் யுவதிகள் ரிலோட் ஒன்றை போடக் கூட பணம் இல்லாமல் இருக்கின்றார்கள்.
உடுப்பு வாங்கவோ அல்லது காலணிகளை வாங்கவோ பணம் இல்லை.
நாம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டால் பத்து லட்சம் தொழில் வாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுப்போம்.
ராஜபக்ச ஆட்சியாளர்களை விரட்டியடிக்கவும், நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்தவும் மக்கள் மைத்திரிபால சிறிசேனவிற்கு வாக்களிக்க வேண்டுமென ரணில் விக்ரமசிங்க கோரியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCRbKags4.html
ஜே.வி.பி யாருடனும் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதில்லை: லால்காந்த
[ சனிக்கிழமை, 27 டிசெம்பர் 2014, 12:55.23 AM GMT ]
ஜே.வி.பி கட்சி யாருடனும் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதில்லை என கட்சியின் மேல் மாகாணசபை உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவுடன் இரசிய பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை.
அரசியல் ரீதியான முக்கியத்துவம் இருந்தால், நாம் எந்தத் தரப்புடனும் பேச்சுவார்த்தை நடத்துவோம். எனினும் இரகசியமாக அல்ல.
பகிரங்கமான முறையில் மக்களுக்கு தெரியப்படுத்தியே பேச்சுவார்த்தை நடத்துவோம்.
எந்தத் தரப்பினருடனும் இரகசியமான பேச்சுவார்த்தைகள் நடத்தியது கிடையாது என கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.
சந்திரிக்காவுடன் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தப்படுகின்றதா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது லால்காந்த அண்மையில் இதனைத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCRbKags5.html
போர்க்குற்றம் தொடர்பில் உள்நாட்டு ரீதியான விசாரணை செய்வது பொருத்தமானது: விக்ரமபாகு
[ சனிக்கிழமை, 27 டிசெம்பர் 2014, 12:59.33 AM GMT ]
போர்க்குற்றச் செயல் தொடர்பில் உள்நாட்டு ரீதியான விசாரணை நடத்துவது பொருத்தமானது என புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் டொக்டர் விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் அரசாங்கப் பிரதிநிதிகளை ஹேக் நீதிமன்றிற்கு அழைத்து சென்று விசாரணை நடத்த உள்ளதாக அரசாங்கம் குற்றம் சுமத்துகின்றது.
பின்னர் இலங்கையில் உள்நாட்டு ரீதியான விசாரணை நடத்தப்பட உள்ளதாக கூறுகின்றது.
உள்நாட்டு ரீதியில் போர்க் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவது பொருத்தமானதல்லவா?
காலணித்துவ ஆட்சியாளர் உலகிற்கு சென்று உள்நாட்டு பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டிய அவசியமில்லை.
போர்ச் சூழலில் போர்க் குற்றச் செயல்கள் இடம்பெற்றிருந்தால் உள்நாட்டு ரீதியில் ஆணைக்குழு அமைத்து விசாரணை செய்வதில் தவறில்லை. சர்வதேச ரீதியில் விசாரணை நடத்த வேண்டிய அவசியமில்லை.
போர்க்குற்றச் செயல் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களுக்கு உள்நாட்டு ரீதியான விசாரணைகளே மிகச் சிறந்த பதிலாக அமையும் என்பதே எனது நிலைப்பாடு என விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.
போர்க் குற்றச் செயல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உள்நாட்டு ரீதியான விசாரணை நடத்தப்படும் என பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இந்திய ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டமை விக்ரமபாகு கருணாரட்னவிடம் கொழும்பு ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCRbKags6.html

Geen opmerkingen:

Een reactie posten