தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 27 december 2014

யாழில் தேர்தலை இலக்கு வைத்து இலஞ்சம் வழங்கும் சமூர்த்தி வங்கிகள்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முழு ஆதரவும் மஹிந்தவுக்கு?
[ சனிக்கிழமை, 27 டிசெம்பர் 2014, 11:13.49 AM GMT ]
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கே ஆதரவளிக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன
கட்சி தரப்புக்களை கோடிட்டு இலங்கையின் இணையத்தளம் ஒன்று இதனை தெரிவித்துள்ளது. இன்று மாலை 5மணிக்கு கட்சியின் உயர் அரசியல்பீடம் கூடுகிறது
இதன்போது இந்த வாரத்தின் முதல் பகுதியில் கட்சி கொள்கையாக எடுத்திருந்த மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவிக்கும் முடிவை கட்சியின் உயர்பீடம் யூடேன் என்ற அடிப்படையில் மாற்றிவிடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஆங்கில இணைத்தளத்தின் தகவல்படி இந்த யூடேன் 180பாகையாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது கட்சியின் உயர்பீடம் இன்று எடுக்கும் தீர்மானம் 90வீதம் மஹிந்தவுக்கு ஆதரவாக இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
48 மணித்தியாலங்களுக்கு முன்னர் அரசாங்கத்தில் இருந்து வெளியேறும் நிலைப்பாட்டை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எடுத்திருந்தபோதும் அலரிமாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் அமைச்சர் பெசில் ராஜபக்ச ஆகியோருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கீழ்மட்ட பிரதிநிதிகள் அரசாங்கத்தில் இருந்து விலகி அல்லது சுயாதீனமாக மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்க முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
http://www.tamilwin.com/show-RUmszCRbKagw2.html
கிளிநொச்சி பொன்னகரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுவிஸ் எழுகை அமைப்பு உதவி
[ சனிக்கிழமை, 27 டிசெம்பர் 2014, 11:42.14 AM GMT ]
கிளிநொச்சி பொன்னகர் கிராமம் வெள்ளத்தால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இந்த கிராமத்துக்கு செல்லும் வீதிகளும் கிராமத்தின் உள்வீதிகளும் மிகவும் அரிப்புண்ட நிலையில் பெரும் பள்ளங்களும் குழிகளுமாக காட்சி தருகின்றது.
பொன்னகர் கிராமத்தில் இருந்து பல்வேறு தேவைகளுக்காக வெளியே செல்வோரும் உள்ளே  வருவோரும் சேறுசகதியில் சிக்குண்டு பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
வெள்ளத்தின் பல்வேறு பாதிப்புக்கு உள்ளான இந்த கிராமத்து மக்களுக்கு பா.உறுப்பினர் சி.சிறீதரனின் வேண்டுகோளுக்கு இணங்க இன்று சுவிஸ் எழுகை அமைப்பு இருநூற்று ஐம்பதுக்கு மேற்பட்ட உலர் உணவு பொதிகளை வழங்கியுதவியுள்ளது.
இந்த நிகழ்வு இன்று பொன்னகர் மத்தி மாதர் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் தலைமையில் இடம்பெற்றது.
இதில் பா.உறுப்பினர் சி.சிறீதரன், கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் குமாரசிங்கம், பொன்னகர் மத்தி கிராம அபிவிருத்தி சங்க தலைவர் பொன்ராசா, பா.உறுப்பினர் சி.சிறீதரனின் செயலாளரும் தமிழ் தேசிய கூட்மைப்பின் கிளிநொச்சி மாவட்டத்தின் உபதலைவருமான பொன்.காந்தன், கிராம அவிருத்தி சங்க செயலாளர், மாதர் கிராம அவிருத்தி சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு மக்களுக்காக உலர் உணவுப் பொதிகளை வழங்கும் பணியில் ஈடுபட்டனர்.
அத்துடன் பொன்னகர் வீதிகளின் நிலைமைகள் தொடர்பாக மக்களின் கருத்துக்களை கேட்டறிந்த பா.உறுப்பினர் சி.சிறீதரன், அதற்கு விரைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு தருவதாக உறுதி அளித்துள்ளார்.

யாழில் தேர்தலை இலக்கு வைத்து இலஞ்சம் வழங்கும் சமூர்த்தி வங்கிகள்
[ சனிக்கிழமை, 27 டிசெம்பர் 2014, 11:20.53 AM GMT ]
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை மையமாகக் கொண்டு யாழ்.மாவட்டத்தில் சமூர்த்தி வங்கிகளின் ஊடாக பணம் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் குறித்த திட்டத்தின் மூலம் அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்களுக்கு வாக்குகளுக்கான பணம் இலஞ்சம் கொடுக்கப்படுகின்றது.
யாழ்.மாவட்டத்தில் வாழ்வாதாரரீதியாக பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களின் மேம்பாட்டிற்காக உலர் உணவுப் பொருட்கள் மற்றும் வங்கிக் கடன்கள் சமுர்த்தி சங்கங்கள் ஊடாக வழங்கப்பட்டு வரும் நிலையில், தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னான கடந்த சில தினங்களாக குறித்த வங்கிகள் ஊடாக குடும்பத்தில் ஒருவருக்கு 2500 ரூபா பணம் வழங்கப்படுகின்றது.
குறித்த பணம் வாழ்வாதாரரீதியாக பாதிக்கப்பட்டுள்ள அனைத்துக் குடும்பங்களுக்கும் வழங்கப்படவில்லை. மாறாக ஈ.பி.டி.பி மற்றும் சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்களுக்கே இவ்வாறு வழங்கப்பட்டு வருகிறது.
மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வாகனங்களில் வரும் சிலரும் குறித்த நிதியை பெறுகின்றனர்.
குறிப்பாக இந்த பணக்கொடுப்பனவு ஒழுங்கமைக்கப்பட்ட திட்டத்தின் ஊடாக வழங்கப்படவில்லை என்பதுடன் எழுந்தமானமாக வழங்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதியை மறந்து விடாதீர்கள் என கூறியே வங்கி அதிகாரிகள் குறித்த பணத்தினை வழங்குவதாக தெரிய வருகின்றது. 
http://www.tamilwin.com/show-RUmszCRbKagw3.html

Geen opmerkingen:

Een reactie posten