தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 29 december 2014

வட பகுதி தமிழர்களை இராணுவம் அச்சுறுத்தி வாக்களிக்காமல் செய்தால் முழு தேர்தலும் ரத்தாகும் !

அமைச்சர் ஹக்கீம் திடீர் பல்டி அடித்தார்: மைத்திரி பக்கம் இணைவதாக சற்று முன்னர் அறிவிப்பு

[ Dec 29, 2014 06:20:39 AM | வாசித்தோர் : 2765 ]
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் நீதி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து, ஆளும் கட்சிக்கு வழங்கி வந்த ஆதரவினை வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளார் என சற்று முன்னர் அறியப்படுகிறது. எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிக்கப் போவதாக ஹக்கீம் திடீரென அறிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் 8 பாராளுமன்ற உறுப்பினர்கள், 13 மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் 163 உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் என மொத்தமாக 184 முக்கியஸ்தர்களுடன், ஆளும் கட்சியை விட்டு விலகி எதிர்க்கட்சியுடன் இணைந்து கொண்டுள்ளனர் என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது. இதனால் பெரும்பாலான முஸ்லீம்களது வாக்குகள் இனி மைத்திரிபாலவுக்கே செல்லவுள்ளது என்ற நிலை தோன்றியுள்ளது. மசூதிகளை சிங்கள காடையர்கள் உடைத்தமை தொடர்பில் மகிந்த மீது முஸ்லீம்கள் கடும் அதிருப்த்தியில் உள்ளார்கள். இதனை ரவூப் ஹ்க்கீம் நன்றாக புரிந்துகொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இந்த தீர்மானம், அரசாங்கத்திற்கு பல்வேறு வழிகளில் பெரும் பின்னடைவினை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமே இதுவரை எந்த ஒரு முடிவையும் எட்டாமல், மகிந்தருக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது. யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு கடும் திர்ப்புகள் கிளம்பி வருவதாக ஊர்ஜிதமற்ற செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
http://www.athirvu.com/newsdetail/1735.html

வட பகுதி தமிழர்களை இராணுவம் அச்சுறுத்தி வாக்களிக்காமல் செய்தால் முழு தேர்தலும் ரத்தாகும் !

[ Dec 29, 2014 06:29:44 AM | வாசித்தோர் : 6505 ]
வடபகுதி மக்களை எவராவது அச்சறுத்தி வாக்களிக்காமல் செய்யும் பட்சத்தில், முழு தேர்தலும் இரத்துச்செய்யப்படும் என தேர்தல் ஆணையாளர் தேசப்பிரிய எச்சரித்துள்ளார். அவர் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு தெரிவித்துள்ளதாவது,
இராணுவத்தின் அராஜகம் காரணமாக வடபகுதி மக்கள் தேர்தலை பகிஸ்கரிக்க தயாராகின்றார்கள் என்பது குறித்த எந்த விபரங்களையும் வடமாகாணத்தின் உதவி தேர்தல் ஆணையாளர்கள் இதுவரை எனக்கு தெரியப்படுத்தவில்லை.
இராணுவம் மக்கள் வாக்களிப்பை தடுக்கும் எனவும் நான் கருதவில்லை,எனினும் வடபகுதி நிலைமை தென்பகுதியை விட வித்தியாசமானது என்பது எங்களுக்கு தெரியும். வெளிநாட்டவர்கள் தென்பகுதியில் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். ஆனால் வடக்கில் எனது உத்தியோகத்தர்கள் கூட படையினரிடம் அனுமதிபெறவேண்டும்.
நாட்டின் ஏனைய பகுதிகளை விட அதிகளவான இராணுவ ஆட்சி அங்கு காணப்படுகின்றது. வடபகுதியில் மக்களை யாராவது மிரட்டி அச்சுறுத்தி வாக்களிக்கவிடாமல் செய்துள்ளமை தெரியவந்தால் முழு தேர்தலையும் இரத்துச்செய்துவிடுவேன். என அவர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.athirvu.com/newsdetail/1736.html

Geen opmerkingen:

Een reactie posten