பொது மேடையில் கெட்ட வார்த்தையால் திட்டும் மகிந்த (படம் இணைப்பு) |
25ம் திகதி காலியில் தேர்தல் பிரச்சார மேடையில் உரையாற்ற செல்வதற்கு முன்னர் மகிந்தர், "ட்ரைட் எட்" விளம்பர நிறுவன சம உரிமையாளர் திலித் ஜயவீரவிற்கு அழைப்பெடுத்து கெட்ட வார்த்தைகளால் திட்டியுள்ளதாக அலரிமாளிகை தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீயெல்லாம் நான் தோற்றுவிடுவேன் என்று நினைத்துக் கொண்டா வேலை செய்கிறீர்கள் ? 2010 இல் நீ செய்தது எனக்கு நினைவுள்ளது. மனைவிக்கு கான்சர் என்று சொல்லி வெளிநாடு சென்றுவிட்டாய். நான் வெற்றிபெற்றதும் கென்சர் சரியாகிவிட்டது. நீ இந்த முறையும் இரண்டு பக்கம் சாப்பிடுவதாக அறிகிறேன். எல்லாவற்றிற்கும் நீ மைத்திரியை தான் முன்னிறுத்துவதாக தெரியவருகிறது. ஏன் உனக்கு வெளியில் வந்து எனக்கு வேலை செய்ய முடியாதா ? கடந்தமுறை நீ எங்களிடம் எவ்வளவு உழைத்துக் கொண்டாய் ?
நீ தற்போது இங்கிலாந்தில் முதலீட்டாளர் விசா ஒன்றை எடுத்துக் கொண்டுள்ளாயாம் ? எனக்கு புத்தகம் போட நினைக்க வேண்டாம். உனது அனைத்தும் எனக்குத் தெரியும். சரி அப்படியே போ. ஆனால் நான் வென்றால் நீ இங்கிலாந்திலேயே இருந்துவிடு. என்று மகிந்த திலித் ஜயவீரவை திட்டியுள்ளார்.
மகிந்தரின் தேர்தல் பிரச்சாரத்தில் ஒருபகுதியை செய்து தருவதாக பொறுப்பெடுத்துக் கொண்ட திலித் ஜயவீர, திரைக்கு பின்னால் நின்று அந்த பணிகளை செய்வதை விடுத்து அவற்றை குழப்பிக் கொண்டு இருப்பதாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள முக்கியஸ்த்தர்கள் மகிந்தவுக்கு முறையிட்டதை அடுத்தே அவர் திலித் ஜயவீரவை இவ்வாறு திட்டியுள்ளார் என்று கூறப்படுகிறது.
|
29 Dec 2014
http://lankaroad.net/index.php?subaction=showfull&id=1419850030&archive=&start_from=&ucat=1&
ராஜபக்சே பேட்டியின் எதிரொலி! சென்னையில் நாளிதழ்கள் எாிப்பு! (படங்கள் இணைப்பு) |
இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை மிகக் கொடூரமாகப் படுகொலை செய்த மாபாவி இராஜபக்சே தமிழர்களுக்கு எதிரி அல்ல; தமிழர்களுக்கு எதிராக நான் எதுவும் செய்யவில்லை; இனத்தின் அடிப்படையில் என்னால் பாகுபாடு காட்ட முடியாது. எதிர்க்கட்சிகள் எங்கள் மீது புழுதிவாரித் தூற்றுகின்றன என்று தந்தி தொலைக்காட்சிக்குப் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
இதனை தமிழகத்தில் ஒளிபரப்பக் கூடாது என்று பலர் வற்புறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் மதிமுக காஞ்சி மாவட்ட செயலாளா் சோமு அவா்கள் தலைமையில் தாம்பரம் ரெயில் நிலையம் முன்பு தினத்தந்தி நாளிதழ் எாிக்கும் போராட்டம் நடை பெற்றது.
|
29 Dec 2014 http://lankaroad.net/index.php?subaction=showfull&id=1419850536&archive=&start_from=&ucat=1& |
|
Geen opmerkingen:
Een reactie posten