தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 29 december 2014

புலிகளின் தலைவர்கள் இருப்பது மகிந்தவுடன்!– பாட்டலி சம்பிக்க ரணவக்க



ஜனாதிபதியின் பிரச்சாரக் கூட்டங்களில் சல்மான் கான்! இருநூறு கோடி சன்மானம்
[ திங்கட்கிழமை, 29 டிசெம்பர் 2014, 12:32.57 PM GMT ]
ஜனாதிபதியின் பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக இலங்கைக்கு வருகை தந்துள்ள பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு இருநூறு கோடி அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இன்று காலை கொழும்பை வந்தடைந்த சல்மான் கான் , பிற்பகலில் கொழும்பு பொரளையில் நடைபெற்ற ஜனாதிபதியின் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.
இக்கூட்டத்தில் இலங்கையை பிறப்பிடமாக கொண்ட பாலிவுட் நடிகை ஜாக்குலிண் பெர்ணான்டஸும் கலந்து கொண்டுள்ளார்.
இவரும் இன்று காலை சல்மான் கானுடன் இலங்கை வந்திருந்த நிலையில், இவருக்கு அன்பளிப்பாக நூற்றி இருபத்தி ஐந்து கோடி ரூபா பணம் மற்றும் பெறுமதியான வாகனம் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே எதிர்வரும் நாட்களில் பெரும்பாலும் சமீரா ரெட்டி உள்ளிட்ட இன்னும் பல நடிகைகளும் ஜனாதிபதியின் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் நோக்கில் இலங்கை வரவுள்ளதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்களை தனது பிரச்சார மேடைகளில் ஏற்றுவதன் மூலம் ஆளுங்கட்சியின் பிரச்சாரக் கூட்டங்களுக்கு பெருமளவிலான பொதுமக்களை வரவழைக்க முடியும் என்று அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszCRdKaerz.html
17 வயது சிறுவன் வெட்டிக் கொலை
[ திங்கட்கிழமை, 29 டிசெம்பர் 2014, 12:47.02 PM GMT ]
களனி பிரதேசத்தில் 17 வயது சிறுவன் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இலக்கம் 204/B பியகம வீதி பட்டிய, களனி பகுதியில் இன்று பகல் 1.30 அளவில் இக்கொலை இடம்பெற்றுள்ளது.
இரு குழுக்களுக்கு இடையில் நீண்டகாலம் நிலவிய முரண்பாடே இக்கொலை இடம்பெறக்  காரணமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இச்சம்பவம் குறித்து விசாரணை இடம்பெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszCRdKaer0.html
ஆளும் கட்சியின் மேலும் 5 பேர் மைத்திரியுடன்
[ திங்கட்கிழமை, 29 டிசெம்பர் 2014, 12:52.17 PM GMT ]
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் மேலும் 5 ஆளும் கட்சியின் பிரதேச தலைவர்கள் இணைந்து கொண்டனர்.
தம்புள்ளை மாநகர சபையின் பிரதி மேயர் குசும்சிறி ஆரியதிலக்க மற்றும் மாநகர சபை உறுப்பினர் எச்.எம். ரூபசிங்க ஆகியோர் இன்று மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்து எதிரணியில் இணைந்து கொண்டனர்.
இதனை தவிர வில்கமுவ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் மற்றும் பிரதேச சபையின் உறுப்பினர்கள் இருவர் பொது வேட்பாளருடன் இணைந்து கொண்டனர்.
http://www.tamilwin.com/show-RUmszCRdKaer1.html
மைத்திரிபால அரசியல் குருடன்: விமல் வீரவன்ஸ
[ திங்கட்கிழமை, 29 டிசெம்பர் 2014, 01:08.34 PM GMT ]
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா இரவு விழுந்த குழியில் மைத்திரிபால சிறிசேன பகல் விழுந்து விட்டதாக அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.
ஹங்வெல்லையில் இன்று நடைபெற்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
சரத் பொன்சேகாவுக்கு அரசியல் என்பது என்னவென்று தெரியாது. அவருக்கு இராணுவ நிர்வாகம் பற்றியே தெரியும்.
ஆனால் மைத்திரிபால அரசியல் குருடன். அவர் இரவில் விழுந்த குழியில் இவர் பகலில் விழுந்து விட்டார்.
பொன்சேகாவைவிட மைத்திரிபால சிறிசேன முட்டாள். இவரும் முட்டாள்தான், ஆனால் மைத்திரிபால மிகப் பெரிய முட்டாள்.
2010 ஆம் ஆண்டு ஹக்கீமும் சம்பந்தனும் எங்கு இருந்தனர். அவர்கள் நல்லாட்சியையும் ஜனநாயகத்தையும் கொண்டு வருவதற்காகவே அந்த அணியில் இருந்தனர்? எனவும் விமல் வீரவன்ஸ குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCRdKaer2.html
புலிகளின் தலைவர்கள் இருப்பது மகிந்தவுடன்!– பாட்டலி சம்பிக்க ரணவக்க
[ திங்கட்கிழமை, 29 டிசெம்பர் 2014, 01:56.24 PM GMT ]
மைத்திரிபால சிறிசேனவின் கூட்டணியுடன் பயங்கரவாதிகள் செயற்படுவதாக குற்றம் சுமத்தி, அரசாங்கம் பொய்யான பிரசாரத்தை முன்னெடுத்துள்ளதாக ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
பொது வேட்பாளரின் தேர்தல் நடவடிக்கை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
அரசாங்கம் மைத்திரிபால சிறிசேனவின் கூட்டணியில் பயங்கரவாதிகள் இருப்பதாக பொய்களை கூறி வந்தாலும் உண்மையில் புலிகள் அமைப்பின் தலைவர்கள் மகிந்த ராஜபக்சவுடனேயே இருக்கின்றனர்.
2005ம் ஆண்டு மகிந்த சிந்தனை கொள்கையில் பயங்கரவாதிகளுடன் போரிடப் போவதாக கூறப்படவில்லை. விடுதலைப் புலிகள் அமைப்புடன் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்றே அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன் பிரதிபலனாக அமைச்சர் பசில் ராஜபக்ச எமில் காந்தனுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.
ஜய லங்கா அமைப்பின் கீழ் சுனாமி அனர்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகளை நிர்மாணித்து கொடுக்க கிடைத்த 700 மில்லியன் பணம் பயங்கரவாதிகளுக்கு வழங்கப்பட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
பிரபாகரன் இறந்த பின்னர் 2009ம் ஆண்டு ஜூலை 21ம் திகதி புலிகள் அமைப்பு மீண்டும் ஒருங்கிணைக்கப்படும் என்று வெளியிடப்பட்ட அறிக்கையில் அமைப்பின் புதிய தலைவர்  குமரன் பத்மநாதன் எனக்  குறிப்பிடப்பட்டிருந்தது.
அவர் இலங்கையில் பல கொலைகளை செய்துள்ளார். ஆயுதங்கள், வெடி மருந்துகளை நாட்டுக்குள் கொண்டு வர அவர் பங்களிப்பு செய்தார். அப்படியான குமரன் பத்மநாதன் தற்போது அரசாங்கத்தின் பாதுகாப்பில் இருந்து வருகிறார்.
கிளிநொச்சியில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரசாரப் பணிகளை அவரே முன்னெடுத்து வருகிறார்.
கிழக்கு மாகாணத்தில் பலரை கொலை செய்த, ஊவா, தென் மாகாணங்களில் வன்முறையை ஏற்படுத்திய ராம் மற்றும் நகுலன் ஆகிய பயங்கரவாத தலைல்களை விடுதலை செய்துள்ள அரசாங்கம், மகிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரசாரங்களுக்கு அவர்களை பயன்படுத்தி வருகிறது.
இவர்களை தவிர இரத்தம் தோய்ந்த பயங்கரவாத தலைவர்கள் மகிந்த ராஜபக்சவுடன் இருக்கின்றனர்.
வடக்கில் தேர்தலை புறக்கணிக்க செய்யும் மகிந்த ராஜபக்சவின் திட்டத்தின் மூலம் நாட்டிற்குள் மீண்டும் பயங்கரவாத அழுத்தங்கள் ஏற்படும் ஆபத்து உருவாகியுள்ளது.
நாட்டுக்கு கேடு விளைவித்த நாட்டை அழித்த சகல பயங்கரவாதிகளும் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் எனவும் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர்,
நாட்டில் பயங்கரவாதத்தை மீண்டும் உருவாக்க வேண்டிய தேவை இன்றைய அரசாங்கத்திற்கு உள்ளது.
நாங்கள் முன்னிலை வகித்ததன் காரணமாகவே மனிதாபிமான இராணுவ நடவடிக்கை நோக்கி செல்ல முடிந்தது.
2012ம் ஆண்டு கசினோ ஒழுங்குபடுத்தும் சட்ட மூலத்தின் ஊடாக கசினோ வியாபாரிகளுக்கு தேவையான சூழலை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்தது.
அத்துடன் நாட்டில் போதைப் பொருள் விற்பனை அதிகரித்துள்ளது. போதைப் பொருள் காரணமாக நாட்டில் 20 ஆயிரம் பேர் உயிரிழந்து வருகின்றனர்.
இதனை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்ட போதும் அதற்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இப்படியான வழிகளில் கிடைக்கும் பணத்தை அரசாங்கம் தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்தி வருகிறது எனவும் அத்துரலியே ரத்ன தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCRdKaer3.html

Geen opmerkingen:

Een reactie posten