கஷ்டப்பட்டு லண்டன் மாப்பிள்ளையை கலியாணம் பேசி, ஒரு மாதிரியா மாப்பிள்ளை வீட்டாரை அதிகம் டவுரி வாங்காமல் சம்மதிக்க வைப்பது என்பது பெரியவிடையம் தான். ஆனால் வந்த மாப்பிள்ளையை கோட்டபாய குறிவைத்து பிடித்துவிட்டால் என்ன நடக்கும் ? கட்டநாயக்காவில் சி.ஐ.டி பிடித்துவிட்டால் .... "அட இப்ப நீ என்ன சொல்ல வர்ற்" என்கிறீர்களா ? உண்மைச் சம்பவம் தான் நடந்ததை வாசியுங்கள்.
லண்டனில் இருந்து வந்து இறங்கிய பிளேனில் மாப்பிள்ளை வரவில்லை, என்று பெண் வீட்டார் சற்று பதற்றமாக மாப்பிள்ளை வீட்டாருக்கு டெலிபோன் அடிப்பார்கள். லண்டனில் உள்ள மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள், மேலும் பதறியடிச்சு என்பிள்ளைக்கு என்ன நடந்தது என்று கோபமாக அதட்டுவார்கள் பெண் வீட்டுக்காரரை. இப்படியே மாறி மாறி தொலைபேசி அழைப்பு போய்கொண்டு இருக்கும். சில மணி நேரம் கழித்து, அவனை( அதாவது மாப்பிள்ளையை) சி.ஐ.டி பிடித்துவிட்டார்கள் என்று மாப்பிள்ளை குடும்பம் சொல்லும். அதேபோல என்னை காப்பாற்றுங்கள் மாமி என்று மாப்பிள்ளையும் ஒரு இலங்கை நம்பரில் இருந்து அழைப்பார். ஒரு 10 அல்லது 15 லட்சத்தை ஒரு சிங்கள சி.ஐ.டி யின் வங்கி கணக்கில் போட்டால்(லஞ்சமாக) அவன் என்னை விட்டு விடுவான். ஒன்றுக்கும் யோசிக்கவேண்டா. அப்பா அம்மா லண்டனில் இருந்து உங்களுக்கு காசை அனுப்புவார்கள் என்று மாப்பிள்ளை பரிதாபக் குரலில் கூறுவார்.
இவை அனைத்தும் பரபரப்பாக நடக்கும் அல்லவா ? பெண் வீட்டாரும் கலியாணத்திற்கு என்று சேர்த்துவைத்திருந்த காசை இவர்கள் சொல்லும் அந்த ரகசிய வங்கியில் வைப்பில் இடுகிறார்கள். பின்னர் என்ன நடக்கும் என்று நினைக்கிறீர்கள். மாப்பிள்ளை அப்படியே கம்பி நீட்டி விடுவார். இன்னும் சி.ஐ.டி அவரை விடவில்லை. அவனை 4ம் மாடிக்கு கொண்டுசென்றுவிட்டார்கள். 8ம் மாடிக்கு கொண்டு சென்றுவிட்டார்கள் என்று , லண்டனில் உள்ள செட் -அப் மம்மி டாடி கூறுவார்கள். அத்தோடு காசை அனுப்புகிறோம். என்று சொல்லி பெண் வீட்டாரை சாந்தப்படுத்துவார்கள். அவ்வளவு தான். அந்த காசு பெண் வீட்டாருக்கு கிடைக்கப்போவது இல்லை. அப்படியே திரும்பதி லட்டை எடுத்து கொடுத்துவிட்டு மாப்பிள்ளை எஸ்கேப். இப்படி சில சம்பவங்கள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.
கடைசியாக இப்படி தான் ஒரு மாப்பிள்ளை தன்னை கொழும்பு கட்டநாயக்காவில் சி.ஐ.டி பிடித்துவிட்டார்கள் என்று சொல்லி 10 லட்சத்தை, பெண் வீட்டாரிடம் கறந்துள்ளார். ஆனால் அதே நாள் அவர் டுபாயில் உல்லாசமாக இருந்துள்ளார். பின்னர் அவர் பேஸ் புக்கில் போட்ட படம் ஒன்றை சில வாரங்கள் கழித்து எதேட்சையாக மணப் பெண் பார்த்து அதிர்ந்துபோனார். அட சி.ஐ.டி பிடித்ததாக சொன்ன அதே நாள் அவன் ஸ்டேட்டஸ் அப்டேட் செய்தது மட்டும் அல்ல டுபாயில் ஒரு ஹொட்டலில் இருந்துள்ளான் என்பதும் இவர்களுக்கு பின்னர் தான் தெரிந்துள்ளது. அட லண்டனில் தான் நிறைய காசை உழைக்கலாமே... ஏன் கஷ்டப்படும் பெண் வீட்டாரை இப்படி ஏமாற்றவேண்டும் ? ஆனால் லண்டன் மாப்பிள்ளை தான் வேனும் என்று பேராசை பிடித்து அலையும் பெண் வீட்டாருக்கும் இது ஒரு பாடமாக அமையும் அல்லவா ? என்ன ரெம்ப காஸ்லியான பாடம் ...
http://www.athirvu.com/newsdetail/1564.html
Geen opmerkingen:
Een reactie posten