தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 29 december 2014

தமிழ், முஸ்லிம் கட்சிகளுடன் சேர்ந்து நாட்டை பிரிக்க மைத்திரி சதி! பொதுபல சேனா குற்றச்சாட்டு

ஜனாதிபதிக்கு ஆதரவாக சோதிடப் பத்திரிகை வெளியீடு!
[ திங்கட்கிழமை, 29 டிசெம்பர் 2014, 03:47.21 AM GMT ]
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு லேக் நிறுவனம் விசேட சோதிட இதழ் ஒன்றை வடிவமைத்து வெளியிடவுள்ளது.
லேக் ஹவுஸ் நிறுவனத்தினால் வெளியிடப்படும் செத்மிண எனப்படும் சோதிடப் பத்திரிகையின் ஒரு இதழ் முழுவதுமாக ஜனாதிபதியின் பிரச்சார நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
அரச நிறுவனமான லேக் ஹவுஸ் நிறுவனம் குறித்த பத்திரிகை வாரந்தோறும் வெளியிட்டு வருகின்றது.
இந்நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவார் என்று பல்வேறு சோதிடர்களின் கணிப்புகளை உள்ளடக்கியதாக இந்த குறித்த இதழ் தயாரிக்கப்பட்டு அச்சுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் இந்த பத்திரிகையில் உள்ளடக்கப்பட்டுள்ள சோதிடர்களின் கருத்துக்களில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தோல்வியடைவார் என்ற தோற்றப்பாட்டை உருவாக்கும் கருத்துக்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இதற்கான அனைத்து செலவுகளையும் லேக் ஹவுஸ் நிறுவனம் பொறுப்பேற்றுள்ளதுடன், சுமார் இருபது ஆயிரம் பிரதிகள் வரை குறித்த சோதிட இதழ் அச்சிடப்படவுள்ளது.
இதன் மூலம் அரச வளங்களைப் பயன்படுத்தி ஜனாதிபதிக்கு ஆதரவான முறையில் தேர்தல் சட்டங்களை மீறி லேக் ஹவுஸ் நிறுவனம் செயற்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszCRdKafw3.html
தமிழ், முஸ்லிம் கட்சிகளுடன் சேர்ந்து நாட்டை பிரிக்க மைத்திரி சதி! பொதுபல சேனா குற்றச்சாட்டு
[ திங்கட்கிழமை, 29 டிசெம்பர் 2014, 04:00.29 AM GMT ]
தமிழ், முஸ்லிம் கட்சிகளுடன் சேர்ந்து நாட்டை பிரிக்க மைத்திரி சதி செய்வதாக பொதுபல சேனா அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
மு.கா. அரசிலிருந்து வெளியேறிய நிலையில் பொதுபல சேனாவின் கூட்டம் நேற்று எம்பிலிப்பிட்டியவில் நடைபெற்றது.
இதில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர், வழக்கம் போன்று இனவாத விசம் தொனிக்கும் கடுமையான வார்த்தைகளில் உரையாற்றினார்.
தொடர்ந்தும் உரையாற்றிய ஞானசார தேரர்,
பௌத்தர்களை இழிவுபடுத்திய தௌஹீத் ஜமாஅத் பொது வேட்பாளருடன் சேர்ந்து போட்டோ எடுத்திருக்கிறார்கள். NFGG, PMGGபோன்ற புதிய அமைப்புகள் மைத்திரியுடன் கை கோர்த்துள்ளது. இவ்வமைப்புகள் எல்லாம் வஹாப் வாதிகள், அடிப்படைவதிகள்.
தேசிய ஷுரா சபையின் முன்னால் தலைவர் சட்டத்தரணி சுஹைர் அவர்களும் சமஸ்த லங்கா பெரமுன என்று ஆரம்பித்து மைத்திரியுடன் சென்றுள்ளார்.
இவர்கள் எல்லோரும் வஹாப் வாதிகளுக்கு கீழ் இயங்கும் அடிப்படைவாதிகள். இவர்கள் எல்லோரும் பொது வேட்பாளரின் வெற்றிக்கு மும்முரமாக ஈடுபடுகிறார்கள்.
பொதுபல சேனா இது போன்ற கருத்துக்களை பௌத்தர்களிடம் தூண்டி விட்டு மைத்திரியின் ஆதரவை குறைக்க முற்படுகின்றது.
முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இணைந்திருக்கும் வரையில் அடக்கி வாசிக்க நிர்ப்பந்திக்கப்பட்ட பொதுபல சேனா தற்போது மஹிந்தவை காப்பாற்றுதற்காக நேரடியாக களம் இறங்கியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
http://www.tamilwin.com/show-RUmszCRdKafw4.html

Geen opmerkingen:

Een reactie posten