தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 29 december 2014

எனது கணவரை கொலை செய்ய வேண்டாம்! சோலங்காராச்சியின் மனைவி அரசாங்கத்திடம் கோரிக்கை!



கல்முனையில் திரண்ட மக்கள் வெள்ளம்: மைத்திரிக்கு வரலாறு காணாத ஆதரவு
[ திங்கட்கிழமை, 29 டிசெம்பர் 2014, 10:42.02 AM GMT ]
கல்முனையில் நேற்று இடம்பெற்ற பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் பிரச்சாரக் கூட்டத்தில் வரலாறு காணாத மக்கள் வெள்ளம் திரண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீ்லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கு முன்னதாகவே இக் கூட்டம் தொடர்பான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இந்நிலையில் அரசாங்கத்திலிருந்து வெளியேறிய நிலையில் முஸ்லிம் காங்கிரசின் தலைவர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
இக் கூட்டத்தில் சுமார் 50 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டிருந்ததாக உளவுப் பிரிவினர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கியுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ஆளுந்தரப்பை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. முஸ்லிம் காங்கிரஸ் தனிக்கட்சியாக அம்பாறை மாவட்டத்தில் செல்வாக்குச் செலுத்திய காலத்தில் கூட இவ்வாறான ஒரு மக்கள் வெள்ளம் பொதுக்கூட்டமொன்றுக்கு திரண்டு வந்ததில்லை என்று கூறப்படுகின்றது.
http://www.tamilwin.com/show-RUmszCRdKaeqy.html

எனது கணவரை கொலை செய்ய வேண்டாம்! சோலங்காராச்சியின் மனைவி அரசாங்கத்திடம் கோரிக்கை
[ திங்கட்கிழமை, 29 டிசெம்பர் 2014, 10:42.08 AM GMT ]
எனது கணவரை கொலை செய்ய வேண்டாம் என கொடிகாவத்தை முல்லேரியா பிரதேச சபையின் தலைவர் பிரசன்ன சோலங்காரச்சியின் மனைவி நிவங்கா சோலங்காரச்சி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். 
கொழும்பில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் தற்போது நடைபெற்று வரும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
தயவு செய்து எனது கணவரை கொலை செய்ய வேண்டாம் என அரசாங்கத்திடம் கோருகின்றேன்.
நான் தற்போது ஓர் கர்ப்பிணியாவேன் என அவர் கண்ணீர் மல்க செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் தேர்தலில் போட்டியிட்ட சோலங்காரச்சி, பிரதேச சபையின் தலைவராக கடமையாற்றி வருகின்றார்.
கொலன்னா பிரதேசத்தில் டிபென்டர் ரக வாகனங்கள் சஞ்சரிப்பதாகவும், தம்மை பின்தொடர்வதாகவும் சோலங்காராச்சி அண்மையில் குற்றம் சுமத்தியிருந்தார்.
தம்மை கொலை செய்ய முயற்சிப்பதாக ஏற்கனவே சோலங்காராச்சி முறைப்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszCRdKaeqz.html

Geen opmerkingen:

Een reactie posten