[ செவ்வாய்க்கிழமை, 30 டிசெம்பர் 2014, 11:33.51 PM GMT ]
மாகாண சபை உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் மைத்திரிபாலவின் வெற்றிக்காக கடுமையாக உழைத்து வருகின்றார்.
இதற்காக அவர் கிழக்கு மாகாணத்தின் பல பாகங்களிலும் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றி வருகின்றார்.
இந்நிலையில் நேற்று மாலை கல்முனையில் நடைபெறவிருந்த பிரச்சாரக் கூட்டமொன்றுக்கு அவர் வருகை தருவதாக இருந்த போதிலும், அங்கு கல்லெறித் தாக்குதல் நடைபெறலாம் என்ற தகவல் கிடைத்ததையடுத்து அவர் தனது கல்முனை விஜயத்தை இறுதி நேரத்தில் ரத்துச் செய்திருந்தார்.
http://www.tamilwin.com/show-RUmszCQUKbno5.html
பொலனறுவையில் தேர்தல் கண்காணிப்பாளர்களை அச்சுறுத்திய பொதுபல சேனா
[ செவ்வாய்க்கிழமை, 30 டிசெம்பர் 2014, 11:42.42 PM GMT ]
பொலனறுவை மாவட்டத்தில் ஆளுங்கட்சியின் செல்லப் பிள்ளையான நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் தலைமையிலான காடையர் கும்பல் மாவட்டம் முழுவதும் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது.
இவர்களுடன் பொதுபல சேனா அமைப்பின் பிக்குகளும் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பான ஆதாரங்களை தேர்தல் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள சீ.எம்.ஈ.வி. அமைப்பின் பணியாளர்கள் திரட்டியுள்ளனர்.
எனினும் இது குறித்து தகவல் அறிந்த பொதுபல சேனா அமைப்பின் பிக்குமார்கள் தலைமையிலான குண்டர்கள் தேர்தல் கண்காணிப்பாளர்களை மிரட்டியுள்ளனர்.
அத்துடன் கண்காணிப்பாளர்களின் கமராக்களில் பதிவு செய்யப்பட்டிருந்தவற்றையும் அழித்து விட்டு, அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக சீ.எம்.ஈ.வி. அமைப்பினர் ஊடகங்களுக்கு அறிக்கையொன்றை விடுத்து பொது பல சேனாவினால் தமக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் குறித்து தெரியப்படுத்தியுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszCQUKbno6.html
ராஜபக்சவுக்காக சல்மான் பிரசாரம்! கலைஞர்களுக்கு அவமானம்!- இந்திய கம்யூனிஸக்கட்சி
[ புதன்கிழமை, 31 டிசெம்பர் 2014, 01:16.34 AM GMT ]
இந்திய கம்யூனிஸக்கட்சி இந்தக்குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது.
கலைஞர் என்பவர், மனித உரிமைகள் காக்கின்ற ஒருவராக செயற்படவேண்டும்.
எனினும் போர்க்குற்றச்சாட்டு;க்கு உள்ளாகியுள்ள ஒருவருக்காக சல்மான்கான் பிரசாரம் மேற்கொண்டமையானது, கலைத்துறையினருக்கு அவமான செயலாகும் என்று கம்யூனிஸக் கட்சியின் தேசிய செயலாளர் டி ராஜா குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இந்திய பிரதமரின் சமூக வலைத்தள பொறுப்பாளரும் ராஜபக்சவின் பிரசாரங்களுக்கு உதவுவதாக ராஜா குற்றம் சுமத்தியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCQVKbnpy.html
Geen opmerkingen:
Een reactie posten