தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 30 december 2014

மஹிந்த ராஜபக்சவுக்கு நவ சிஹல உறுமய ஆதரவு

ஆட்சி மாற்றம் தேவையென்ற மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டனர்: செல்வம் எம்.பி
[ செவ்வாய்க்கிழமை, 30 டிசெம்பர் 2014, 11:40.21 AM GMT ]
நாட்டில் தற்போது ஆட்சி மாற்றம் தேவையென்ற மனநிலைக்கு மக்கள் வந்துள்ளனர் என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது நிலைப்பாட்டினை அறிவித்துள்ள நிலையில், இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
எங்களைப் பொறுத்தமட்டில் எந்த வித ஒளிவு மறைவும் இல்லை. வெளிப்படையாகவே ஆதரவைத் தெரிவித்துள்ளோம்.
இலங்கையைப் பொறுத்தமட்டில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இனப்பிரச்சினை சார்ந்து பல விடயங்களை இன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் பேசியும் எதுவும் கைகூடவில்லை.
இந்த நிலையில் ஆட்சி மாற்றம் தேவையென்ற மன நிலைக்கு மக்கள் வந்துள்ளனர் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCQUKaew1.html

சர்வதேசக் கண்காணிப்பாளர்கள் இன்று முதல் தேர்தல் நடவடிக்கைகளைக் கண்காணிப்பர்
[ செவ்வாய்க்கிழமை, 30 டிசெம்பர் 2014, 12:02.12 PM GMT ]
இந்நாட்டின் தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெப்ரல் அமைப்பின் (People's Action for Free and Fair Elections -PAFFREL) அழைப்பின் பேரில் சர்வதேச கண்காணிப்பாளர்கள் 36 பேர் இன்று இலங்கை வந்துள்ளனர். 
எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காகவே இவர்கள் இங்கு வந்துள்ளனர்.
(Asian Elections Monitoring Organization) ஆசிய தேர்தல் கண்காணிப்பாளர்களான இக்குழுவினர், பல உலக நாடுகளில் கண்காணிப்பு நடவடிக்கைளில் ஈடுபட்ட அனுபவசாலிகள் என பெப்ரல் அமைப்பின் நிர்வாக பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி தெரிவித்தார்.
இன்று முதல் இவர்கள் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszCQUKaew2.html
அட்டப்பள்ளம் ஆலயம் உடைப்பு: சிலைகள், விளக்குகள் திருட்டு
[ செவ்வாய்க்கிழமை, 30 டிசெம்பர் 2014, 12:11.11 PM GMT ]
அம்பாறை மாவட்டத்தில் நிந்தவூர் பிரதேசத்திலுள்ள அட்டப்பள்ளம், சிங்காரபுரம் காளி அம்பாள் ஆலயம் நேற்றிரவு உடைக்கப்பட்டுள்ளதாக சம்மாந்துறைப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆலயம் உடைக்கப்பட்டு அங்கிருந்த ஆறு சிலைகள், 8 குத்து விளக்குகளின் மேற்பாகங்கள் மற்றும் தேங்காய் துருவும் இயந்திரம் என்பன திருடப்பட்டுள்ளன.
இவ்விடயம் அறிந்ததும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் உடனடியாக ஸ்தலத்திற்கு விரைந்து ஆலய நிருவாகிகளுடன் கலந்துரையாடியதுடன், சம்மாந்துறைப் பொலிசாருடன் தொடர்பு கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.
ஆலய தலைவர் தம்பிமுத்து கோபாலன் கூறுகையில்,
ஆலய கபடாவின் கூரை வழியாக உள்நுழைந்து பொருட்களைத் திருடிவிட்டு யன்னல் வழியாக வெளியேறியுள்ளனர். திருட்டுப்போன பொருட்களின் தொகை 3 லட்சம் ருபாவாகும். பொலிஸில் முறையிட்டுள்ளேன் என்றார்.
இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.  பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszCQUKaew3.html
ரிசாத் பதியூதீன் நீதிமன்றத்திற்கு கல் எறிந்து நீதிபதிக்கும் ஏசிய செல்லப்பிள்ளை: விமல் வீரவன்ச
[ செவ்வாய்க்கிழமை, 30 டிசெம்பர் 2014, 12:25.49 PM GMT ]
ரிசாத் பதியூதீன் நீதிமன்றத்திற்கு கல் எறிந்து நீதிபதிக்கும் ஏசிய செல்லப்பிள்ளை. புத்தளத்தில் ஒரு மரணத்திலும் அவர் சம்பந்தப்பட்டுள்ளார் என விமல் வீரவன்ச  தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு பத்தரமுல்லை, மாலபே கடுவளையில் பகுதியில் நடைபெற்ற ஜனாதிபதியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்,
ஹக்கீம் - சம்பந்தன் இணைந்து வடகிழக்கை இணைத்து அதில் முஸ்லீம் அரபு வசந்த பிராந்தியத்தை பெற்றுக்கொள்வார்.
டயஸ்போரா மற்றும் வெளிநாட்டு தூதுவர்களது நிகழ்ச்சி நிரலுக்கு ஹக்கீம், சம்பந்தன் இயங்குவார்கள். இவர்கள் மஹிந்த ராஜபக்சவுடன் உடன் இருந்து குழி பறிப்பார்கள் என்று கடந்த 6 மாதங்களுக்கு முன்னரே இந்த நாட்டுக்கும் சொல்லியிருந்தேன்.
அதேபோன்று மைத்திரிபால சிறிசேனா தனது  தனிப்பட்ட செயலாளரை பொலனறுவையில் வைத்து திட்டமிட்டு கொலை செய்த சம்பவம் உள்ளதாகவும் விமல் தெரிவித்தார்.
மைத்திரியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் 13வது சர்த்து, வடக்கில் உள்ள இராணுவம், தேசிய பாதுகாப்பு மற்றும் இந்த நாட்டின் பிரிவினைவாதம், வட கிழக்கு மீள ஒன்றிணைப்பது பற்றி பொலிஸ், காணி அதிகாரம் பற்றி என்ன சொல்லியிருக்கின்றார்.
இந்த கூட்டமைப்பில் உள்ள சம்பிக்க ரணவக்கவும், அத்துரலிய தேரோவும் இந்த நாட்டு பௌத்த மக்களுக்கு என்ன பதில் கூறப்போகின்றார்கள்.
ஆனால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஒருபோதும் இந்த நாட்டில் ஹக்கீமுக்கு ஒரு பிராந்தியம், சம்பந்தனுக்கு ஒரு பிராந்தியம் என இந்த நாட்டை காட்டிக் கொடுக்கவில்லை
அவர் தோல்விபெற்றாலும் சரி. அவர் ஒரு போதும் இந்த நாட்டை பிரிவினைக்கு துணை போகமாட்டார் என தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCQUKaew4.html
ஊழல் அரசியல்வாதிகளிடம் உங்களை விற்க வேண்டாம்! சல்மான்கானிடம் ஐ.தே.கவின் எம்.பி கோரிக்கை
[ செவ்வாய்க்கிழமை, 30 டிசெம்பர் 2014, 01:04.48 PM GMT ]
இலங்கை அரசியல் நடவடிக்கைகளில் இருந்து சல்மான் கான் வெளியேற வேண்டும் என்று நடிகரும் ஐக்கிய தேசியக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சன் ராமநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
இலங்கைக்கு நேற்று விஜயம் செய்த பொலிவுட் நடிகர் சல்மான் கான், ஜனாதிபதியின் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டதுடன், அவரை புகழ்ந்து பேசியுள்ளார்.
ஆனால், சல்மானின் வருகை உள்ளூர் கலைஞர்களுக்கு எதிரானது என்று பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனா கருத்து தெரிவித்தார்.
மேலும் தனக்கு மக்களின் ஆதரவு குறைந்து வருவதைப் பார்த்து பயந்த ராஜபக்ச, பிரபலங்களின் ஆதரவு மூலம் அதை அதிகரிக்க நினைப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இந்நிலையில் நடிகராக இருந்து அரசியலில் பிரவேசம் எடுத்த பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமாநாயகே,
சல்மான் கான் பிரச்சாரம் குறித்து விமர்சனம் செய்துள்ளார். 
அத்துடன், சல்மான், நீங்கள் இலங்கையில் மிகவும் பிரபலமானவர். நான் உங்கள் ரசிகன். தயவு செய்து ஊழல் அரசியல்வாதிகளிடம் உங்களை நீங்கள் விற்க வேண்டாம். தயவு செய்து இந்தியாவிற்குத் திரும்பிப் போய்விடுங்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCQUKaew5.html
இலங்கையின் ஜனாதிபதி அதிசயிக்கத்தக்க மனிதர்: சல்மான்கான்
[ செவ்வாய்க்கிழமை, 30 டிசெம்பர் 2014, 01:28.44 PM GMT ]
இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அதிசயிக்கத்தக்க மனிதர் என்று பொலிவூட் நடிகர் சல்மான் கான் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளிப்பதற்காக வந்த அவர் ஆங்கில இதழுக்கு வழங்கியுள்ள செவ்வி ஒன்றில் நேற்று இலங்கையின் கலைஞர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து அறியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
தாம் மும்பாயில் இருந்து வந்துள்ளமையால் இலங்கையில் என்ன நடக்கிறது என்பதை அறியமுற்படவில்லை என்றும் சல்மான் கான் தெரிவித்துள்ளார்.
தமது விஜயம் அரசியலுடன் தொடர்புடையதல்ல என்று குறிப்பிட்டுள்ள சல்மான்கான் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவே வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்
தாம் சந்தித்த மனிதர்களில் மஹிந்த ராஜபக்ச மிகவும் பணிவான மனிதராகும்.
அத்துடன் மனிதாபிமானமுள்ள மனிதராகும் என்றும் சல்மான் கான் குறிப்பிட்டுள்ளார்
http://www.tamilwin.com/show-RUmszCQUKaew7.html
மஹிந்த ராஜபக்சவுக்கு நவ சிஹல உறுமய ஆதரவு
[ செவ்வாய்க்கிழமை, 30 டிசெம்பர் 2014, 01:57.59 PM GMT ]
நவ சிஹல உறுமய (புதிய சிங்கள பரம்பரை) கட்சியின் தலைவர் சரத் மனமேந்திரா, ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்சவுக்கு தமது ஆதரவை வெளியிட்டுள்ளார்
அவர் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராகவும் போட்டியிடுகிறார்.
இந்தநிலையில் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் உடன்படிக்கையை செய்துள்ளதாக குற்றம் சுமத்தியே அவர் மஹி;ந்த ராஜபக்சவுக்கு ஆதரவை வெளியிட்டுள்ளார்.
வடக்கில் இருந்து 50வீத இராணுவத்தை குறைப்பது, அதியுயர் பாதுகாப்பு வலயங்களை நீக்குவது, 13வது திருத்தத்துக்கு அப்பால் சென்று இனப்பிரச்சினைக்கு தீர்வு காணல் என்ற விடயங்களில் இரண்டு தரப்பும் இரகசிய உடன்படிக்கையை செய்துள்ளதாக மனமேந்திரா குற்றம் சுமத்தியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினரான மனமேந்திரா, 2006ஆம் ஆண்டு தனிக்கட்சியை ஆரம்பித்தார்.
2005ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் அவர் போட்டியிட்டார்.
2010ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் அவர் 0.09வீத வாக்குகளை பெற்றார்.
இந்தநிலையில் மனமேந்திராவின் கட்சிக்கு நாடாளுமன்றத்திலோ, உள்ளூராட்சி சபைகளிலோ ஆசனங்கள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.tamilwin.com/show-RUmszCQUKaexy.html

Geen opmerkingen:

Een reactie posten