தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 29 december 2014

சகோதரரை மைத்திரி அணிக்கு அனுப்பிய அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன

எதிர்வரும் நாட்களிலும் இலங்கையில் கட்சித்தாவல்களை எதிர்பார்க்கலாம்!
[ திங்கட்கிழமை, 29 டிசெம்பர் 2014, 06:45.23 AM GMT ]
எதிர்வரும் நாட்களிலும் கட்சித் தாவல்களை எதிர்பார்க்க முடியும் என கொழும்பு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மிகவும் தீர்மானமிக்க கட்சித் தாவல்கள் சில இந்த வாரத்திலும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆளும் கட்சியைப் பிரதிநிதித்துவம் செய்யும் பிரதி அமைச்சர்கள் எதிர்க்கட்சியில் இணைந்து கொள்ளக் கூடுமென தெரிவிக்கப்படுகிறது.
பிரதி அமைச்சர் பைசர் முஸ்தாவும் இதில் அடங்குவதாகக் குறிப்பிடப்படுகிறது. மாத்தறை மற்றும் பொலனறுவை மாவட்டங்களைச் சேர்ந்த இரண்டு பிரதி அமைச்சர்களும் ஆளும் கட்சியிலிருந்து விலகிக்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆளும் கட்சியிலிருந்து விலகிச் சென்ற முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களை மீளவும் இணைத்துக்கொள்ள முயற்சி எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பிரதேச சபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்களை பிரதிநிதித்துவம் செய்யும் சில உறுப்பினர்களும் ஆளும் கட்சியில் இணைந்து கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmszCRdKafx6.html
ஜே.வி.பி தலைவர்கள் ஆளும் கட்சியில் இணைந்து கொள்ள மாட்டார்கள்: விஜித ஹேரத்
[ திங்கட்கிழமை, 29 டிசெம்பர் 2014, 06:50.36 AM GMT ]
ஜே.வி.பி தலைவர்கள் ஆளும் கட்சியில் இணைந்து கொள்ள மாட்டார்கள் என அக்கட்சியின் பிரச்சாரச் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தோல்வி உறுதியாகியுள்ளது.
இதனால் அரசாங்கம் வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டு தேர்தலில் வெற்றியீட்ட முயற்சிக்கின்றது.
ஜே.வி.பி. தலைவர்கள் ஆளும் கட்சியில் இணைந்து கொள்வதாக அரசாங்கம் பிழையான பிரச்சாரம் செய்து வருகின்றது.
ஜே.வி.பி உறுப்பினர்களை ஆளும் கட்சியில் இணைத்துக் கொள்ள முடியாத காரணத்தினால், கட்சியைவிட்டு நீக்கிய சிலரைக் கொண்டு செய்தியாளர் சந்திப்புக்கள் நடத்தப்படுகின்றன.
ராஜபக்ச அரசாங்கத்தை விரட்டியடிக்கும் பணிகளில் ஜே.வி.பி ஈடுபட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்சவின் தோல்வி உறுதியாகியுள்ளது.
ஏதேனும் ஓர் கள்ள வேலை செய்து தேர்தலில் வெற்றியீட்ட அரசாங்கம் முயற்சிக்கின்றது.
இது தொடர்பில் நாட்டின் சகல மக்களும் அவதானத்துடன் செயற்பட வேண்டியது அவசியமானது என விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற போது நேற்று அவர் தெரிவித்துள்ளார்.'
http://www.tamilwin.com/show-RUmszCRdKafx7.html
மைத்திரியை சந்தித்த பைஸர் முஸ்தபா
[ திங்கட்கிழமை, 29 டிசெம்பர் 2014, 06:51.47 AM GMT ]
முதலீட்டு ஊக்குவிப்பு பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபா இன்று காலை பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார்.
அவர் தனிப்பட்ட ரீதியில் அவரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படம் வெளியாகியுள்ளது.
பொதுபல சேனா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கினால் தான் அரசாங்கத்தில் இருந்து விலகுவதாக முஸ்தபா ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
சிங்கப்பூர் சென்றிருந்த அவர், நாடு திரும்பியுள்ள நிலையில், அரசாங்கத்தில் இருந்து விலகும் முடிவை அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
 http://www.tamilwin.com/show-RUmszCRdKaeoy.html
வெள்ளவத்தையில் பஸ் விபத்து! 10 பேர் காயம்- மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் பலி
[ திங்கட்கிழமை, 29 டிசெம்பர் 2014, 07:11.50 AM GMT ]
வெள்ளவத்தையில் இன்று காலை இடம்பெற்ற பஸ் விபத்தில் 10 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எல்பிட்டியிலிருந்து கொழும்பை நோக்கி பயணித்த சொகுசு பஸ்ஸொன்றே வீதியை விட்டு விலகி, பாதுகாப்பு வேலியில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
சம்பவத்தின் போது பஸ்ஸின் முன்ஆ சனத்தில் அமர்ந்திருந்த எட்டுவயதான சிறுமி பஸ்ஸூக்குள் சிக்கினார்.
இதனையடுத்து அவரை, கொழும்பு தீயணைப்பு படையினர் காப்பாற்றி, வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்
மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் பலி
குருணாகல் மாவட்டம் நாரம்மல, மாதம்பை வீதியின் பாரிகொட பிரதேசத்தில் இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர்.
இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்கள் இருவரும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் 28 வயதுடைய குளியாபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 28 வயதான நபரும், நாரம்பல பிரதேசத்தை சேர்ந்த 31 வயதான நபருமே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்த இருவரில் ஒருவர் குளியாபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மற்றைய நபர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCRdKaeo0.html

சகோதரரை மைத்திரி அணிக்கு அனுப்பிய அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன
[ திங்கட்கிழமை, 29 டிசெம்பர் 2014, 07:11.51 AM GMT ]
துறைமுக அபிவிருத்தி திட்ட அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன தனது மூத்த சகோதரரான லலித் அபேகுணவர்தனவை பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் அணிக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரியவருகிறது.
லலித் அபேகுணவர்தன மைத்திரிபால அணியில் பலமிக்க நபராக அவரது வெற்றிக்காக பாடுபட்டு வருகிறார்.
லலித் அபேகுணவர்தன பிரதியமைச்சர் வீரகுமார திஸாநாயக்கவின் ஆலோசகராக இருந்து வருவதுடன் வீரகுமார மற்றும் ரோஹித்த அபேகுணவர்தன ஆகியோரின் அனுமதியுடனேயே மைத்திரி அணியில் இணைந்துள்ளார்.
பிரதியமைச்சர் வீரகுமார திஸாநாயக்க இது குறித்து தனது தலைவரான அமைச்சர் விமல் வீரவன்ஷவுக்கும் அறிவித்துள்ளார்.
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றால், இந்த அமைச்சர்கள் அனைவரையும் பாதுகாக்கும் நபராக லலித் அபேகுணவர்தன இருப்பார் என கூறப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmszCRdKaeoz.html

Geen opmerkingen:

Een reactie posten