மகிந்த ராஜபக்ஷவுக்கு தேர்தலில் சப்போட் செய்ய இந்தியாவில் இருந்து கொழும்பு வந்த பாலிவுட் நடிகர் சல்மான் கான், நேற்று இரவே நாட்டை விட்டு ஓடிவிட்டதாக அறியப்படுகிறது. இவர் பயணித்த வாகனம் சிறிய விபத்துக்கு உள்ளாகியுள்ளதோடு 2 சிறுவர்களையும் காயப்படுத்தியுள்ளது. இதன்போது சல்மானுக்கு தலையில் லேசாக அடிபட்டும் உள்ளதாம். இதேவேளை மைத்திரியின் ஆதரவாளர்கள் சும்மா இருக்கவில்லை. கீழ் காணும் படத்தை போஸ்டராக அடித்து ஒட்டியுள்ளதோடு, பேஸ் புக்கிலும் உலாவ விட்டுள்ளார்கள். இந்தியாவில் இருந்து சல்மானுக்கு பல அழுத்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளது என்ற செய்திகளும் கூடவே கசிந்துள்ளது.
இதனை எல்லாம் சமாளிக்க முடியாமல் உடனே அவர் கிளம்பிவிட்டாராம். ஆனால் வழி அனுப்ப எவரும் செல்லவில்லை என்றும், கட்டநாயக்க விமான நிலையத்தில் இருந்து அவர் தனியாக புறப்பட்டுச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

Geen opmerkingen:
Een reactie posten