தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 28 december 2014

தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் அதிகாரத்தை இழந்தது அரச தகவல் திணைக்களம்

சேதாரம் இல்லாமல் தப்பி விட்டார் ஹக்கீம்….

இலங்கையில், வரவிருக்கும் ஜனாதிபதிக்கான தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு ஆதரவளிப்பதாக சிறிலங்கா முஸ்லிம்காங்கிரஸ் இன்று அறிவித்துள்ளது.
அது குறித்து பேசிய அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள், நாட்டில் ஒரு நல்லாட்சியை ஏற்படுத்தும் நோக்கிலேயே தமது கட்சி ஏகமனதாக இந்த முடிவை எடுத்ததாகக் கூறினார்.
http://www.jvpnews.com/srilanka/91972.html

ஹக்கீம் – றிசாத் மனம்விட்டு உரையாடினர்…

இன்று இடம் பெற்ற  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீடத்தின் கூட்டத்தினையடுத்து கட்சியின் தேசிய தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள்,தாம் அரசாங்கத்தில் இருந்து விலகி பொது வேட்பாளருடன் இணைந்து கொள்வதாக அறிவித்ததையடுத்து, அகில இலங்கை மக்கள் காங்கிரின் தேசிய தலைவர் றிசாத் பதியுதீன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
சில நிமிடங்கள் இரு கட்சிகளின் தலைவர்களும், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் முழு வீச்சுடன் எஞ்சியிருக்கும் 10 தினங்களை பயன்படுத்துவது தொடர்பிலும் மனம்விட்டு உரையாடியுள்ளனர்.
மன்னாரிலும்,வவுனியாவிலும் எதிர்வரும் 30 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை  இடம் பெறும் பொது வேட்பாளர் கலந்து கொள்ளும் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொள்ளுவதற்கான அழைப்பும் றிசாத் பதியுதீனினால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு இதன் போது விடுக்கப்பட்டது.
இங்கையில் கடந்த சில மாதங்களாக அரசாங்கத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த முன்னால் அமைச்சர் றிசாத் பதியுதீன் இந்த நாட்டு ஒட்டு மொத்த முஸ்லிம்களுக்காக எடுத்த தீர்மானம் தொடர்பிலும்,தமது தீர்மானத்தை அறிவிப்பது தொடர்பிலும் முஸ்லிம் காங்கிரஸ் மதில் மேல் பூனையாக இருந்துவந்தது.
அதே இன்று இந்த தீர்மானம் அறிவிக்கப்பட்டதன் பிற்பாடு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்,மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பன இந்த நாட்டில் புதியதொரு நம்பிக்கையினை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்
http://www.jvpnews.com/srilanka/91975.html

தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் அதிகாரத்தை இழந்தது அரச தகவல் திணைக்களம்

இதுகுறித்து மேலும் தெரிவிக்கையில்,
இதுவரை காலமும் முடிவுகளை அறிவிக்கும் பணி அரச தகவல் திணைக்களத்திடமிருந்து தேர்தல் திணைக்களத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. அரச தகவல் திணைக்களத்தில் அரசியல் ஊடுருவல்கள் மிகுந்துள்ளதாக தேர்தல் திணைக்களத்திற்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.  இவற்றைக் கவனத்தில் கொண்டே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
http://www.jvpnews.com/srilanka/91978.html

Geen opmerkingen:

Een reactie posten